Published:Updated:

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

Published:Updated:
ஜான்சிராணியை ஏன் நாம் கொண்டாடுகிறோம் தெரியுமா? #HBDJhansiRani

ந்தியாவில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போரிடத் துணிந்தவர்களின் முன்னோடி, ஜான்சிராணி லட்சுமிபாய். 1835-ம் ஆண்டு நவம்பர் 19-ல், மௌரியபந்தர்-பகீரதிபாய் தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர். பெற்றோர் வைத்த அன்புப் பெயர் மணிகர்ணிகா. குடும்பத்தில் எல்லோரும் 'மனு' என்று செல்லமாக அழைத்தனர். ஆனால், அம்மாவின் பேரன்பை முழுமையாகப் பெறும் அதிர்ஷ்டம் அவருக்கு இல்லாமல் போகும் என அவர் நினைக்கவில்லை. நான்கு வயதிலேயே தன் அம்மாவை இழந்தார். மராத்திய வீர மரபில் பிறந்த மணிகர்ணிகா, விளையாடும் வயதிலேயே வாள்வீச்சு, குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல் போன்ற வீரக் கலைகளைப் பயின்று, ஆண் வீரர்களையும் விஞ்சும் திறன் பெற்றார்.

  வீரமங்கை மணிகர்ணிகாவை ஜான்சியின் இளவரசர் கங்காதர ராவ் நெவல்கர் திருமணம் செய்துகொண்டார். அன்றிலிருந்து லட்சுமிபாய் என்று அழைக்கப்பட்டதோடு, ஜான்சியின் ராணியாகவும் ஆனார். இந்த இனிய தம்பதிக்கு, ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அதற்கு தாமோதர் ராவ் எனப் பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி, விரைவிலேயே மரணித்துவிடும் என்று அவர்கள் நினைக்கவில்லை. நான்கு மாதங்களிலேயே அந்தக் குழந்தை இறந்தது. உடனே ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர். இந்து மரபின்படி அந்தக் குழந்தை மன்னர் தம்பதியரின் சட்ட வாரிசாகவே இருந்தது. அதற்கு தாமோதர் ராவ் என்றே பெயர் சூட்டினர். பெற்ற குழந்தையின் இழப்பிலிருந்து மன்னர் குடும்பத்தினர் மீண்டுவந்தபோதிலும் தன் மகனின் இழப்பின் துயரத்திலிருந்து மீளமுடியாமல் உடல் நலமிழந்த கங்காதர ராவ், 1853, நவம்பர் 21-ல் இறந்தார்.

மன்னரின் மறைவுக்குப் பின், வளர்ப்புமகன் தாமோதர ராவை ஆட்சியில் அமர்த்த எண்ணினார், ஜான்சிராணி. ஆனால், அப்போதைய ஆங்கிலேய ஆளுநர் டல்கௌசி, பிரிட்டிஷ்  கிழக்கிந்தியக் கம்பெனியின் 'அவகாசியிலிக் கொள்கை'யின்படி, தத்துப்பிள்ளையை அதிகாரபூர்வமாக ஏற்க முடியாதென மறுத்தார். ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு
தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி, ஜான்சி கோட்டையைத் தமது ஆட்சிக்கு உட்படுத்த முடிவெடுத்தனர் ஆங்கிலேயர். அதன்படி, 1854-ம் ஆண்டு ராணி லட்சுமிபாய்க்கு 60,000 ரூபாயை ஓய்வூதியமாகக் கொடுத்து, கோட்டையைவிட்டு வெளியேறச் சொன்னார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

1857-ம் ஆண்டு மே 10-ம் நாள், இந்தியக் கிளர்ச்சி மீரட்டில் ஆரம்பமானது. காரணம், போர் வீரர்களுக்குப் புதிதாக வழங்கப்பட்ட துப்பாக்கிக் குண்டுகளில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு பூசப்பட்டதால் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில், ஆங்கிலேயர்கள் இந்தியக் கிளர்ச்சி சம்பந்தமாகவே கவனம் செலுத்தியதால், இவர்களது தொல்லை இல்லாமல் இராணி இலட்சுமிபாய் ஜான்சியை ஆட்சி செய்தார். வடமத்திய இந்தியாவில் ஜான்சி அமைதியான பிரதேசமாக இருந்தது என்பதைக் காட்டுவதற்காகவும், ஜான்சி எந்த விதமான முற்றுகையை எதிர்கொள்வதற்கான அபாயத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் இராணி இலட்சுமிபாய், 'ஹால்டி' குங்குமப் பண்டிகையை ஏற்பாடு செய்தார். மக்கள் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆங்கிலேயர்களோ, ராணி லட்சுமிபாய் எந்த நேரத்திலும் தம்மை எதிர்க்கக்கூடும் என்ற அச்சத்திலேயே இருந்தனர். இதனால் ஆங்கிலேயர்கள் 1857-ம் ஆண்டு, ஜூன் 8-ம் நாள் ஜோக்கன் பாக்கில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரிகளைப் படுகொலை செய்ததில் இராணி லட்சுமிபாய்க்கும் பங்கு உள்ளதாகப் பொதுமக்களிடம் கூறி, ராணி லட்சுமிபாய் மீது அவர்கள் வைத்திருந்த மதிப்பைச் சீர்குலைத்தனர்.

