Published:Updated:

அறிவிழி - 45

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 45

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 45

Silk road. இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?  பட்டிருந்தால், மீதிக் கட்டுரையைப் படிக்க அவசியம் இல்லை. படாதவர்கள், தொடரலாம்!

சில்க் ரோட்டில் பயணம் செய்வதற்கு முன், சில அடிப்படைத் தகவல்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

பயனீட்டாளர்களாக நமக்கெல்லாம் தெரிந்த வலைத்தளங்களையும், அலை மென்பொருட்களையும், இணைக்கப்பட்ட சாதனங்களையும்கொண்ட இணையத்தைத் தாண்டி 'இருண்ட இணையம்’ ஒன்று இருக்கிறது. இந்த இணையத்தில் இருக்கும் தளங்களை கூகுள், யாஹூ, பிங்... போன்ற தேடல் பொறிகளைக் கொண்டு கண்டுபிடிக்க இயலாது. 'ஆழ் இணையம்’ (Deep Web) என்ற பெயரில் இது அழைக்கப்பட காரணம் இருக்கிறது. கடலின் மேற்பரப்பில் வலை ஒன்றை இழுத்துக்கொண்டே சென்றால், மிதக்கும் சில பொருட்களும், மேற்பரப்பில் நீந்தும் மீன்களும் மட்டும்தான் கிடைக்கும். அது போலத்தான் தேடல் பொறித் தளங்களைக்கொண்டு நாம் கண்டறியும் வலைத்தளங்களும். ஆனால், நமக்கு வியப்பூட்டும் விநோதப் பொருட்களும், உயிர்களும் ஆழமான கடலுக்குள்தான் இருக்கின்றன. அதுபோல, சாதாரணமானவர்களுக்கு எளிதில் தட்டுப்படாத தளங்களைக்கொண்ட இருட்டு உலகம்தான், இந்த Deep Web.

'அப்படியானால், நமக்குத் தெரியாமல் சில ஆயிரம் தளங்கள் இருக்குமோ?’ என்று எண்ணிவிட வேண்டாம். 'Surface Web’ என்று அழைக்கப்படும் வெளிப்படையாகத் தெரியும் இணையத்தைவிட இந்த ஆழ் இணையம் பல மடங்கு பெரிதானது. இந்த ஆழ் இணையதளங்கள், தேடல் பொறிகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பல உத்திகளைக் கையாளும். அதாவது, தளத்துக்குள்ளாகவே எந்தவிதமான இணைப்புகளும் இல்லாமல் பார்த்துக்கொள்வது, பகுத்துப் பிரித்து எடுக்க முடியாத வகையில் எழுத்து வகைத் தகவல்களை போட்டோ வடிவில் கொடுப்பது... என பல்வேறு உத்திகள்.

அறிவிழி - 45

அதுசரி... அதென்ன சில்க் ரோடு? நிழல் தளங்கள் பல ஆழ் இணையத்தில் இருந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சில்க் ரோடு தளம் பரவலாகப் பிரபலம் அடைந்தது. சில்க்ரோடு தளத்துக்கு எப்படிச் செல்வது என்பது பலருக்கும் தெரியாததே, அது பிரபலமடைய முக்கிய காரணம். இதன் வலைத்தள முகவரியும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். தளத்துக்குச் செல்வதைப் பற்றி தெரிந்துகொண்டவர்களுக்கும், இந்தத் தளத்தை இயக்கும் பெருங்கணினிகள் எங்கே இருக்கின்றன என்பதெல்லாம் தெரியாது.

சில்க் ரோடு தளத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? உலகின் மிக ரகசியமான கறுப்புச் சந்தை நடத்தப்பட்டது சில்க் ரோடு தளத்தில்தான். கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்கள் பலவற்றை விற்பவர்கள், தங்களின் ஆன்லைன் கடைகளை இங்கே அமைத்துக்கொண்டு ரகசியமாக இயங்க முடிந்தது. 'நடத்தப்பட்டது’, 'முடிந்தது’ என்றெல்லாம் வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குக் காரணம், இரண்டு வருடங்களாக சில்க் ரோட்டை இயக்கி வந்த ராஸ் உல்ப்ரைட்டை, சென்ற வாரத்தில் FBI வளைத்துப் பிடித்ததுதான்.

அறிவிழி - 45

https://silkroadvb5piz3r.onion.lu/ என்பதுதான் கடைசியாக சில்க் ரோடு இயங்கிவந்த இணைய முகவரி. இப்போது மேற்கண்ட தளத்துக்குச் சென்றால், FBI கொடுக்கும் ஒரு பக்கத் தகவல் மட்டுமே இருக்கிறது. சில்க் ரோடு என்பதை கூகுளில் தேடினால், அது கறுப்புச் சந்தையாக இருந்தபோது எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதை, சில ஸ்க்ரீன் ஷாட்கள் மூலம் பார்க்கலாம். போதைப் பொருட்களை வாங்கியவர்கள், அவற்றின் பயன்பாட்டைப் பற்றிய பின்னூட்டங்களை எழுதியிருப்பதால், சில்க் ரோடு தளத்தில் பொருட்களை விற்றவர்களும் வாங்கியவர்களும் சட்டத்தின் பிடிக்குள் வரக்கூடும் என்கிறார்கள். இணையம் எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதற்கு சில்க்ரோடு ஓர் உதாரணம்.

இதுவரை தனியார் நிறுவனமாக இருந்துவந்த ட்விட்டர், பொதுச் சந்தையில் நுழையத் தயார். 'தங்களது பங்குகளை ஏன் மக்கள் வாங்க வேண்டும்?’ என தயாரிக்கப்பட்ட ஆவணத்தின் முதல் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறது ட்விட்டர் நிர்வாகம்.

'அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை உலகுக்குத் தெரிவிக்க அவர் பயன்படுத்திய ஊடகம் டி.வி. அல்ல... ட்விட்டர்!’ இதுவரை லாபம் சம்பாதிக்கவில்லை என்றாலும், பாரம்பரிய ஊடகங்களுக்கு மாற்றாகவும், பங்காளராகவும் அசைக்கமுடியாத ஒன்றாக இருக்கிறது ட்விட்டர். அதன் நிறுவனர்கள், தொடக்க காலத்தில் இருந்து பணிபுரிபவர்கள் என சின்னப் படை ட்விட்டர் பங்குச்சந்தை செல்லும் நாளில் தங்களது வங்கிக்கணக்கில் மில்லியன்களைச் சேர்த்துக்கொள்ளத் தயாராகி வருகிறார்கள்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism