ஆலயம் ஆயிரம் (1)

காஷ்யபன்

ஆ  ண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், ஆலயங்களில்தான் அவனது சாந்நித்யம் நிறைந்து விளங்குகிறது. எனவேதான் ஆலயங்கள், ஆன்மா லயிக்கிற இடங்கள்!

திருத்தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு, தீர்த்தங்களில் நீராடி இறைவனைப் பணிந்தால், உடல் தூய்மையுறும்; மனம் தெளிவு பெறும். அத்தனை கோடி இன்பங்களும், நன்மைகளும், மேன்மைகளும் அரவணைக்கும். இயன்றபோதெல்லாம் இந்தத் தலங்களுக்குப் புனித யாத்திரை மேற்கொண்டு அருள் பெற்று வர வேண்டும் என்ற விழைவைப் பெறவே...

ஆலயம் ஆயிரம் ஆரம்பம்!

கோலாப்பூர் மகாலட்சுமி

அது யுகத்துக்கு ஒரு முறை நேரும் பிரளயக் காலம். ஞாலத்தின் மற்ற பகுதிகளை எல்லாம் பொங்குமாங்கடல் கொண்டுவிட, ஒரே ஒரு பகுதியை மட்டும் மகாலட்சுமி தன் கரங்களின்

வலிமையாலும் கருணை நிறை அருளினாலும், நீரில் மூழ்காமல் மேலே உயர்த்தி நிறுத்திக் காத்தாள். அந்தப் பகுதிக்குக் ‘கரவீர்’ என்பது காரணப் பெயர். ‘கர’ என்றால் கை. ‘வீர்’ என்றால் வீரம். மேன்மைகள் மிக்க கரவீர், இன்றைக்கு கோலாப்பூர் எனக் கொண்டாடப்படுகிறது. இங்கு திருமகளான மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்!

கோலாசுரன் என்னும் அசுரன், இந்த இடத்தில் கோலோச்சிக்கொண்டு இருந்தான். எளியவர் அனைவருக்கும் எண்ணிலடங்கா இன்னல்கள் விளைவித்தான். திக்கற்றவர்களுக்குத் தெய்வத்தையன்றி வேறு புகலேது? அல்லலுற்றவர்கள் அன்னை மகாலட்சுமியை வேண்டினர்.

அன்னை அப்போது வைகுந்தவாசனுடன் ஊடல்கொண்டு, தனிமை நாடி, பஞ்சகங்கை நதி பாயும் இந்த இடத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அகிலத்தையே தன் அன்பாலும் அருளாலும் அரவணைக்கும் அன்னை, வேதனையுற்றோரின் வேண்டுகோளைச் செவிமடுக்காமல் இருப்பாளா?

கோலாசுரனின் கொட்டங்கள் பற்றி அறிந்தாள் அன்னை. போருக்குப் புறப்பட்டாள். கதாயுதம் ஏந்தி, சிங்கத்தின் மீது ஆரோகணித்துச் சென்று அசுரனை எதிர்த்தாள். பிரளயத்தையே எதிர்த்த வலுவான கைகளுக்கு எதிரில் அசுரன் பஞ்சானான்.

அன்னை போரிட்டு அசுரனை வதைத்த நிலம், சேறும் சகதியுமாக ஒரு குளம் போல் தாழ்ந்துவிட்டது. அந்தப் பள்ளத்திலேயே அன்னை சந்நிதி கொண்டாள். ஒரு குளத்தை விரும்பி அன்னை கோயில் கொண்டதால், அந்த இடம் கரவீர் என்ற பெயரில் இருந்து மாறி, குளபுரம் என்றானது. பின்னாளில், குளபுரம், கொல்லாபுரமாகி, இன்றைக்கு கோல்ஹாபூர் (பேச்சுமொழியில் கோலாப்பூர்) என்று வழங்கப்படுகிறது.

கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் பஞ்சகங்கை நதி பாய்கிறது. படித்துறையில், காசியில் இருப்பது போன்றே அத்தனை கடவுளருக்கும் ஆலயங்கள்.

கி.மு.109-ம் ஆண்டில் கொங்கணத்திலிருந்து கோல்ஹாபூருக்கு வந்த கர்ணதேவ் என்ற மன்னன், அடர்ந்த காடுகளால் சூழப்பட்டு மிகச் சிறிய கோயிலாக இருந்த அன்னையின் ஆலயத்தைக் கண்டான். பக்தி மேலீட்டால் காடுகளையெல்லாம் அழித்து, ஆலயத்தை அனைவரும் காணும்படி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தான்.

கி.பி.9-ம் நூற்றாண்டில் சாளுக்கிய மன்னர்கள், அன்னையின் ஆலயத்தை விரிவுபடுத்திக் கட்டினார்கள். அடுத்து வந்த அரசர்கள் வைரங்களாலும், வைடூரியங்களாலும், பொன் ஆபரணங்களாலும் அன்னையை அலங்கரித்து அழகு பார்த்தனர். பரிவார தேவதைகளுக்கும் சந்நிதிகள் அமைத்தனர். அப்போதிலிருந்து ஆலயத்தின் பொலிவு கூடிக்கொண்டே இருக்கிறது.