இதைக் காரணமாக வைத்து, 1858-ம் ஆண்டு மார்ச் 23-ல் ஹீரோஸ் தலைமையில் ஆங்கிலேயர்களின் படை ஒன்று ஜான்சியைக் கைப்பற்றுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஜான்சியின் படைகளுக்கு உதவி செய்வதற்காகத் தாந்தியா தோபேயின் தலைமையில் சுமார் 20 ஆயிரம் பேரைக் கொண்ட படை அனுப்பி வைக்கப்பட்டது. ஆனாலும் அப்படையின் ஆயுதங்கள் ஆங்கிலேயர்களின் படையுடன் இணைந்த காரணத்தினால், தாந்தியா தோபேயினால் ஜான்சி ராணிக்கு உதவ முடியவில்லை. தாந்தியா தோபேயும், பான்பூர் மன்னரும் வரும் வழியில் தங்களது ஆயுத வண்டிக்காக காத்திருந்த சமயம், 1,000 பேர் கொண்ட ஹீரோஸ் தலைமையிலான குதிரைப்படை, துப்பாக்கிகளால் அவர்களைத் தாக்கி 1,500 ஜான்சி வீரர்களைக் கொன்றனர். மாவீரன் தாந்தியா தோபேயும் மிகுந்த மனவருத்தத்துடன் புறமுதுகிட நேரிட்டது. பின்னால் வந்த தாந்தியா தோபேயின் ஆயுத வண்டியும் கொள்ளையடிக்கப்பட்டு,
பாதுகாவலர்களும் கொல்லப்பட்டனர். ஜான்சி ராணிக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், அவருக்கே எதிராக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.

ஆயுதங்கள் மற்றும் படை வீரர்களின் பலம் இழந்த நிலையிலும் ஜான்சிராணி பிரிட்டிஷாரிடம் அடிபணிய மறுத்தார். ஆங்கிலேயர்களால் ஜான்சியைவிட்டு வெளியேறச்சொல்லி பிறப்பித்த ஆணை, ஜான்சியை எழுச்சியுறச் செய்தது. தனது நிலையை வலுப்படுத்தத் தொடங்கினார் லட்சுமிபாய். அதில் வீரம் மிக்க பெண்கள் படையும் இடம்பெற்றது. அண்டை நாடுகளான ஓர்ச்சா மற்றும் டாடியா மீது படையெடுத்து, அந்த நாட்டு வீரர்களையும் சேர்த்துக்கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்தார். தமது படை வீரர்களை முன்னின்று வழி நடத்திச்சென்று பெரும் ஆற்றலுடனும் மிகுந்த துணிச்சலுடனும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். மூன்று நாட்கள் கடுமையான போருக்குப் பின், அத்துமீறி நுழைந்த ஆங்கிலேயர்கள், தமது பெரும் படையுடன் நகருக்குள் நுழைந்தனர்.

கடுங்கோபத்திலிருந்த ஆங்கிலேயர், அரண்மனைக்குள் புகுந்து விலைமதிப்பற்ற பொன்னையும் பொருளையும் கொள்ளையடித்ததோடு, பெண்களுக்கும் இன்னல்கள் விளைவித்தனர். ஜான்சி ராணி 1858-ம் ஆண்டு ஏப்ரல் 4-ம் நாள் இரவு, தனது மகனுடன் மதில் மேலிருந்து பாய்ந்து தப்பித்தார். அதிகம் பெண்களைக்கொண்ட பாதுகாப்புப் படையுடன் நகரத்தை விட்டுச் சென்றார்.

இராணி இலட்சுமிபாய், தாமோதர ராவுடனும் தமது படைகளுடனும் கல்பிக்குச் சென்று, தாந்தியா தோப்பேயின் படையுடனும் ராவ் சாஹிப் பேஷ்வாவின் படையுடனும் ஏனைய புரட்சிப் படைகளுடனும் இணைந்து, குவாலியரின் மகாராஜா ஜயாஜிராவ் சிந்தியாவின் படையைத் தோற்கடித்து, குவாலியரின் கோட்டை ஒன்றைக் கைப்பற்றினார். பிறகு, ஆங்கிலேயப் படை குவாலியரைக் கைப்பற்ற முகாமிட்டது. 1858-ம் ஆண்டு, ஜூன் 17-ல், 'கோட்டாகி சேராய்' என்ற இடத்தில் அவர்களை எதிர்த்தார். வீரத்தின் சக்தியாக நின்று போரிட்ட ஜான்சி ராணி, பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்க்க முடியாமல் படுகாயம் அடைந்து, வீரமரணம் அடைந்தார். ஆண் வேடம் அணிந்திருந்ததால், வீழ்ந்தது ஜான்சி ராணிதான் என்று ஆங்கிலேயருக்கு தெரியவில்லை. அவரது உடல் உடனடியாக பூல்பாக் என்ற இடத்தில் ஒரு குடிசையோடு ராணியின் படையைச் சார்ந்த ராமச்சந்திரராவால் தகனம் செய்யப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பின்னர் குவாலியரை ஆங்கிலேயர் படை கைப்பற்றியது.

பிற்காலத்தில், ஜான்சியைக் கைப்பற்றி ஆங்கிலேய கொள்ளைக்காரர்களை விரட்டியடிக்கவும் பின் வந்த தலைமுறைகளுக்கு சுதந்திர வேட்கையை, துணிவை, நெஞ்சுரத்தை விதைத்த வீரத்திலகம் ஜான்சி ராணியின் மாவீரத்தைப் போற்றுவோம்... என்றும் நன் நினைவில் ஏற்றுவோம்!

- கே.ஆர்.ராஜமாணிக்கம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism