Published:Updated:

`வீடு கட்டத் தோண்டிய குழி; பானையில் கிடைத்த 16 தங்கக் காசுகள்'- 1,300 ஆண்டுகள் பழைமையானவையா?

தங்க நாணயங்கள்

மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய மன்னர்களும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள் என்பதற்கான மிக முக்கிய சான்றாக இந்த நாணயங்கள் தற்போது கிடைத்துள்ளன.

`வீடு கட்டத் தோண்டிய குழி; பானையில் கிடைத்த 16 தங்கக் காசுகள்'- 1,300 ஆண்டுகள் பழைமையானவையா?

மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய மன்னர்களும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள் என்பதற்கான மிக முக்கிய சான்றாக இந்த நாணயங்கள் தற்போது கிடைத்துள்ளன.

Published:Updated:
தங்க நாணயங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள ஏனாதி கிராமத்தில் இருதினங்களுக்கு முன்பு வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டபோது உடைந்த மண் பானை ஒன்றில் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சுமார் ஏழரை பவுன் மதிப்புள்ள அந்த 16 தங்க நாணயங்கள் அனைத்தும் வருவாய் துறையினரிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டன.

நாணயம் - 4
நாணயம் - 4

அவை முகலாயர் காலத்திற்கு முந்தைய நாணயங்கள் என்று தற்போது உறுதி செய்யப்பட இதன் முக்கியத்துவம் குறித்து சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டனிடம் பேசினோம். “ தற்போது கிடைத்துள்ள இந்த நாணயங்கள் அனைத்தும் சுமார் 1300 ஆண்டுகள் பழமையானமை. இவை மத்திய கிழக்கு நாடுகள் என்று சொல்லப்படக்கூடிய ஈரான், ஈராக் முதலிய பகுதிகளை ஆண்ட இஸ்லாமிய பேரரசர்களால் வெளியிடப்பட்டவை. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் இவை கி.பி ஏழாம் நூற்றாண்டில் மத்திய கிழக்கு பகுதியை ஆட்சி செய்த உமையாத் பேரரசால் வெளியிடப்பட்டவை. இந்த நாணயத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தும் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டவை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கிரேக்க ரோமானிய மன்னர்களோடு நம் தமிழ் மன்னர்கள் சங்க காலத்திலேயே வாணிகம் செய்திருப்பது வரலாறு. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கக்கூடிய மன்னர்களும் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள் என்பதற்கான மிக முக்கிய சான்றாக இந்த நாணயங்கள் தற்போது கிடைத்துள்ளன. கல்வெட்டுகள், கோயில் கோபுரங்களைத் தாண்டி இதுபோன்ற உலோக சான்றுகளே இன்னும் சிறப்பு வாய்ந்தவை. இதுபோன்ற ஒன்றிரண்டு நாணயங்கள் அவ்வப்போது கிடைக்கக்கூடியது வழக்கம்தான் என்றாலும் அவற்றை மட்டும் வைத்து இங்கு வணிகம் நடந்திருக்கிறது என்று கூறிவிடமுடியாது. ஆனால் தற்போது ஒரே இடத்தில் மண் குடுவை ஒன்றில் கிடைத்துள்ள இந்த நாணயங்களின் மொத்த எண்ணிக்கை 16.

சென்னை மணிகண்டன்
சென்னை மணிகண்டன்

ஒவ்வொரு நாணயமும் குறைந்தபட்சம் 4 கிராம் எடை கொண்டிருக்கிறது. இவை முழுக்க முழுக்க தங்கத்தினால் ஆனவை. இதேபோன்ற ஆதாரங்கள் சில காலத்திற்கு முன்னர் கரூர் சுற்றுவட்டார பகுதியில் கிடைத்தன. அவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானிய மன்னர்களுடனான வாணிபத்தை உறுதிசெய்தன. தற்போது இங்கு கிடைக்கத்துள்ளவை மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வாணிப குழுக்களோடு வணிகம் செய்ய புதுக்கோட்டை முக்கிய நகரமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

உமையாத் பேரரசு
உமையாத் பேரரசு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனக்கு தெரிந்தவரை இதுபோன்ற மத்திய கிழக்கு பகுதியை சேர்ந்த நாணயங்கள் அதுவும் இத்தனை எண்ணிக்கையில் கிடைப்பது இதுவே முதல்முறை.” இவ்வாறு கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism