Published:Updated:

வெள்ளத்தின் போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தும் தப்பிக்கலாம்

வெள்ளத்தின் போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தும் தப்பிக்கலாம்
வெள்ளத்தின் போது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தும் தப்பிக்கலாம்

வெள்ளத்திலிருந்து மக்கள் தங்களுடைய பழைய வீட்டு உபயோகப் பொருட்களை வைத்து எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக  விழிப்பு உணர்வு நிகழ்ச்சி திருச்சி  ஸ்ரீரங்கம் மாநகராட்சி், ஆர்.டி.ஓ ராஜேந்திரன், தாசில்தார்கள் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள் ஆகியோர் இணைந்து 8 இடங்களில் இந்த நிகழ்ச்சியை  ஏற்பாடு செய்திருந்தனர்.

வட கிழக்குபருவ மழையில் மிக அதிக மழைபொழிவு ஏற்பட்டால் வெள்ள அபாயம் ஏற்படும். இப்படி வரும் வெள்ள பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீட்டில் உள்ள பழைய பொருட்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என, மக்களுக்கு சொல்லி தரப்பட்ட வழிமுறைகள்:

1. காலி வாட்டர் பாட்டில்:

வீட்டில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பாட்டில்கள், வாட்டல் பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்து நன்றாக 4 அல்லது 5 பாட்டிலை ஒன்றாக கட்டி கொண்டு அவற்றின் மீது நீந்திக் கொண்டு வெள்ளத்தில் இருந்து தப்பிக்கலாம்.

2.வாட்டர்   ட்ரம் ( பெரிய வாட்டர் கேன்):

அலுவலகங்கள்,கடைகளில் பயன்படுத்தும் 25 லிட்டர் கேனையும் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

3.வாழை மரம்:

     வீடுகளில் பெரிய அளவிலான  மரத்தை வளர்க்காவிட்டாலும், வாழை மரத்தை அனைவரும் வளர்ப்பார்கள்,இப்படிப்பட்ட இந்த வாழை மரத்தை நாம் தண்ணீரில் நீந்தி வெள்ளத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

4.கேஸ் சிலிண்டர்:

என்னடா சிலிண்டர் வீடுல சமைக்கதானே பயன்படும். இது எப்படி நம்மல பாதுகாக்கும்னு கேட்குறீங்களா,....ஆமா வீட்டுல இருக்குற காலி சிலிண்டரை தண்ணீருல போட்டா மிதக்கும். இதை உபயோகித்து பெண்கள் தங்களை வெள்ளத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

5 .டயர்:

வாகன பழைய டயர்களை உபயோகித்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

இதுமட்டும் இல்லாமல் மண்ணெண்ணை கேன்,பெட்ரோல் கேன், வீட்டில் உள்ள பழைய டப்பா, வாட்டர் பாட்டில்,காற்று புகாத பொருட்களை பயன்படுத்தியும் மக்கள் தங்களை சுயமாக பாதுகாத்துக் கொள்ளலாம்....

இனி வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால் படகு வேண்டும் என்றே பேச்சுக்கே இடமில்லை....
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்....

ஹ.ச.ஷஃபியுல்லா
மாணவ பத்திரிகையாளர்

படங்கள்: தே.தீட்ஷித்