Published:Updated:

நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

Published:Updated:
நாய் மீது பைக் மோதியதற்கு இரட்டை கொலை..! திருச்சி ரவுடியின் திகில்

நாய் மீது பைக் மோதிய விவகாரத்தில் இரண்டு கொலைகள் நடந்துள்ளன. மேலும் தொழில் போட்டி காரணமாக திருச்சியில் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.  

 திருச்சியை சேர்ந்தவர் வெள்ளச்சாமி என்ற ராஜ். பைனான்சியர். இவரிடம் கடந்த 2013ம் ஆண்டு திருச்சி, குழுமணியை சேர்ந்த வீரபத்திரன் என்ற ராஜேந்திரன், தங்க நகைகளை அடகு வைக்க சென்றுள்ளார். அப்போது அந்த நகைகள் போலி என்று தெரியவந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வெள்ளச்சாமி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஜியர்புரம் போலீஸார் விசாரணை நடத்தி ராஜேந்திரனை கைது செய்தனர். 

 இந்த வழக்கில் ராஜேந்திரனுக்கு திருச்சி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்நிலையில் 24.4.2016ல் திருச்சி சிறையில் சிறுநீரக கோளாறில் ராஜேந்திரன் இறந்தார். இதன்பிறகு ராஜேந்திரன் தரப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், வெள்ளச்சாமி கொலை வழக்கில் ராஜேந்திரனுக்கு எதிராக திருச்சி, மூலக்குடியை சேர்ந்த பைனான்சியர் ராமஜெயம் சாட்சி அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரனின் தம்பி மண்ணு என்கிற மகாமுனி, ராஜேந்திரனின் மகன் விக்னேஷ், ரவுடி நாகராஜன் மூலம் கடந்த 29.5.2016ல் ராமஜெயத்தை கொலை செய்தனர்.  இதுதொடர்பாக மண்ணு என்கிற மகாமுனி, விக்னேஷ், நாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நாகராஜன்  ஜாமீனில் வெளியே வந்தார். நாகராஜன் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. பாண்டிச்சேரியிலிருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து திருச்சியில் கள்ள மார்க்கெட்டில் நாகராஜன் விற்று வந்தார். அவருக்குப் போட்டியாக  திருச்சி குழுமணியை சேர்ந்த அண்ணன், தம்பிகளான ராஜா, பூபதி, கோபி ஆகியோர் கள்ளமார்க்கெட்டில் மது பாட்டில்களை விற்றனர். இது நாகராஜன் தரப்புக்கும், ராஜா தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சமயத்தில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் தினேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது  ராஜாவின் நாய் மீது மோதியுள்ளார். இதில் ராஜாவுக்கும், தினேசுக்கும் தகராறு ஏற்பட தினேசுக்கு ஆதரவாக நாகராஜன் களமிறங்கியுள்ளார். நீறுப்பூத்த நெருப்பாக இந்த சம்பவம் இருந்த நிலையில் நவம்பர் 2ம் தேதி ராஜா, பூபதி, கோபி மற்றும் அவர்களது ஆதரவாளர்களான வடிவேல், அன்பழகன் ஆகியோர் குழுமணி பகுதியில் உள்ள பாலத்தில்  பேசி கொண்டு இருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் ராஜா, பூபதியை கொடூரமாக கொலை செய்தது. வடிவேலுக்கு வெட்டு காயம் விழுந்தது. மற்றவர்கள் தப்பிச் சென்று விட்டனர். 

இதுதொடர்பாக ஜியர்புரம் போலீஸார், நாகராஜன், கோபால், அரசு ஊழியர் தினேஷ், ஏழுமலை ஆகியோரை தேடி வந்தனர். இந்நிலையில்ல் கும்பகோணம் நீதிமன்றத்தில் இவர்கள் சரண் அடைந்தனர். இதன்பிறகு அரசு ஊழியர் தினேசை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். இந்த கொலைக்கு கூலிப்படையாக செயல்பட்டது நெல்லை மாவட்டம், தாழையூத்தை சேர்ந்த நவநீதன், வீரவநல்லூரை சேர்ந்த கருத்தபாண்டி என்பது தெரிந்தது. அவர்களையும் போலீஸார் கைது செய்தனர். திருச்சியில் ரவுடி நாகராஜனுக்கு கூலிப்படையாக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் செயல்படுவது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நவநீதன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன" என்றனர். 

நமது நிருபர்