##~##

''அட்டே...ன்...ஷன், ஸ்டேண்டர்ட்டீஸ், லெஃப்ட் ரைட்.... லெஃப்ட் ரைட்’ ஓயாமல் கேட்டுக் கொண்டு இருக்கின்றன கட்டளைகள். கட்டளை களைத் தொடர்ந்து ஓங்கி அறையும் பூட்ஸ் ஒலி, ராணுவ முகாமிலோ, போலீஸ் பயிற்சி முகாமிலோ இருக்கும் உணர்வை அளிக்கிறது. ஆனால், இவை இரண்டும் இல்லை; நாம் இருந்தது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'நிலா’ அறக்கட்டளையில்.

 விழுப்புரம் மாவட்டம், கெடார் அருகே உள்ள கொசப்பாளையத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துகிடக்கிறது இந்தப் பயிற்சி மையம். 2008-ம் ஆண்டு மத்திய தொழில் பாதுகாப்புப் பயிற்சியகத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய பாரதி என்கிற தனி மனிதரால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளையில் போலீஸ், வி.ஏ.ஓ, தீயணைப்புத் துறை மற்றும் ரயில்வேயில் பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 850 பேர் இங்கு பயிற்சி முடித்து அரசுப் பணியில் உள்ளனர்.  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது பாதுகாப்புக்காக ஒரு மாவட்டத்துக்குத் தலா 150 பேர் என்று விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்து இருக்கிறார் பாரதி. மாதத்துக்கு ஒருமுறையாவது ரத்த தானமும் இங்கு நடக்கிறது.

மனிதனை நினை!

''எங்க அப்பா பெரியார் கொள்கைகளில் பற்று கொண்டவர். கடவுள் நம்பிக்கை இல்லாத அவர் மனிதர்கள் மீதுதான் அதிகமான நம்பிக்கை வைத்துப் பலருக்கும் உதவினார். எனக்கும் இயல்பாகவே அந்தத் தொண்டு மனப்பான்மை உண்டு. 'கடவுளை மற... மனிதனை நினை’ என்பது பெரியாரோட வாசகம். மனிதனை மறந்து கடவுளை நினைப்பவர்கள்தான் நாட்டில் அதிகம். இன்னொருபுறம் கடவுளையும் மறந்து மனிதனையும் மறந்த நாத்திகர்களும் உண்டு. ஆனால், நான் முழுக்க முழுக்க மனிதத்தை நேசிக்கிறவன்.

மனிதனை நினை!

அதனால்தான் என்னால் முடிந்த அளவு கிராம மக்களின் வாழ்க் கைத் தரத்தை உயர்த்த ணும்னு முடிவு பண்ணி னேன். அதனாலதான் அரசுப் பணியையும் ராஜினாமா செய்துட்டு என் பெற்றோருக்குச் சொந்தமான இந்த இடத்துல பயிற்சி மையத்தை ஆரம்பிச்சேன். 'எல்லாம் அதிர்ஷ்டம்’னு நம்புற யாருக்கும் நான் பயிற்சி கொடுக்கிறது இல்லை. 'என்னால எதுவுமே முடியாது, போலீஸ் வேலைக்குத் தேவையான உடல்கட்டு இல்லை என்று தாழ்வு மனப்பான்மை உடைய சாதாரண குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குத்தான் பயிற்சி கொடுக்கிறோம்.  மொத்தம் 2 ஆண்டு பயிற்சிக் காலம். அதுல சில பேர் ஒரு வருஷத்துக்குள்ளேயே ரெடியாகிடுவாங்க. எல்லோருக்குமே இலவசப் பயிற்சிதான். இங்க இருக்கிற ஏழு ஏக்கர் நிலத்துல சாப்பாட்டுக்குத் தேவையானவற்றை இங்குள்ள மாணவர்களே விவசாயம் செஞ்சுக்கிறாங்க. மற்ற பொருட்களை  வெளியில வாங்கி சமைச்சுச் சாப்பிடுறாங்க. தங்கு வதற்கும் இலவச இடம் கொடுத்திருக்கிறேன். மாதக் கடைசியில 5 நாட்கள் விடுமுறை'' என்று தெளிவாகத் தன் அறக்கட்டளைபற்றிப் பகிர்ந்து கொண்டவர், எதிர்காலத் திட்டம் குறித்தும் பேசினார்.

மனிதனை நினை!

''இந்த அறக்கட்டளையில் இலவசமாப் பயிற்சி பெற்று இன்று நல்ல வேலையில் இருக்கும் பலர்தான் நன்கொடைகள் வழங்கி எங்கள் வளர்ச்சிக்கு உதவுறாங்க. அவங்களோட குழந்தைங்க தங்கிப் படிக்கிறதுக்கு ஒரு கல்வி மையத்தை உருவாக்கி, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.,

விஞ்ஞானிகள், முப்படை அதிகாரிகளாக உருவாக்கணுங்கறதுதான் என்னோட கனவு. நிச்சயம் அது நிறைவேறும்'' என்கிறார் தன்னம்பிக்கையுடன் பாரதி.

உங்களால் முடியும் பாரதி!

- பா.அற்புதராஜ், படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு