Published:Updated:

என் ஊர்!

சாதிக்கு ஒரு கிணறு!

##~##

சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட தலைமை பதியின் நிர்வாகி பாலபிரஜாதிபதி அடிகளார், தன் ஊரான சுவாமி தோப்பு பற்றியும், தன் இளமைக் காலம் குறித்தும் இங்கே நினைவலைகளில் நீந்துகிறார்!

 ''முன்னாடி எங்க ஊர்ல சாதியப் பாகுபாடுகள் அதிகம் இருந் துச்சு. 'பொம்பளைங்க மேலே சேலை அணியக் கூடாது. ஆண்கள் இடுப்பில் துண்டு கட்டக் கூடாது’ன்னு ஆதிக்கச் சாதியினர் நிறைய ஊர்க்கட்டுப்பாடு கொண்டுவந்திருந்தாங்க. அய்யா வைகுண்ட சாமிகள்தான் பெண்களை மேல் சீலை அணியவைத்த தோடு, ஆண்களைத் தலையில் துண்டு கட்டவும்வைத்தார். 'அரசனுக்கு மட்டுமல்ல; எல்லோருக்கும் கீரிடம்’ என்று அறிவிச் சார். அதனால் இப்போ வரைக்கும் சுவாமித் தோப்புக்கு வர்றவங்க 'அய்யா வழி’யில் தலையில் துண்டு கட்டுவாங்க.

என் ஊர்!

என் அப்பா பாலகிருஷ்ணன்தான் எனக்கு ரோல் மாடல். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் முதல் வரிசை பட்டதாரிகளில் அவரும் ஒருத்தர். அந்தக் காலத்திலேயே வக்கீலுக்குப் படிச்சவர். தமிழையும் ஆங்கிலத்தையும் அத்தனை அழகாகப் பேசுவாரு. அஞ்சாப்பு வரைக்கும் என் ஊருக்குப் பக்கத்துல இருக் கிற கோட்டையடி அரசு துவக்கப் பள்ளியில் படித்தேன். அங்கே படிக்க வர்ற பசங்க வறுமை காரணமா பெரும்பாலும் சட்டை போட்டு இருக்க மாட்டாங்க. அவங் களுக்கு நான் சட்டை வாங்கிக் கொடுத்து இருக்கேன். சாப்பாடு இல்லாதவங்களுக்கு வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு போவேன். அந்த மரியாதையோ என்னவோ, என் கூட அவங்க நெருங்கிப் பழகவே இல்லை. அதனால் எனக்கு சின்ன வயசு நண்பர்கள் யாரும் கிடையாது.

பி.யூ.சி-க்கு மேல நான் படிக்கலை. ஏன்னா அப்போ தான் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமா இருந்தது. படிப்பை நிறுத்திட்டு போராட் டத்தில் கலந்துக்கிட்டேன். அப்போ ஊரெல் லாம் 'தமிழ் வாழ்க!’ 'தமிழ் வாழ்க!’ன்னு கோஷம் போட்டுக்கிட்டே சுத்தினோம். கள்ளிச்செடியில் கூட முள்வெச்சு, 'தமிழ் வாழ்க... இந்தி ஒழிக!’ன்னு எழுதி வெச்சேன்.

என் ஊர்!

அப்போ 'சினிமா’ங்கிற வார்த்தைக்கே மயங்கிக்கிடந்தேன்.  மாசத்துக்கு ஒரு படம் கூட்டிட்டுப் போவாங்க. தரை டிக்கெட், பெஞ்ச் டிக்கெட்னு தியேட்டரை ரெண்டாப் பிரிச்சு வெச்சிருப்பாங்க. 'நாங்க வர்றோம்’ன்னு தகவல் சொன்னதுமே பெஞ்ச்ல டிக்கெட் போட்டுவெச்சிடுவாங்க. இருந்தாலும் வீட்டுக்குத் தெரியாம அடிக்கடி படத்துக்குப் போய் வந்து அடி வாங்கி இருக்கேன். சின்ன வயசுல இருந்தே நான் தீவிர மான சிவாஜி  ரசிகன். காமராஜரோடு அவருக்கு இருந்த நட்பும் ஒரு காரணமா இருக்கலாம். நான் வளர்ந்து தலைமை பதியான பிறகு, சிவாஜி கணேசன் எங்க ஊருக்கு வந்து இருந்தார். அப்போது அவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்த நேரம். அவர் கூட வந்திருந்தவங்க, 'அண்ணன் 'சி.எம்.’ ஆகணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னு சொன்னாங்க. உடனே சிவாஜி, 'அதெல்லாம் வேணாம். உடம்பு நல்லா இருக்கணும்னு ஆசீர்வதிச்சாப் போதும்’னு சொன்னாரு. நிஜத்தில் நடிக்கத் தெரியாத நல்ல நடிகர். அந்த வகையில் சிவாஜி என் வாழ்வில் மறக்க முடியாத மனிதர்.

எங்க ஊரோட அடையாளங்களில் முக்கி யமானது முந்திரி கிணறு. அப்போ சாதிப் பாகுபாட்டால், மேல் சாதி மக்கள் தண்ணீர் எடுக்கிற கிணத்துல வேற யாரும் தண்ணி இறைக்கக் கூடாது. அதனால் சாதிக்கு ஒரு கிணறு வெட்டியிருந்தாங்க.  இதைக் கண்டிச்ச அய்யா வைகுண்ட சாமிகள், ஊருக்கு நடுவே ஒரு கிணறு வெட்டி, அதை எல்லா மக்களையும் பயன்படுத்தச் சொன்னாங்க. சுவாமி தோப் புக்கு வர்றவங்க இந்தக் கிணத்துல குளிச்சிட்டு தான் போவாங்க. உலகத்தின் எந்த மூலையில் அய்யாவுக்குக் கோயில் கட்டி னாலும் இந்தக் கிணத்துத் தண்ணீர் ஒரு குவளையும், ஊரு மண்ணு ஒரு கைப்பிடியும் வாங் கிட்டுப் போவாங்க.

என் ஊர்!

எங்க அய்யா கோயிலில் பூஜையோ, பூசாரியோ கிடையாது. 'தெய்வம் ஆணோ, பெண்ணோ கிடையாது!’ங்கிறதைக் குறிக்கிற வகையில் கருவறையில் ஒரு கண்ணாடி வெச்சிருக்கோம். இதைப் பார்த்து தெய்வத்தை தன்னுடைய உருவமா நினைச்சு வழிபடணும். இங்கே தினமும் மூணு வேளை சமபந்தி அன்னதானம் நடக்கும். 'பிச்சை எடுத்து மிச்சம் இல்லாமல் தர்மம்  செய்’ இதுதான் அய்யாவோட தத்துவம். அதைத்தான் நாங் களும் செஞ்சுட்டு இருக்கோம். தமிழக முதல் வர் ஜெயலலிதா தொடங்கி, அகில இந்திய தலைவர்கள், ஆன்மிகவாதிகள் எனப் பலரும் அடிக்கடி வந்து போகும் ஊர் இது!'                  

-என்.சுவாமிநாதன், படங்கள்: ஆர்.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு