சினிமா, வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமில்லாமல், பல்வேறு சமூகக் கருத்துகளையும் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக பெரியவர்களை மையப்படுத்தியே அதிகமாக வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில் சிறுவர்களுக்கும், அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் பயன்தரும் பல திரைப்படங்களும், சினிமா பாடல்களும் வெளிவந்துள்ளன. அவற்றில் எல்லாத் தலைமுறை குழந்தைகளும் அவசியம் கேட்க வேண்டிய தமிழ் சினிமா பாடல்கள் பல இருந்தாலும், அவற்றில் சிறந்த 10 பாடல்களின் தொகுப்பு:
1. நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே!
படம்: நம் நாடு
பாடலாசிரியர் : வாலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துக்களில் சில...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே....
பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன்
துணையாக கொண்டு நீ நடை போடு இன்று
உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று.....
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
2. நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி!
படம் : பெற்றால்தான் பிள்ளையா
பாடலாசிரியர்: வாலி
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
3. திருடாதே... பாப்பா திருடாதே...!
படம் : திருடாதே
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
திருடாதே... பாப்பா திருடாதே...
வறுமை நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனா...
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது...
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
4. சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா!
படம் : அரசிளங்குமரி
பாடலாசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி - உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க - உன்தன்
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
5. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா!
படம் : அன்பு எங்கே
பாடல் ஆசிரியர் - கண்ணதாசன்
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
ஆனா ஆவன்னா இனா ஈயன்னா
உனா ஊவன்னா ஏனா ஏயன்னா
ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன் பேரென்ன?
சொல்லு வள்ளுவன்
இனா ஈயன்னா எதையும் வெல்லும் பொருளென்ன?
சொல்லு, அன்பு
உனா ஊவன்னா உலக உத்தமன் பேரென்ன?
சொல்லு, காந்தித் தாத்தா
எனா ஏயன்னா
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்----------
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
6. சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!
படம் : உலகம் சுற்றும் வாலிபன்
பாடல் ஆசிரியர் : புலமைபித்தன்
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தம்மை
துன்பம் எங்கே நெருங்கும்
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
7. பேசும் மணிமுத்து ரோஜாக்கள்!
படம் : நீலமலர்கள்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
தேசத்தைக் காத்திடும் வீரர்கள்
தினமும் பொழியும் மேகங்கள்
பள்ளிப்படிப்பினில் மேதைகள்
பக்குவம் வந்ததும் ஞானிகள்
நல்ல வழிகளை தேடுங்கள்
புதிய உலகம் காணுங்கள்
நாளைக்கு தேசம் உன்னிடம்
நம்பிக்கை கொள்வது அவசியம்
நெஞ்சம் வளர்ந்தால் லாபங்கள்
வஞ்சம் வளர்ந்தால் பாவங்கள்
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
8. ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தாராம்!
படம் : ராஜா சின்ன ரோஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
விணை விதைத்தவன் விணை அருப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
நன்மை ஒன்று செய்தீர்கள்
நன்மை விளைந்தது
தீமை ஒன்று செய்தீர்கள்
அட தீமை விளைந்தது
தீமை செய்வதை விட்டுவிட்டு
நன்மை செய்வதை தொடருங்கள்
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
9. உன்னால் முடியும் தம்பி தம்பி!
படம் : உன்னால் முடியும் தம்பி
பாடலாசிரியர்: வைரமுத்து
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிக்கை கொண்டு வருவாயே
உனக்கென்ன ஒரு சரித்திரமே எழுதும் காலம் உண்டு
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்
கீழே இருக்கும் வீடியோவில், இப்பாடலை முழுமையாகக் காணலாம்:
10. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!
படம் : குழந்தையும் தெய்வமும்
பாடலாசிரியர்: வாலி
இப்பாடலில் வரும், சிறந்த கருத்துகளில் சில...
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது - பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது
கீழே இருக்கும் வீடியோவில் இப்பாடல் முழுமையையும் காணலாம்:
- கு.ஆனந்தராஜ்