Published:Updated:

Monday டென்ஷன் குறைக்க Sunday என்ன பண்ணனும்? #WowWeekEnds

Monday டென்ஷன் குறைக்க Sunday என்ன பண்ணனும்? #WowWeekEnds
Monday டென்ஷன் குறைக்க Sunday என்ன பண்ணனும்? #WowWeekEnds

Monday டென்ஷன் குறைக்க Sunday என்ன பண்ணனும்? #WowWeekEnds

வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஆனாலே ஆஹா ஓஹோனு மைண்ட் குஜாலாகறதும், மண்டே மார்னிங்னா அய்யோ அம்மான்னு கூவறதும் வாடிக்கையாவே போச்சு நமக்கு! காரணம் என்னன்னு என்னைக்காச்சும் யோசிச்சிருக்கீங்களா? காரணம்.. வீக் எண்ட் வீக்கா ஹேண்டில் பண்றதுதான்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது! யெஸ் பாஸ்! வார இறுதிகள்ல / லீவு நாட்கள்ல  நாம வழக்கமா பண்றது கீழ இருக்கறதாத்தான் இருக்கும். பெரும்பாலும்.

01. லேஏஏஏஎட்டா எழுந்திருக்கறது. 'ன்னா இப்போ?' அப்டிங்கற ஒரு மனநிலை.

02. நேரத்துக்கு சாப்பிடாம இருக்கறது. வழக்கமா, வார நாட்கள்லயே இப்டிதான்.. வீக் எண்ட் ல இன்னும் ஓவர்!

03. காஃபி, டீ அல்லது ஸ்நாக்ஸ் கண்ட நேரத்துக்கு சாப்பிடறது.

04. 'இதை லீவு நாள்ல பண்ணணும்'னு ப்ளான் பண்ணி வெச்சத, சனி காலை அல்லது ஞாயிறு காலைல ஆரம்பிக்காம ஞாயிறு சாயந்திரமா அடடடான்னு அதை ஆரம்பிக்கறது.

05. வழக்கத்தைவிட லேட்ட்டா தூங்கறது

06. வழக்கத்தைவிட அதிகமா சமூக வலைதளங்கள்ல புரட்சி பண்றது

இப்டி லிஸ்ட் பெரிசா போகும். சரி. வார இறுதிகளை கொஞ்சம் மாத்தியோசிச்சு, உபயோகமா பண்ணினா, வாரம் முழுமைக்குமான புத்துணர்ச்சி கிடைக்குமாம் முயற்சி பண்ணுவோமா?

01. நீண்ட பகலை உருவாக்குங்கள்

அதெப்படினு தோணுதா? லேட்டா எந்திரிக்காம கொஞ்சம் முன்னால எழுந்து, சும்மா வெளில ஒரு வாக் போய்ட்டு வாங்க. 100 அடினாலும் அன்றைய தினம் ஆரம்பிச்சுடும். 

எந்திரிச்சுட்டேன்.. அப்டியே பெட்ல இருந்தேன்னு சொல்லிடாதீங்க. அது அனுஷ்கா படத்தை கண்ணை மூடிட்டு பார்க்கறதுக்கு சமம். வேஸ்ட்!

02. ஃபர்ஸ்ட் 3 மணி நேரம் செல்ஃபோனுக்கு ரெஸ்ட் 

எந்திரிச்சதுமே நம்மளை சிறைபிடிக்கறது அலைபேசிதான். அதுனால வார இறுதிகள்ல எழுந்ததும் அதைத் தொடாம இருங்க. அப்பதான் என்ன பண்லாம்னு யோசிக்கச் சொல்லும். ஃபோன் பேச தடை இல்ல. வந்தா பேசுங்க.. ஆனா வள வளன்னு பேசிட்டிருக்கற அழைப்புகளுக்கு அல்ல. முக்கியம்னா மட்டும். 

03. ஜாலி ஹாபி

செஸ், கேரம், ஷட்டில்னு நண்பர்கள்கூட விளையாடற விளையாட்டுக்களோ, அல்லது ஓவியம், கீபோர்ட், கிடார்னு தனியா பண்றதோ - உங்களுக்குப் பிடிச்ச எதையாவது - தினமும் பண்லைன்னாலும் வார இறுதிகள்ல நிச்சயம் செய்ங்க. ரொம்ப பெரிய பிரபலங்கள் சிலர் ஃபுட்பால், கோல்ஃப், பியானோ, ஓவியம்னு தங்களோட தொழிலுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஹாபிதான் தங்களை லைவ்லியா வைக்கறதாவும், இது அவங்க கிரியேட்டிவிட்டியை ஊக்கப்படுத்தறதாகவும் சொல்லிருக்காங்க. 

04. ஒரே ஒரு ஃபோன்கால்

நம்ம எல்லாருக்குமே சில நண்பர்கள் எப்ப பேசினாலுன் உற்சாகம் தர்றவங்களா பேசுவாங்க. 'மேனேஜர் வெரிகுட் சொன்னார் மச்சி'ன்னா, 'சூப்பர்டா.. நீ எப்பயுமே செய்ற வேலைல பெஸ்டைக் குடுப்பியே'ன்னு நம்மளை உற்சாகப்படுத்துவாங்க. அப்படி ஒருத்தர்கிட்ட எந்த இடையூறும் இல்லாம கொஞ்ச நேரம் பேசுங்க. 

05. ப்ளான் பண்ணுங்க

என்னடா இது.. வார இறுதிக்கும் ப்ளானான்னு கேட்காதீங்க. வார இறுதிகளை திட்டமிடப் பழகிட்டா நெறைய பலன் கிடைக்கும். இந்த சண்டே இதைப் பண்ணணும்னு நெனைக்கறப்பவே ஒரு Post Itல எழுது ஒட்ட வெச்சுடுங்க. 100% ப்ளானிங் இல்லைன்னாலும் சின்ன திட்டமிடல் அவசியம். 

06. குட்டித்தூக்கம் அவசியம்

மதியம் சாப்பிட்ட பின்னாடி குட்டித்தூக்கம் போடுங்க. அந்த நேரம் கிளம்பி வெளில போகறது, உங்களை டயர்டாக்கி, விடுமுறை நாளுக்கான மகிழ்ச்சியையே கெடுத்துடும்.

07. டெக்கியா இருக்காதீங்க

திரும்பத் திரும்ப பல ஆய்வுகள்ல சொல்லப்படறது இது. வார இறுதிகள்ல செல்ஃபோன் மாதிரியான டெக்னாலஜி சாதனங்கள்ல இருந்து கொஞ்சம் விலகி இருக்கறது. ஹாபி சார்ந்து உருப்படியா, ஃபோகஸா ஒரு விஷயம்னா கூட ஓகே.. மத்தபடி சாட்டிங், இணையத்தை சும்மா மேயறதெல்லாம்.. வேணாமே!

08. இது மிகவும் முக்கியம் 

மண்டே ப்ளூ-ல இருந்து தப்பிக்க நம்ம வடிவேலு சொல்லும் வெற்றி ரகசியங்கள பின்பற்றலாம். இன்னொன்ணும் இருக்கு... இது ரொம்ப ரொம்ப அவசியம்.. அதாவது ஞாயிறு மாலைல ஒரு நல்ல ஹாபியை அல்லது உங்களை உற்சாகமா வெச்சுக்கற ஒரு விஷயத்தை செஞ்சபிறகு, சீக்கிரமா உறங்கச் செல்வது! எதுக்காகன்னா, உற்சாக மனநிலைல உறங்கச் சென்றவனுக்கு அடுத்தநாள் காலைல எழும்போதும் அந்த மனநிலை இருக்குமாம். இது, அந்த வாரத்தையே எனர்ஜியா துவங்க வைக்கும்! 

-பரிசல் கிருஷ்ணா

அடுத்த கட்டுரைக்கு