Published:Updated:

''எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலை!''

புதுவையில் சினேகாவின் புன்னகை பதில்

##~##

'இந்த இரவுதான் பிடிக்குதே... பிடிக்குதே!’ என்று ஒட்டுமொத்தக் கூட்டமும் முணுமுணுத்து மயங்கிக் கிறங்கித் தள்ளாடியது. பிஸி ஹண்ட் மற்றும் ஜே.கே.எஸ். நெட்வொர்க்ஸ் இணைந்து நடத்திய 'ஜில்லுனு ஒரு சம்மர்’ ஸ்டார் நைட்டால் புதுச்சேரியில் உல்லாசமும் உற்சாகமும்!

'தென்றல்’ சீரியலில் நடிக்கும் தீபக்கும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் கலக்கும் நீலிமா ராணியும்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள். நீலிமா ராணி மேடை ஏறியதும் அரங்கைப் பிளந்த கரகோஷம் புதுவையிலும் நீலிமாவுக்குக் கணிசமான ரசிகர்கள் இருந்ததைக் காட்டியது. 'ராஜா... வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ பாடலோடு ஆரம்பமானது அதகள அதிரிபுதிரி ஸ்டார் நைட். 'அசத்தப் போவது யாரு?’ சிவகிரி, ஸ்டேண்ட்- அப் காமெடி செய்து கூட்டத்தைக் கலகலக்கவைத்தார். இடை இடையே ஸ்பான்சர்களின் பரிசு மழை. பார்வையாளர்களை மேடைக்கு அழைத்து பரிசு மழையில் தாராளமாக நனையவைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
''எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலை!''

ஏர்டெல் சூப்பர் சிங்கர் முன்னாள் வின்னரும் பின்னணிப் பாடகியுமான கவிதா மைக் பிடித்தார்.  'கந்தசாமி’ படத்தில் இருந்து  'அலேகா அலேகா’ பாடல் பாடி  கூட்டத்தை அலேக்காகக் கிறங்கவைத்தார். என்னதான் நீலிமா, தீபக், கவிதா என நட்சத்திரப் பந்தல் போட்டாலும், 'இன்னுமாய்யா சினேகா வரலை?’ என்கிற முணுமுணுப்பும் சலிப்பும் ஆடியன்ஸ்கள் மத்தியில். ''நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புன்னகை இளவரசி சினேகா வந்துவிட்டார்'' என்கிற அறிவிப்புக்கு அப்படி ஒரு அப்ளாஸ்! மஞ்சள் சுடிதார் போர்த்திய மலர்க் கண்காட்சியாக மேடையில் சினேகா தோன்ற, கைத் தட்டல் இன்னும் இன்னும் பல மடங்கு ஆனது. எல்லா நடிகைகளையும்போல, ''ஐ லவ் பாண்டிச்சேரி. பாண்டிச்சேரி வந்தது ரொம்பச் சந்தோஷமா இருக்கு. இங்க இருக்கிற எல்லாரையும் எனக்குப் பிடிக்கும்'' என்று ஓப்பனிங்கில் வார்த்தை வலை விரித்தார் புன்னகை பொக்கே.

உடனே தீபக், ''மேடம், அவ்வளவு சீக்கிரமா சிக்கனமாப் பேச விட்ருவோமா? ரசிகர்கள் உங்ககிட்டே கேள்வி கேட்க ஆசைப்படறாங்க'' என்றார். புன்னகையாலேயே சம்மதம் சொன்னார் சினேகா. முதலில் வந்த ரசிகர், 'எப்படி மேடம் இவ்வளவு அழகா சிரிக்கிறீங்க?'' என்று கேட்க... ''அய்யோ' என்று சினேகா வெட்கப்பட்டார். ''ஆஹா, இதுக்கும் சிரிப்புத்தானா? சிரிப்பாலயே பதில் சொல்றாங்களே சினேகா!'' என்று கலாய்த்தார் தீபக். அடுத்து மேடையேறிய இந்தி ரசிகர் ஒருவர், ''இந்தி பேசுவீங்களா?''  என்று கேட்க, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனே ஐந்து நிமிடங்கள் இந்தியில் பேசினார் சினேகா. இப்படியே ஒவ்வொரு ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கும் அளவாகப் பேசி, அழகாகச் சிரித்து சாதுர்யமாகச் சமாளித்தார்.

''எனக்கு இன்னும் கல்யாண வயசு வரலை!''

கடைசியாக வந்த ரசிகர், 'மேடம் உங்களுக்கு எப்ப கல்யாணம்?' என்று கேட்க, 'எனக்கு இன்னும் கல்யாண வயசே வரலைங்க. எங்க அம்மா இங்கேதான் இருக்காங்க. வேணும்னா நீங்களே அவங்ககிட்ட கேட்டுக்கங்க'' என்று சினேகா பதில் சொல்ல, 'ஓ... ஓ...’ என்று எக்கோ சொன்னது அரங்கம். பின்பு, குலுக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிவிட்டு இரண்டு டான்ஸ் ஸ்டெப் போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் நித்யஸ்ரீ  'டாடி மம்மி வீட்டில் இல்லை’ பாடல் பாடினார். 'தமிழ் சினிமா நடிகர்கள் மூச்சைப் பிடித்துப் பேசினால் எப்படிப் பேசுவார்கள்?’ என்று மிமிக்ரி செய்தார் ரோபோ சங்கர். சின்னத்திரை கலைஞர்கள் தேவிப் பிரியா- பாஸ்கர், விஜய் டி.வி. கிரண், சுவேதா ஆகியோரின் நடனங்கள், ராமகிருஷ்ணனின் ஸ்டேண்ட் அப் காமெடி என்று கலர்ஃபுல் ஸ்டார் நைட்டால் புதுச்சேரி ஜிலீர் சேரி ஆனது.

நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன், தேவராஜன்