ஆலயத்துக்கு நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள். மகாத்வாரம் என்னும் பிரதான மேற்கு வாசல் வழியே கோயிலுக்குள் நுழைந்தால், அணிவகுத்து நிற்கும் அழகான தீப ஸ்தம்பங்களைக் காணலாம். அதை அடுத்து வழவழப்பான, சதுரமான கருந்தூண்கள் தாங்கும் கருட மண்டபம். இங்கு கருவறையை நோக்கியவண்ணம் கருடர் எழுந்தருளியிருக்கிறார். கருடரைக் கடந்தால், இன்னுமொரு கல் மண்டபத்தில் கணபதி, அன்னையை நோக்கி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கணபதியை வணங்கிவிட்டு முன்னேறினால், கருவறை. அங்கு யுகம் யுகமாய் அருள் பாலிக்கும் அன்னை மகாலட்சுமி.

ஒரு சதுர பீடத்தின் மேல் நின்ற திருக்கோலத்தில் அன்னை எழுந்தருளியிருக்கிறாள். அன்னையின் இந்த அழகுச் சிற்பம், அரிதினும் அரிதான கரும் ரத்தினக் கல் ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் அன்னைக்கு ஆதிசேஷன் குடை பிடித்து நிழல் தருகிறான். நான்கு திருக்கரங்கள். ஒன்றில் கதையைத் தாங்கி, அதைத் தரையில் ஊன்றியிருக்கிறாள். இன்னொரு திருக்கரத்தில் மாதுளங்கனி. மற்றுமொரு கரம் கேடயம் தாங்குகிறது. பிறிதொரு கரத்தில் அமுதசுரபியை ஏந்தி, அருளே வடிவாகக் காட்சி தருகிறாள் அன்னை.

அகங்குளிர அன்னையைத் தரிசித்துவிட்டு வலம் வந்தால், மகாலட்சுமித் தாயாரின் வலப்புறத்தில் அன்னை மாகாளியும், இடப்புறத்தில் அன்னை சரஸ்வதியும் தனித்தனிச் சந்நிதிகளில் தரிசனம் தருகிறார்கள்.

கருவறைக் கோபுரம் மகாராஷ்டிர பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. வேங்கடாசலபதியும், காத்யாயனியும், கௌரிசங்கரும் கோபுர கோஷ்டங்களில் கோயில்கொண்டு இருக்கிறார்கள்.

நவக்கிரகங்கள், சனீஸ்வரர், காசி விஸ்வநாதர், பாண்டுரங்கன், பவானி, ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்ச நேயர் ஆகியோர் பரிவார தேவதைகளாகத் தரிசனம் தரும் ஆலயத்தின் பிராகாரத்தில், பாதாளத்தில் பதுக்கிவைக்கப்பட்ட பூமாதேவியை வராகமூர்த்தி மீட்டு வரும் நிலையில் அரிதான சிற்பம் ஒன்று அமைந்திருக்கிறது.

கருவறைக் கோபுரத்தின் சுற்றுச் சுவரில், நேர்த்தியான நடன மாதர்களின் சிற்பங்கள் கண்களைக் கவர்கின்றன.

ஒவ்வொரு வெள்ளியன்றும், பௌர்ணமி தினத்தன்றும் உற்சவ அன்னை ஆலயப் பிராகாரத்தில்

திருவுலா வருகிறாள். ஆண்டுக்காண்டு கொண்டாடப்படும் கோயிலின் கோலாகலத் திருவிழா, நவராத்திரித் திருவிழா.

அன்னையின் கர்ப்பக்கிரகத்தில் ஒரு பலகணி இருக்கிறது. அதன் வழியாக, அந்திச் சூரியன் தன் பொற்கதிர்களால் ஆண்டுக்கு இரு முறை அன்னையைத் தீண்டித் தரிசித்துப் பணிந்து அகமகிழ்கிறான்.

மார்ச்சிலும் செப்டம்பரிலும் நிகழும் இந்த அரிய நிகழ்வின்போது, அன்னை எந்த அலங்காரமும் இன்றி ஆதவன் ஒளியில் அபாரமாகக் காட்சி தருகிறாள். ‘கதிர் விழா, கதிர் விழா’ என்று இந்த வைபவத்தைக் காண மக்கள் அலை அலையாக வந்து அன்னையைத் தரிசித்து ஆனந்தம் அடைகிறார்கள்.

மாலை நேரங்களில் பெண்கள் திரளாகக் கோயிலுக்கு வந்து அன்னையைத் தரிசித்துவிட்டு, ஆலயப் பிராகாரத்தில் அமர்ந்து, தாய் வீட்டுக்கு வந்திருப்பதைப் போலக் கொஞ்சிப் பேசிக் குதூகலமாகப் பொழுதைப் போக்குகிறார்கள்.

கோடிக்கணக்கான மக்கள் மீது கருணை செலுத்தி அனைவரையும் ஆசீர்வதித்துக் காக்கும் கோல்ஹாபூர் மகாலட்சுமியை வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டும். அது இம்மைக்கும் நல்லது; ஏனை மறுமைக்கும் உகந்தது!

உங்கள் கவனத்துக்கு...

தலத்தின் பெயர்: கோலாப்பூர்

அன்னையின் திருநாமம்: மகாலட்சுமி

எங்கே உள்ளது?: மகாராஷ்டிராவில்.

எப்படிப் போவது?: மும்பை, பெங்களூரில் இருந்து ரயில் வசதி உள்ளது. மும்பை செல்லும் ரயிலில் சோலாப்பூரில் இறங்கி, அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

எங்கே தங்குவது?: கோலாப்பூரில் குறைந்த செலவில் தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம்: காலை 5:00 மணியிலிருந்து இரவு 10:30 வரை இடைவிடாத தரிசனம்!

\ தரிசிப்போம்...