Election bannerElection banner
Published:Updated:

டாடி எனக்கு ஒரு டவுட்டு ! - எகிடுதகிடு கேள்விகள்

டாடி எனக்கு ஒரு டவுட்டு ! - எகிடுதகிடு கேள்விகள்
டாடி எனக்கு ஒரு டவுட்டு ! - எகிடுதகிடு கேள்விகள்

டாடி எனக்கு ஒரு டவுட்டு ! - எகிடுதகிடு கேள்விகள்

இந்த வாரத்துல சுத்தவிட்டுச் சுண்ணாம்பு அடிச்ச டவுட்கள்னா இதுதாங்க. ப்ளீஸ் யாராச்சும் கொஞ்சம் க்ளியர் பண்ணுங்க.

  • சென்னை 28 பார்ட்-2  படத்து 'சொப்பன சுந்தரி' பாட்டு வந்தாலும் யுவன் இஸ் பேக்னு சொல்றீங்க. அதுக்கு முன்னாடி 'தங்கமீன்கள்' படத்துல வந்த  'ஆனந்த யாழை' பாட்டைப் பார்த்துட்டும் யுவன் இஸ் பேக்னு சொன்னீங்க. இப்போ என்னடான்னா 'யாக்கை' படத்துப் பாட்டைக் கேட்டுட்டும் யுவன் இஸ் பேக் னு சொல்றீங்க. ஆக்சுவலா அவரு எந்தப் படத்துலதாங்க கம்பேக் கொடுத்தாரு. உண்மையைச் சொல்லுங்க.
  • நவம்பர் மாசம் வரைக்கும் ஆதார் அட்டை எடுக்க  டைம் கொடுத்துருக்காங்க. ஒரு நேரம் பார்த்தா, ஆதார் கார்டெல்லாம் அவ்வளவு அவசியமோ, கட்டாயமோ இல்லைனு அறிக்கை விடுறீங்க. அதுக்குப் பிறகு பார்த்தா, ஆதார் இல்லைனா அரிசிகூட வாங்க முடியாதுங்கிற ரேஞ்சுக்கு சொல்றீங்க. ஆதார் கட்டாயமா? கட்டாயம்  இல்லையா? தெளிவாச் சொல்லுங்க.
  • தஞ்சாவூர், அரவக்குறிச்சிக்கெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்போறதாக அறிவிச்சிருக்கீங்க.  அதுக்குப் பிறகு அப்படியே ஒத்தி வைக்கிற தேதியையும் அறிவிப்பீங்களா? மாட்டீங்களா? (அட சும்மா அனுபவம்தான்).
  • 'குத்து' ரம்யா  என்ற திவ்யா ஸ்பந்தனா நடிச்ச 'சிவநாகம்' படத்தைத் தடை செய்யணும்னு தியேட்டர் வாசலில் ஆர்ப்பாட்டம் பண்றாங்களே... உங்களுக்குப் பிடிக்கலைனா நீங்க பார்க்காமப் புறக்கணிக்கிறதுதானே நியாயம். பார்க்கிறவங்களை எதுக்குத் தடுக்கணும்? ஏம்ப்பா... நான் கரெக்ட்டாதானே பேசுறேன்?
  • எப்பவுமே உண்மை என்ன ஏதுன்னே  தெரியாத ஒரு விஷயத்துல அதுபற்றி ஏதாச்சும் செய்தி வந்துச்சுனா அது  வதந்தினு எப்படித் தீர்மானிக்கிறாங்க. உண்மை என்னனு தெரிஞ்சாதானே அது வதந்தியா இல்லையாங்கிறதைத் தீர்மானிக்க முடியும். என்ன நான் சொல்றது?
  • முதல்வர் பொறுப்புகளையெல்லாம்  ஓ.பி.எஸ் பார்ப்பாராம். ஆனா அவர் முதல்வர் இல்லையாம். சரி பொறுப்புகளைப் பார்க்கிறதனால 'பொறுப்பு முதல்வர்'னு கூப்பிடலாமானு கேட்டா, அதுவும் கூடாதாம். அப்படின்னா ஓ. பி.எஸ்ஸை என்னன்னுதான் கூப்பிடணும். இப்போ நாங்க என்ன செய்ய?


- ஜெ.வி.பிரவீன்குமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு