கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

சத்குரு ஜக்கி வாசுதேவ்

‘‘பண்டிகை நாள் என்றாலே வெறுப்பாக இருக்கிறது. பெண்கள் சமையல் கட்டிலேயே அடைந்து கிடந்து, விதவிதமாகத் தின்பண்டங்களைச் செய்தே களைத்துப்போகிறோம். இதுவா கொண்டாட்டம்?''

வாழ்க்கை என்பதே ஆனந்தமாகக் கொண்டாடப்பட வேண்டியது. அப்படி அமைத்துக்கொள்ளத் தெரியாதவர்களுக்காகத்தான் வெளியில் பல கொண்டாட்டங்களை இந்த தேசத்தில் உருவாக்கினார்கள்.

வயலை உழப் போகிறார்களா? அது ஒரு கொண்டாட்டம். விதை தூவப் போகிறார்களா? இன்னொரு கொண்டாட்டம். களையெடுப்பது ஒரு கொண்டாட்டம். விளைந்ததை அறுவடை செய்வது ஒரு கொண்டாட்டம். உழவு மாடுகளுக்கு மரியாதை செய்வது ஒரு கொண்டாட்டம். யார் வீட்டிலாவது திருமணமா, பல நாள் கொண்டாட்டம் என்றெல்லாம் ஏன் அமைத்தார்கள்?

கொண்டாட்டம் என்பது சந்தோஷத்தின் வெளிப்பாடு. வாழ்க்கையின் அடிப்படை. நீங்கள் கொண்டாட்டங்களை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத் துதான், உங்கள் ஆனந்தம் இருக்கிறது.

கொண்டாட்டம், வயிறு முட்டச் சாப்பிடுவதில் இல்லை. உணர்வில் இருக்கிறது. உங்கள் முதல் கவனம் சந்தோஷமாக இருப்பதில்தான் இருக்க வேண்டும்.

விதவிதமாகச் சமைக்க வேண்டும். பின்பு, அதைப் புசிக்க வேண்டும். அப்புறம்தான் கொண் டாட வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

முதலில் உங்களையே ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்கொள்ளுங்கள். சமையல் செய்வதை ஏன்

வேலையாக நினைக்கிறீர்கள்? காய்கள் அரிவதைக்கூட ஒரு கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டு பண்டிகை நாளை ஆரம்பித்துப் பாருங்கள்.

''பெண்கள் வேலை செய்ய வேண்டும், ஆண்கள் கொண்டாட வேண்டும் என்றுதான் நீங்களும் சொல்கிறீர்களா?''

ஆண், பெண் என்று பிரித்துப் பேசவில்லை. வாழ்க்கையை வேதனையோடு நகர்த்தத் தீர்மானித்திருக்கிறீர்களா, அல்லது கொண்டாட்டமாக மாற்றிக்கொள்ள விருப்பமா என்றுதான் கேட்டேன்.

அன்பும், பிரியமும், விருப்பமும் இல்லாமல் நீங்கள் சமைத்தால், ஒருவிதத்தில் ஆண்களுக்கும் அது தண்டனைதானே?

பெண்களாவது புலம்பித் தள்ளி விடுகிறார்கள். ஆண்கள்?

ஒரு முறை சங்கரன்பிள்ளை, பெண்கள் கூட்டம் ஒன்றுக்குப் போயிருந்தார்.

''பெண்கள் முட்டாள்களாகக் கருதப்பட்டு இருக்கிறார்கள். அடிமைகளாக நடத்தப்பட்டு இருக்கிறார்கள். வேட்டையாடப்படும் இரைகளாக விரட்டப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள்

எந்தவிதத்திலாவது வேதனைப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா?'' என்று மைக்கை இறுகப் பற்றியபடி ஒரு கனமான பெண்மணி உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டு இருந்தாள்.

சங்கரன்பிள்ளை எழுந்தார். ''என்னால் சொல்ல முடியும். பெண்கள் ஒருபோதும் மௌன மாக வேதனைப்பட்டதில்லை'' என்றார்.

உண்மைதானே?

உள்ளுக்குள் நீங்கள் சந்தோஷமாக இல்லாதபோது, சுற்றி உள்ளவர் களை மட்டும் எப்படிச் சந்தோஷமாக இருக்க அனுமதிப்பீர்கள்? தூக்கிவைத்த முகத்துடன் நீங்கள் உட்கார்ந்தால், மற்றவர்களின் கொண்டாட்டம் என்னவாகும்? சமைத்த களைப்பும், சாப்பிட்ட அயர்ச்சியும்தான் பண்டிகை நாளில் மிச்சமாகும்.

சந்தோஷமான நபராக இருக்கும் வரைதான் நீங்கள் ஆபத்தில்லாதவர். சந்தோஷம் இல்லாத நேரங்களில், பரிதாபமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள். ஆண்களும் இதைப் புரிந்துகொண்டால், உங்களுக்கு இந்த வேதனை இருக்காது.

