நாயகன் கார்ல் மார்க்ஸ்

அஜயன் பாலா

அ  வன் பாவம், வாய் பேச இயலாதவன். ஆனால், உழைப்பாளி. பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அவன் பர்ஸில் சொற்பமாகவே இருந்தது பணம். பேருந்தில் ஏறிய அவன் அருகில் வந்து நின்றான் டிப்டாப் ஆசாமி ஒருவன். கண்களில் கூலிங் கிளாஸ், கழுத்தில் மைனர் செயின் என பந்தாவான தோற்றம். ஆனால், அவன் செய்த காரியம்?

பேருந்தின் நெரிசல் வசதியாக இருக்க அந்த வாய் பேச இயலாத ஏழையின் பேன்ட் பாக்கெட்டுக்குள் இருந்த பர்ஸை அபேஸ் பண்ணிக்கொண்டு இறங்கி ஓடினான் டிப்டாப் ஆசாமி. சுதாரித்த ஏழை, தன் பர்ஸை மீட்கத் துரத்தி, டிப்டாப்பின் சட்டையைக் கொத்தாகப் பிடிக்க, இருவருக்கும் சண்டை. கூட்டம் கூடிவிட்டது.

சட்டென டிப்டாப், தனது பர்ஸை அந்த ஏழை திருடிவிட்டதாக உண்மையைத் தலைகீழாகப் புரட்டிப் போட, மொத்தக் கூட்டமும் அந்தப் பரிதாபத்துக்குரிய வாய் பேச இயலாதவனைச் சாத்துகிறது. பாவம், அவனால் உண்மையைச் சொல்லவும் வழியில்லை. சொன்னாலும், அது எடுபடாது. ஏனென்றால், அவனது தோற்றம் அப்படி. பொது ஜனங்களைப் பொறுத்தவரை, ஏழைதான் திருடுவான்.

இந்தத் தருணத்தில் பேருந்திலிருந்து இறங்கிய மூன்றாவது நபர் ஒருவர் அங்கே வருகிறார். அவருக்கு உண்மை தெரியும்.

இப்போது சொல்லுங்கள்... அந்த மூன்றாவது மனிதர் என்ன செய்ய வேண்டும்?

யார் குற்றவாளி என்ற உண்மையை ஊருக்கு உலகுக்குச் சொல்லி, அந்த ஏழையைக் காப்பாற்றி, டிப்டாப் திருடனை அடையாளம் காட்ட வேண்டியது, அவரது கடமை அல்லவா?

அதை அவர் செய்தார். அவர்தான்... கார்ல் மார்க்ஸ். அந்தச் சமயத்தில் அவர் செய்த புரட்சி, கம்யூனிசம்; அதற்காக அவர் மேற்கொண்ட பாதைக்குப் பெயர்தான்... மார்க்ஸியம்!

பேருந்தை, கால வெள்ளமாகவும்... டிப்டாப் ஆசாமியை முதலாளி எனப்படும் பூர்ஷ்வாக்களாகவும், அதிகாரமற்ற காரணத்தால் வாய் பேச இயலாதவனாகிப் போன அந்த ஏழையை, தொழி லாளியாகவும், பண்ணை அடிமை யாகவும் எனச் சற்றே மாற்றி, மேலே சொன்ன சம்பவத்தைப் பார்த்தால், உலக வரலாற்றில் மார்க்ஸின் பங்களிப்பு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர முடியும்!

யார், கார்ல் மார்க்ஸ்?

காலம் எப்படி கிறிஸ்துவுக்கு முன் - கிறிஸ்துவுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கப்பட்டதோ,

அப்படியே மனித குல வரலாற்றையும் மார்க்ஸுக்கு முன் - மார்க்ஸுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். அந்தளவு தன் சிந்தனைகளாலும், கோட்பாடுகளாலும் இந்த உலகத்தைச் சீரமைத்த சிற்பியாக இருந்தவர், கார்ல் மார்க்ஸ்!

‘‘மனித குல உயர்வுக்கும் சமூக மேன்மைக்கும் அர்ப்பணித்துக்கொள்ளும் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களின் சுமை நம்மை ஒருபோதும் அழுத்தாது.ஏனென்றால், அது எல்லோருக்காகவும் செய்கிற தியாகம்!’’ என அவரே சொன்னாலும், மனிதகுலமே ஒட்டுமொத்தமாக மண்டியிட்டு, மன்னிப்புக் கோர வேண்டிய அளவுக்குத் துன்பங்களையும் துயரங்களையும் கொண்டது மார்க்ஸின் வாழ்க்கை. அடுத்த நூற்றாண்டின் இதயங்களையும் கண்ணீரால் நனைக்கும்படியான அவரது வாழ்க்கை, 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப கால ஐரோப்பாவிலிருந்து துவங்குகிறது.

