Published:Updated:

காஷ்மீரில் படைகளைக் குறைக்க அரசு திட்டம்: ஜி.கே.பிள்ளை

Vikatan Correspondent

புதுதில்லி, ஜன.14: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளின் பலத்தை 25 சதவீதம் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தில்லியில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் கருத்தரங்கில் ஜி.கே.பிள்ளை பேசுகையில் ' பாதுகாப்புப் படைகளின் பலத்தை 25 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலைமையைப் பொறுத்து விரைவில் குறைக்க விரும்புகிறோம் .

நாகாலாந்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தின் 2 பிரிவுகள் இருந்தன. ஆனால் இப்போது ராணுவம் அங்கு இல்லை. மேலும் துணை ராணுவத்தின் 60 பிரிவுகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது வெறும் 2 பிரிவுகள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளன

வன்முறை இல்லாமல் அமைதி திரும்பினால், மக்கள் செளகரியமாக இருந்தால் காஷ்மீரிலும் பாதுகாப்புப் படைகளின் பலம் படிப்படியாகக் குறைக்கப்படும். அனைத்து படைகளும் எல்லையில் ஊடுருவலைத் தடுக்க மட்டுமே பயன்படுத்தப்படும்' என்றார்