Published:Updated:

’டின்னர் சாப்பிடும் கோழி...பிங்க் நிற பிளமிங்கோ’ - அடடே அறிவியல் வெப்சைட்!

’டின்னர் சாப்பிடும் கோழி...பிங்க் நிற பிளமிங்கோ’ - அடடே அறிவியல் வெப்சைட்!
’டின்னர் சாப்பிடும் கோழி...பிங்க் நிற பிளமிங்கோ’ - அடடே அறிவியல் வெப்சைட்!

’டின்னர் சாப்பிடும் கோழி...பிங்க் நிற பிளமிங்கோ’ - அடடே அறிவியல் வெப்சைட்!

’ஐய்யோ இன்னைக்கு சயின்ஸ் எக்ஸாம்’ என்று வாழ்நாளில் ஒருமுறையாவது தலைதெறிக்க ஓடியவர்களெல்லாம் கைத்தூக்குங்கள் பார்ப்போம்...அவர்களுக்காகத்தான் இந்த ஆர்ட்டிக்கிள்!

கணிதப் பாடத்தின் சூத்திரங்களைப் போலவே ‘மெட்டபாலிசம், சோடியம் குளோரைடு, கார்பன் குடும்பம்’ ஆகிய அறிவியல் பாடங்களைக் கேட்டாலும் தடதடவெனத் தப்பித்து ஓடும் பெரியவர்களும், சிறியவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். 

அடுத்த வீட்டு சமையல்கட்டில் ஆப்பம், தேங்காய்ப்பால் என்று நுகர்வு சக்தியால் சரியாகச் சொல்லும் நம்மால், அந்த நுகர்வுத் திறன் குறித்து விளக்கச் சொன்னால் கடினமோ கடினம்.

’அப்டி’ பயம்காட்டும் அறிவியலின் ஒவ்வொரு துளியையும் எளிதாக்கும் வகையில் செயல்படுகிற இணையதளம்தான் ’பீட்ரைஸ் தி பயாலஜிஸ்ட்’ (Beatrice the biologist). இந்த இணையதளப்பக்கத்தில் கார்ட்டூன்களாலேயே கடினமான சயின்ஸ் நடப்புகளை எளிதாக விளக்கிவிடுகிறார் இதன் வடிவமைப்பாளரான கிஸிக். 

ஒருகாலத்தில் பயாலஜி ஆசிரியராக இருந்த கிஸிக், இன்றைக்கு பிரபலமான அறிவியல் கார்ட்டூனிஸ்ட். ’அறிவியல் எப்போதுமே போரடிக்க கூடிய விஷயம் இல்லை. உற்று கவனித்தால் கற்றுக்கொள்ள அது போன்ற ஜாலியான, ஃபன்னியான ஒரு சப்ஜெக்ட்  எதுவுமே இருக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டால் குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வம் அதிகரிப்பது மகிழ்ச்சி’ என்கிறார் இந்த ஸ்டிரிக்ட் டீச்சர். 

அறிவியலின் குட்டிக் குட்டி விஷயங்களைக் கூட கார்ட்டூன்கள் மூலமாக தெள்ளத் தெளிவாக விளக்குகின்றன இவரது கலாட்டா ஓவியங்கள். குளிப்பதனால் அழுக்குப் போகும் என்பதை நாம் எப்படி விளக்கிச் சொல்வோம் குழந்தைகளுக்கு? சோப்புப் போட்டுத் தேய்த்து, தண்ணீரால் கழுவினால் அழுக்குப் போகும் என்று சொல்வோம்.

ஆனால், இந்த டீச்சர் அதையே அழகாக கார்ட்டூன் மூலமாக உருவகப்படுத்தியுள்ளார். சிக்கனாக மாறப்போகும் இரண்டு கோழிகள் பேசிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும் என்பதை, ‘அவர் என்னை டின்னர் கூப்பிட்டுருக்கார். ஆனால், 10 மணி நேரம் முன்னாடியே நான் வந்துடணுமாம். கேட்கவே வினோதமா இல்ல?’ என்று ஒரு கோழி இன்னொரு கோழியிடம் பேசுவது போன்ற கார்ட்டூனுக்கு லைக்ஸோ லைக்ஸ்.

பிளமிங்கோ பறவைகள் ஆல்கே என்னும் பாசிகளை எந்தளவிற்குச் சாப்பிடுகின்றதோ அந்தளவிற்கு அதன் உடல் வளர்ச்சியும், நிறமாற்றமும் இருக்குமாம். இதையே எளிதான கார்ட்டூனாக விளக்கியுள்ளார் கிஸிக். அம்மா பிளமிங்கோ பறவை குட்டி பிளமிங்கோவிடம் சொல்கிறது, ‘நீயும் அம்மா மாதிரி சீக்கிரம் பிங்க் கலரா மாறணுமா வேணாமா? அப்போ சமத்தா சாப்பிடு’ என்று. 

இருப்பதிலேயே தெறி கார்ட்டூன் சோடியம் குளோரைடு என்னும் உப்பு நீரில் கரைவதை கிஸிக் விளக்கியுள்ள விதம்தான். ’ஐ லவ் ஹேங்க் அவுட் வித் யூ குளோரைடு’ என்கிறது சோடியம். இரண்டும் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றக் கிளம்பும்போது, தண்ணீர் அருகில் வந்து இரண்டையும் கரைக்கிறது. அப்போது, சோடியம், குளோரைடிடம் ‘நான் உன்னை எப்பவும் மறக்கமாட்டேன்’ என்று சோகத்துடன் சொல்வது பக்கா மாஸ் கார்ட்டூன். 

இது போல, ஆண் கடல் குதிரைதான் முட்டைகளைச் சுமக்கும் என்பதை விளக்கும் வகையில், ஒரு கடல் குதிரை மற்றொன்றிடம், ‘ட்யூட் உன்னோட ட்யூ டேட் எப்போ?’ என்று கேட்டதும், அந்தக் கடல் குதிரை ‘இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்’ என்று கோவம் கொள்வதாகவும் செம்ம ஜாலியாகப் போகிறது இவருடைய சயின்ஸ் தியரி கார்ட்டூன்கள்.

அமீபா, செல் பிரிதல், பட்டாம்பூச்சி கூட்டுப்புழுவிலிருந்து உருவாதல், அணுப்பிளவு என்று எல்லாவிதமான அறிவியல் விஷயங்களையும் ஜஸ்ட் லைக் தட் விளக்கிவிடுகின்றன இவரது கார்ட்டூன்கள். ஈசியாக அறிவியல் அறிந்து கொள்ள ஆசைப்படும் பெரியவர்களுக்கும், சயின்ஸ் என்றாலே அடம்பிடிக்கும் குட்டீஸ்களுக்கும் ஜாலிலோ ஜிம்கானா சைட் இதுதான் பாஸ்!

-பா.விஜயலட்சுமி

அடுத்த கட்டுரைக்கு