ஜெர்மனியின் மேற்கு எல்லைக்கும் பிரான்ஸின் கிழக்கு எல்லைக்கும் இடையே, முடிவற்ற நீல தாவணி போலப் பாயும் அழகிய ரைன் நதிக் கரை. இளம் பச்சை நிறக் கடலாக விரிந்து கிடக்கும் வயல்வெளிகளுக்கு நடுவே, மாளிகைகளும் கோபுரங் களுங்களுமாகக் காணப்படும் பழைமையான ‘ட்ரையர்’ நகரம். தேவாலய மணியோசைகள் கேட்டுக்கொண்டே இருக்கும் அந்த நகரத்தில், தடுக்கி விழுந்தால் இரண்டு பேர் காலில் விழ வேண்டும். ஒன்று, பாதிரியார், இன்னொருவர் புரட்சியாளர். அந்த அளவுக்குப் பாதிரிகளும் போராளிகளும் புழங்கிய மண்.

ஐரோப்பா முழுவதுமே பிரெஞ்சுப் புரட்சி காரணமாக, புதிய புதிய தத்துவங்களும்

கருத்துருவாக்கங்களும் பூத்துச் சொரிந்த காலம். கூடவே அரசின் அடக்குமுறையும் கடுமையாக இருந்தது. ஆகவே, பிரான்ஸ், ஜெர்மனி என இரு தேசங்களிலுமே அரசுக்கு எதிராகக் கொடிபிடித்தவர்கள் எல்லாம் நாடு கடத்தப்பட்டு, இந்த ட்ரையர் நகருக்குள் கொட்டப்பட்டனர். இவர்களால் ட்ரையர் நகரம் பரபரப்பின் மையமாக இருந்தது. மாலை நேரம் வந்துவிட்டாலே, மது விடுதிகளில் கருத்து மோதல்களைக் கேட்க கூட்டம் கூட ஆரம்பித்துவிடும். இரண்டு அரசாங்கங்களுமே, கருத்தியல்வாதிகளைக் கண்டு பயப்பட, அதனாலேயே மக்களிடம் அவர்கள் கதாநாயகர்களாக!

‘இனி இந்த உலகத்தை தத்துவங்கள்தான் ஆளும்!’ என எல்லோரும் உறுதியாக நம்பினர்.

வானில் அதிசயங்கள் ஏதும் நிகழ்ந்திராத இரவொன்றில், 1818-ம் ஆண்டு மே மாதம் 5-ம் நாள், ட்ரையர் நகரத்தின் பிராக்கன்ஸ் வீதியின் 664 இலக்கமிட்ட வீட்டில், ஹர்ஷல் மார்க்ஸ் மற்றும் ஹென்ரிட்டா எனும் யூதத் தம்பதியினருக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குப் பெயர்... கார்ல் மார்க்ஸ்!

ஹெர்ஷல் மார்க்ஸ், தன் இதயத்தில் வால்டேர், ரூசோ என யுகப் புரட்சியாளர்களின் கருத்துக்களை உள்வாங்கிய பிரெஞ்சுக்காரர். தாய் ஹென்ரிட்டாவோ, அடுப்படிக்குள்ளேயே தன் வாழ்நாளை அடக்கிவிட்ட யூத குடும்பப் பெண்மணி. ஜெர்மன் மொழி பேச வராத காரணத்தால், ட்ரையர் நகரத்தின் மேல் அவளுக்கு காரணமற்ற பயமும் கவ்வியிருந்தது.

மொத்தம் எட்டு குழந்தைகளைக் கொண்ட அவர்களது இல்லற வாழ்வில் கடைசியில் மிஞ்சியது என்னவோ, ஒரு ஆண் குழந்தையும் மூன்று பெண் குழந்தைகளும்தான். ஒரே ஆண் என்பதாலோ என்னவோ கார்ல் எப்பவுமே எல்லோருக்கும் செல்லம். அக்கா சோபியா,

தங்கைகள் எமிலி, லூயிஸ் எல்லோரும் தன்னைக் கண்டு பயப்படும்படியாக நடந்துகொள்வதில் அவனுக்கு ரொம்பப் பிரியம். வக்கீல் தொழிலில் வருமானம் தட்டுப்பட்டால், ஹெர்ஷல் மார்க்ஸ் தன் குழந்தைகளுக்கு கேக்குகள் வாங்கி வருவார். சிறுவனான கார்ல், தன் சகோதரிகளின் பங்கையும் தனதாக்கிக்கொள்ள சில தந்திரங்களை அடிக்கடி பயன்படுத்தி அதில் வெற்றியும் பெறுவான். தன் அழுக்குக் கைகளால் சகோதரி களின் கேக்கை அசுத்தமாக்குவது அதில் ஒன்று. அம்மாவின் கண்டிப் பான வளர்ப்பின் காரணமாக, சுத்தத்துக்குப் பேர்போன பெண் பிள்ளைகளைச் சுலபமாக ஏமாற்றினான் கார்ல்.

