Published:Updated:

’அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
’அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு
’அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

’அப்பாவுக்கு எதாவது ஸ்பெஷலா செய்யணும்னு நினைச்சேன்!’ -சிவகுமாருக்கு கார்த்தியின் பிறந்த நாள் பரிசு

நடிகர் சிவகுமாரின் இன்னோர் அடையாளம் ஓவியர். முதன் முதலில் ஓவியக் கல்லூரியில் சேரத்தான் சென்னை வந்தார். இவர் 1958-1968 காலகட்டத்தில் வரைந்த ஓவியங்கள் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டு உள்ளது.

காந்தி, பெரியார், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் முதல் கோயில்கள், பல மனிதர்கள் என வெரைட்டியான பெயிண்டிங் கண்காட்சியில் வைத்திருக்கிறார். இதை பென்சில், கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பெயிண்டிங் பயன்படுத்தி தூரிகையை தீட்டியுள்ளார். விழாவில் பிரபல ஓவியர் மணியம் செல்வன், ஓவியர் அல்போன்ஸா தாஸ், ஓவியர் ஏ பி ஸ்ரீதர், ஓவியர் வீர சந்தானம், ஓவியர் மருது, கார்த்தி, நாசர், பொன்வண்ணன், தனஞ்செயன் போன்ற பலர் கலந்து கொண்டு கொண்டனர். 

முதலில் பேசிய நடிகர் சிவகுமார் "என் வாழ்நாள் முழுக்க ஓவியனாக வாழ்ந்து கண்ணை மூட வேண்டும்னு நினைச்சுதான் சென்னை வந்தேன்.  கால மாற்றத்தால ஓவியர்களுக்கும், ஓவியங்களுக்கும் பெருமை இருக்காதுன்னு நினைச்சுட்டு இருந்தப்போ எனக்கு ரெண்டு வருஷம் சீனியரா இருந்த அல்போன்ஸ் தாஸை பார்த்தேன். அவரை பார்த்து  அவர் ஓவியங்களை ரசிச்சுதான் அகடாமி ஓவியங்கள் வரைய ஆரம்பிச்சேன். ஆறு ஆண்டுகள் இந்தியா முழுக்க சுற்றி வந்து நூறுக்கும் மேற்பட்ட கோவில்களையும், மனிதர்களையும்  வரைஞ்சேன். அப்போ சுமார் 1500 பென்சில் ஸ்கெட்ச் போட்டிருப்பேன்.

இப்ப என்னோட பிறந்தநாள் வருது. என்னைக்கும் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடினதே இல்லை.என் பசங்க சூர்யாவும், கார்த்திக்கும்தான் 'உங்க படைப்புகளை வெளியே கொண்டு போகணும்'னு சொல்லி ஆசைப்பட்டாங்க. என்னால மறுப்பு சொல்ல முடியல. இங்கே இருக்க ஓவியங்கள் எல்லாமும் என்னோட 16 வயசுலேர்ந்து 24 வயசு வரைக்குமான காலகட்டத்துல வரைஞ்சது. என்னோட ஆசிரியர் தான் ஆனந்த விகடன் புத்தகம் கொடுத்து ஓவியர் கோபுலுவின் ஓவியங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஓவியர் மணியன் ஓவியங்களையும், சில்பி ஓவியங்களையும் அப்பதான் பார்த்தேன்.

அவரைப் பார்த்து என் ஓவியங்களை கொடுத்தேன். பார்த்து ரசிச்சவர்கிட்ட 'சார், நான் ஓவியர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, பாதை மாதிரி நடிகன் ஆகிட்டேன்'னு சொன்னேன். அவர் 'இந்தியாவுல ஓவியராக பிறப்பது சாபம். அதுவும் தமிழ்நாட்டுல பிறப்பது பெரும் சாபம். நீ சரியான முடிவைதான் எடுத்து இருக்கனு சொன்னார். என்னுடைய ஓவியங்களை பாருங்க." என்று மகிழ்ந்தார். 

ஓவியர் வீர சந்தானம் "சிவகுமாருக்கு திரைப்படத்துல அவருக்கான அங்கீகாரம் எப்போவோ கொடுத்தாச்சு. அடுத்தது ஓவியத்துறையில. இங்க இருக்கும் ஓவியங்களை விட சிறப்பா எதுவுமில்லைனு நினைக்குறேன். ஸ்கெட்சஸ்லாம் அவ்ளோ உயிர்ப்பாக துடிப்புடன் ஒரு குதிரையின் வேகத்தைப் போல இருக்கு. ஓவியனாகவும், நடிகராகவும் தமிழுக்குமான அடையாளமாகவும் இருக்கிறார்" என்றார்.

நடிகர் கார்த்தி "இங்க இருக்கற கேலரி மாதிரி  நிரந்தர கேலரியை உருவாக்கணும்னு அப்பாகிட்ட அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன். அவரும் பார்க்கலாம்னு சொல்லிட்டே இருப்பார். நாங்க ஒவ்வ்வொரு பிறந்தநாளுக்கும் கேக் வாங்கிட்டுப் போகும்போதும் கூட திட்டுவாரு. சரி இந்த பிறந்த நாளுக்காவது  அப்பாவுக்கு ஏதாவது ஸ்பெஷலா பண்ணனும்னு ஆசைப்பட்டோம். அதுதான் இந்த ஓவியக் கண்காட்சி.

எல்லா விஷயத்துலயும் அப்பா நேர்த்தியா இருக்கணும்னு எதிர்பாப்பார். இந்த கண்காட்சியையும் ரொம்ப மெனக்கெட்டு நேர்த்தியா பண்ணியிருக்கோம். ஒரு ஓவியம் வரைய அப்பா கிட்டத்தட்ட ஏழு மணி நேரமெல்லாம், சாப்பிடாம தண்ணி குடிக்காமலாம் இருந்துருக்கார். அப்படி வரையப்பட்ட ஓவியங்கள் தான் இங்க இருக்கு." என்று நன்றி சொன்னார். 

மைக் பிடித்த ஓவியர் மணியம் செல்வன் "எண்பதுகள்ல தான் முதல் முதல்ல சாரைப் பார்த்தேன். அவரோட ஸ்கெட்ச் புக்ஸெல்லாம் ஒரு முறைப் பார்த்து மலைச்சு போயிருக்கேன்.

மொத்தம் பன்னிரெண்டு புத்தகங்கள் இருக்கும். ஒரு ஓவியனாகத்தான் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறார். இந்த படைப்புகள் இளைஞர்களுக்கு ரொம்ப முக்கியமான தேவையாக இருக்கும். இது ஒர் முக்கியமான கண்காட்சி" என்றார்.  

ஓவியக் கண்காட்சி அக்டோபர் 24 முதல் 27 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 27 ஆம் தேதி சிவகுமாரின் 140 ஓவியங்கள் அடங்கிய புத்த கமும் வெளியிடப்படுகிறது.

- க.பாலாஜி 
படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு