Published:Updated:

என் ஊர்!

''சொர்க்கமே என்றாலும் அது எம்பட ஊரைப்போல வருமா?''

##~##

புதுச்சேரி மாநிலத்தின் காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீகாந்த். கால்நடை மருத்துவமும் சட்டமும் படித்த ஐ.பி.எஸ். நாட்டுக்காக உயிர்த் தியாகம் புரிந்த ராணுவ வீரர்களைப்பற்றி இவர் ஜூனியர் விகடனில் எழுதிய, 'மறத்தல்தகுமோ’ தொடரை நாட்டுப் பற்று உள்ள எவரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அவருடைய சொந்த ஊரான முத்தாம்பாளையத்தின் நினைவுப் பகிர்வுகள் இங்கே...

'' 'டேய், இதப் பாத்தீங்களா? பஸ்ஸே வராதாம் இவங்க ஊருக்கு. பொட்டிக் கடையாவது உண்டா?’  இந்த நக்கல் பேச்சுக்குப் பயந்தே கல்லூரி பருவத்தில் சொந்த ஊரை மறைத்து, பந்தா பண்ணிய என் விடலைப் பரு வத்தை நினைத்தால், இப்போது எனக்கு சிரிப்பாக வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
என் ஊர்!

முத்தாம்பாளையம்...  கூகுள் எர்த்தில் பலமுறை முயன்று, கடைசி யில் கிளிப் பச்சைப் புள்ளியாய் தெரிந்த எம்பட சொந்த ஊர். திருப்பூர் மாவட்டத்தின் கிழக்குக் கோடியில் காங் கேயம் வட்டத்தில் உள்ள குக்கிராமம். 30 வருஷங்க ளாகியும் உலகமயமாக் கல், உஷ்ணமாக்கல், பின்லேடன் சாவு, அண்ணா ஹஜாரே உண்ணாவிரதம் என எதற்கும் அசராமல் அப்படியே அது இருப்பது தனி அழகு.

என் ஊர்!

கழண்டு விழும் டவுசரை ஒரு கையிலும் அலுமினியத் தட்டை மறு கையிலும் பிடித்தபடி சத்துணவு வரிசையில் நிற்கும் பள்ளிச் சிறுவர் கள், வாய்ப்பாட்டை ஒப்பிக்கச் சொல்லியே நேரத்தைக் கடத்தும் ஐந்து வகுப்புகளுக்கும் பொதுவான வாத்தியார், இடிந்துகிடக்கும் ரேடியோ ரூம், 'உன்னையும் பார்த்தேன்... உங்க அப்பனையும் பார்த்தேன்’ என்ற இறுமாப்புடன் அசைந்தாடும் ஊர் மந்தை வேப்ப மரம். அதைச் சுற்றி வேலை இல்லாதோர், வேலை செய்தோர், வேலை செய்யலாம் என்று இருப் போர் ஓய்வு எடுக்கும் கல்லுக்கட்டு... இப்படி எதுவுமே மாறவில்லை!

அடுத்தடுத்து அப்போலோக்கள் பக்கத்து டவுனில் வந்தாலும், மாட்டு ஆஸ்பத்திரி மாணிக்கம் டாக்டரிடம் ஊசி போட்டுக் கொண்டு மாத்திரை வாங்கினால்தான் எம்பட ஊரின் பெருசுகளுக்கு மன நிறைவு. ஊரின் விடுமுறை தினம் சனிக் கெழம. அன்னிக்கு சைக்கிள் மிதித்து முத்தூருக்குப் போய் சூடாக புரோட்டா தின்றுவிட்டு, ரோஜா பாக்கு வெத் தலை போட்டுக்கொண்டு டூரிங் கொட்டகையில் படம் பார்த்த விவசாயத் தொழிலாளர்கள், இப்போது டி.வி.எஸ்.50, பீர், ஃபில்டர் சிகரெட்டுக்கு மாறிவிட்டதாகக் கேள்வி!

லைஃபாய் சோப், சாரிடான் மாத்திரை, குச்சி மிட்டாய் விற்ற ஊரின் ஒரே கடையான செல்லமுத்து அண்ணன் கடையும் அப்படியே தான் இருக்கிறது. என்ன... கொஞ்சம் குர்குரேயும் ஃபேர் அண்ட் லவ்லி பாக்கெட்டுகளும் தொங்குகின்றன. உலகையே வென்ற கோக், பெப்ஸி பானங்கள் எம்பட ஊரின் பொடாரன் கலர் பானத்தை மட்டும் இதுவரை வெல்ல முடியவில்லை!

சமீபத்தில் ஊருக்குச் சென்றபோது, அரை குறையாக இருந்த ஊர் கோயிலைப் பார்த்து மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. 'ஏம்பா நீ பெரிய போலீஸ் படிப்பு படிச்சு இருக்கிறீயே, இந்தப் பிரச்னையைத் தீர்த்து வையேன்’ என்று சொன்ன ராசு மாமாவின் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து, அதற்கு என கொஞ்சம் மெனக்கெட் டேன்.  ஆனால், இந்திய - பாகிஸ்தான் பிரச் னையைவிட அது வீரியமிக்கதாக இருந்தது.

கோயிலுக்குக் கிழக்கே கூப்பிடு தூரத்தில் என் காட்டுத் தோட்டம். ஊர் வந்த சந்தோஷம்... அம்மாவின் சாப்பாடு என்ற மகிழ்ச்சியின் இடையே ஒரு நெருடல் - நடக்கப் போகின்ற சம்பாஷணையை நினைத்து. 'ஏம்பா, தனியாவா வந்த?’ - நகர வாழ்க்கை பிடிக்காமல், மறைந்த கண வனின் நினைவுகளோடு வாழும் என் விதவைத் தாயின் ஏக்கப் பெருமூச்சுக்கு என்னிடம் பதில் இல்லை. 'உங்க ஊர்... ஒரே போர்...’ என்று சொல்லி ஊருக்கு வர மறுத்த என் மனைவி, மகனைப்பற்றி வயோதிக தாயிடம் எப்படி விளக்குவது?

'அட கிறுக்கா, இந்தத் தடவையாவது அவங்களைக் கூட்டிக்கிட்டு வருவன்னு நெனச்சி, பேரனுக்குப் பலகாரம் சுட்டுவெச்சிருக்கேன். மருமகளுக்கு ராய அடையும் ரக்ரி கடைசலும் செஞ்சு காலையில இருந்து ரோட்டையே பாத்து உக்காந்து இருக்கேன்!'' புலம்பிக் கொண்டே சமையலறை நோக்கிச் சென்ற அம்மாவைப் பார்க்க பாவமாக இருந்தது. இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு கயித்துக் கட்டில் போட்டு வானத் தைப் பார்த்தபடி படுத்தேன். சில்லென்ற ஆடிக் காற்று என்னைத் தழுவ...  'சொர்க்கமே என்றாலும் அது எம்பட ஊரைப்போல வருமா...’ என உரக்கப்பாட  வேண்டும் போல இருந்தது!''

சந்திப்பு: டி.கலைச்செல்வன், படங்கள்: ஜெ.முருகன், ஸ்ரீவித்யா

என் ஊர்!