பேர்தான் வக்கீலே தவிர, ஹெர்ஷலுக்குப் பெரிதாக வழக்குகளே வரவில்லை. அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாட வேண்டிய பிழைப்பு. வழக்குகள் வராமல் இருப்பதற்குக் காரணம், தான் ஒரு யூதனாக இருப்பதுதான் என்பது புரியவே அவருக்கு வெகு காலமாயிற்று!

மதப் பற்று, அக்காலகட்டத்தில் சற்று கூடுதலாகவே இருந்தது. கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களிடத்தில் அது வெறியாகவே மாறியிருந்தது. யூதர்களை அவர்கள் விரோதிகள் போல் பார்த்தனர். யூதர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. தாங்கள்தான் மிகப் பழைமையானவர்கள் என்பதும், கிறிஸ்துவே தங்களது மதத்தில் பிறந்தவர்தான் என்பதும்தான் அவர்களது கர்வத்துக்குக் கார ணம். இதனாலேயே யூதர்களின் மேல் கிறிஸ்துவர்கள் மனதில் கடும் வெறுப்பு. பொருளாதாரத்தில் தங்களைவிட ஏழைகளாக இருந் தாலும் இந்த யூதர்களிடம் தலைக்கனம் மட்டும் அதிகமாக இருக்கிறதே, இதனை எப்படி அடக்குவது எனக் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள் உள்ளுக்குள் புகைந்துகொண்டு இருந்தனர். ட்ரையர் நகரத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த யூதர்களுக்கு, தங்களால் வருமானம் எதுவும் வந்துவிடாதபடி எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டனர். இதுதான் யூதரான ஹெர்ஷல் மார்க்ஸ் வக்கீல் தொழிலில் வழக்குகள் கிடைக்காமல், ஈ ஓட்டக் காரணம்!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஹெர்ஷல், குடும்பக் கஷ்டங்களுக்காக வேறு வழியில்லாமல் அதிர்ச்சியூட்டும் ஒரு முடிவுக்கு வந்தார். மனைவிக்கு, கணவனின் அந்த முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும், குழந்தைகளின் எதிர்காலத்துக்காக, கிறிஸ்துவ மதத்துக்கு மாறும் முடிவுக்குச்

சம்மதித்தார். ஒரு பாதிரியின் துணையோடு ப்ராட்டஸ்டன்ட்டுக்கு மாறியது குடும்பம். ஹெர்ஷல் மார்க்ஸ் என்ற பெயர் ஹென்ரிச் மார்க்ஸ் ஆனது. மதமும் பெயரும் மாறிய வேகத்தில், அவர்களது வாழ்க்கையின் நிறமும் மாறத் துவங்கியது. வழக்குகளும் வந்து குவிய ஆரம்பித்தன. காலங்கள் மாறின. அவர்களது வீட்டின் வண்ணமும், வாழ்வின் உயரமும் மாறியது.

இப்போது ஹென்ரிச் மார்க்ஸ், பிரபலமான வக்கீல். ஆனாலும் அவருக்கு, தான் மதம் மாறிய வேதனை, உள்ளூர இம்சித்தது. தாயார் ஹென்ரிட்டாவும் மனதளவில் ஒரு யூதப் பெண்ணாகவே இருந்தார். இதனால் ட்ரையர் நகரத்தின் மீதான அவளது பயம் இன்னும் இன்னும் அதிகமானது. மகன் கார்ல் மார்க்ஸை எப்படியாவது நன்கு படிக்கவைத்து, நல்ல குடும்பத் தலைவனாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் அதிகமாக இருந்தது. ஆனால் அப்பாவுக்கோ, கார்லை ஊர் மெச்சும் ஒரு விஞ்ஞானியாக்கி, அறிவிலும் அந்தஸ்திலும் அனைத்து கத்தோலிக்கர்களையும்விட மிக உயர்ந்த மனிதனாக்க வேண்டும் என்ற விருப்பம்.

கார்ல் மார்க்ஸ் இருவரது எண்ணங்களிலும் மண்ணை அள்ளிப் போடப்போகிறார் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியாது!

\ (சரித்திரம் தொடரும்)