ஆண்களைப் பற்றிப் பேசும்போது, ஒரு கதை நினைவுக்கு வருகிறது.

கடற்கரையில் ஒரு பெண், கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தாள். சுத்தம் செய்ய அதைத் தேய்த்தாள். எதிரில் ஒரு பூதம் தோன்றியது.

''என்னை விடுவித்ததற்காக உன் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுகிறேன். என்ன வேண்டும்?'' என்று கேட்டது.

''என் நாய்க்குட்டி பேச வேண்டும்; பாட வேண்டும்; பரதநாட்டியம் ஆட வேண்டும்!''

பூதம் உதட்டைப் பிதுக்கியது. ''அத்தனை சக்தி எனக்கில்லை. வேறு ஏதாவது கேள்!''

''அப்படியானால் அன்பானவனாக, நகைச்சுவை உணர்ச்சி மிகுந்தவனாக, வீட்டு வேலைகளில் சந்தோஷமாக உதவி செய்பவனாக, என்னையும் என் குடும்பத்தையும் மதிப்பவனாக, என் னிடம் பொய்யே சொல்லாதவனாக ஓர் ஆண்மகனை எனக்குக் கணவனாகக் கண்டுபிடித்துக் கொடு!''

பூதம் பெருமூச்சுவிட்டது. ''முதல் ஆசையே பரவாயில்லை. உன் நாய்க்குட்டி எங்கே?''

இந்தத் தேசத்தில் மட்டுமல்ல... உலகெங்குமே சிடுக்கான குடும்பப் பொறுப்புகளைப்

பெண்கள் மீது சுமத்துவதை ஆண்கள் பழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

வீ¢ட்டில் ஒரு பெண் வேதனையாக இருந்தால், அந்த வீட்டின் மொத்த சந்தோஷமும் பறிபோகும் என்பதை ஆண்கள் உணர வேண்டும்.

கொண்டாட்டங்களுக்காக அமைக்கப்பட்டவையே பண்டிகைகள். கால ஓட்டத்தில், அடிப்படை நோக்கம் தேய்ந்துபோய், வெறும் சடங்குகள் மட்டுமே நின்றுவிட்டதால்தான் பண்டிகைகள் பெண்கள் மீது பெரும் பாரமாக அழுத்துகின்றன.

அரசியலோ, ஆன்மிகமோ, எந்த அமைப்பாக இருந்தாலும் காலத்துக்கு ஏற்றாற்போல் அவ்வப்போது திருத்தி அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அதன் அடிப்படை, உயிர்ப்புடன் இருக்கும்.

பண்டிகைகளுக்கும் அந்த அவசியம் வந்துவிட்டது.

வெளியே மிதக்கும் விஷத்தைக் கவனமாக விலக்கினால்தான், உள்ளே ததும்பும் அமுதத்தை ருசிக்க முடியும்!

மூன்றாவது கோணம்

'அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறக்கும்!'

‘வாத்தியார் பிள்ளை மக்கு’ என்பது எவ்வளவு முட்டாள்தனமான கருத்தோ, அதே அளவு முட்டாள்தனமான கருத்துதான் இதுவும்.

இதை வேதவாக்காக எடுத்துக்கொண்டு, அப்பன் திருடன் என்பதால், அவன் மகனையும் திருடனாக நினைப்பது ஒருதலைப்பட்சமான முடிவு. உண்மையில் இந்த வாசகம், தந்தைகளுக்கு ஓர் எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

'வீட்டில் ஒரு குழந்தை உருவாகி வளர்கையில், அதைப் பற்றிய கவனத்தைவிட, உன்னைப் பற்றிய கவனம்தான் அவசியம். உன் குணநலன்கள்தான் அதன் மீதும் தொற்றிக்கொள்ளும். நீ பேணும் பண்பாடுதான் உன் குழந்தை மூலம் தொடரும். நீ ஒழுக்கமற்றவனாக இருந்துகொண்டு, உன் குழந்தையை ஒழுக்கமாக இருக்கச்சொல்லி வற்புறுத்தினால், அது எடுபடாது. நீ உதாரணமாக வாழ்ந்துகாட்டினால்தான் பலன் இருக்கும்' என்று தந்தைகளை எச்சரிப்பதற்காகச் சொல்லப்பட்ட வார்த்தைகள்தாம் அவை.

மற்றபடி, தந்தைகளை வைத்துப் பிள்ளைகளைப் பற்றித் தீர்ப்பெழுத முயல்வது அடிப்படையற்ற அபத்தமான காரியம்.

ஹிட்லரின் அப்பா, இன்னொரு ஹிட்லராக இருக்கவில்லை. புத்தரின் அப்பா, ஒரு புத்தராக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை!

நீண்ட நாள் நம்பிக்கைகள் சிலவற்றை சத்குரு அலசும் மேடை இது.

\ ... அமுதம் அருந்துவோம்