Published:Updated:

என் ஊர்!

''என்னிடம் மிச்சமிருக்கும் ராயபுரம் அடையாளம்!''

என் ஊர்!

''என்னிடம் மிச்சமிருக்கும் ராயபுரம் அடையாளம்!''

Published:Updated:
##~##

ணையம் மூலம் பல லட்சம் இதயங்களை இணைத்தவர், இளைய தலைமுறை தொழில் முனைவோருக்கான விருதுகள் பல பெற்றவர் என்று ஏராளப் பெருமைகளுக்கு உரியவர் முருகவேல் ஜானகிராமன். பாரத் மேட்ரிமோனி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஒ.வான இவர், தான் பிறந்து வளர்ந்த ராயபுர அனுபவம் குறித்துப் பேசுகிறார்.

 ''அப்பா-அம்மாவுக்குச் சொந்த ஊர் செங்கல்பட்டு. வேலை காரணமாக ராயபுரத்தில் குடியேறினார்கள். 161, ஆதாம் சாயபு தெரு, ராயபுரம். இது, 23 வருடங்கள் நாங்கள் வாழ்ந்த வீட்டின் முகவரி. அப்போது இங்கு குடியிருந்த 14 ஒண்டுக் குடித்தனங்களில் நாங்களும் ஒரு குடித்தனம். ஒரு பக்கம் கோலி, பம்பரம் விளையாடும் சிறுவர்கள், மறுபுறம் குழாயடிச் சண்டைகள், திண்ணை அரட்டை கச்சேரிகள் என்று எப்போதும் ஏரியா பரபரப்பாக இருக்கும். அன்று திருவிழாபோல் இருந்த இடம் இன்று ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது. அதுதானா இது என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த ஏரியாவே பெரும்பெரும் கட்டடங்களாக மாறிக் கிடக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

டி.வி. பார்ப்பது, ஏதாவது ஒரு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவது என்று இன்றைய ராயபுர சிறுவர்களின் பொழுதுபோக்கு அன்றைய எங்களின் பழக்க வழக்கங்களில் இருந்து அப்படியே உல்டாவாக மாறி உள்ளன. இன்றைய ராயபுர கடைகளில் பம்பரம் விற்பனைக்குக் கிடைக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அப்போதைய ராயபுர மக்களுக்குள் அடிக்கடி சண்டைகள் வரும். ஆனால், வெளி நபர்களால் அங்குள்ள வர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உதவிக்கு ஓடி வருவது அதே சண்டை போட்ட நபர்கள் தான். இப்போது சண்டைகளும் குறைந்து விட்டன. பிரச்னை என்றால் உதவும் மனிதர் களும் குறைந்துவிட்டனர்.

அப்போது என் அப்பாவுக்குத் துறைமுகத்தில் மூட்டை தூக்கும் வேலை. அந்த வருமானத் தில்தான் நானும் அண்ணனும் படித்தோம். 8-ம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகே இருந்த அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் அந்த பள்ளியே இன்று இல்லை. 9 முதல் 12-ம் வகுப்பு வரை மண்ணடியில் இருக்கும் முத்தியால்பேட்டை பள்ளியில் படித்தேன். 10-ம் வகுப்பு வரை நன்றாகப் படித்ததால்,       1-ல் ஃபர்ஸ்ட் குரூப் கிடைத்தது. ஆனால் நான் படித்த பள்ளியில் 1-ல் தமிழ் மீடியம் கிடையாது. வேறு வழியில்லாமல் ஆங்கில வழியில்தான் படித்தேன். 10-ம் வகுப்பு வரை மனப்பாடம் செய்து ஆங்கிலத் தேர்வுகளை எழுதிய எனக்கு, தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களையும் ஆங்கிலத்திலேயே படிக்க வேண்டிய சூழல். அந்த நாட்களை இன்று நினைத்தாலும் மனம் கலவரம் ஆவதைத் தவிர்க்க முடிய வில்லை. இயற்பியல், வேதியியல் என்று ஒவ்வொரு பாடத்துக்கும் தமிழ் மீடியம் புத்தகம் வாங்கி அர்த்தம் புரிந்து படித்த பிறகே ஆங்கில வழிப் புத்தகங்களை படித்துத் தேர்வு எழுதினேன். 2-வில் குறைவான மார்க்தான். ஆனால், அதற்கு நான் உழைத்த உழைப்பு இரு மடங்கு.

என் ஊர்!

சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் வேலை செய்து இருக்கிறேன். பல நாட்டு நண்பர்களுடன் கலந்துரையாடுகிறேன். பள்ளி, கல்லூரி என விழா மேடைகளில் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால், ஆங்கிலம் பழகாத அன்றைய ராயபுரம் பள்ளி நாட்களை இன்று நினைத்தாலும் பீதியாகத்தான் உள்ளது. அன்றைய நாட்களை அவமானமாக எடுத்துக் கொள்ளாமல் அனுபவமாக எடுத்துக்கொண் டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு பள்ளிச் சம்பவத்தைச் சொன்னால் என் அன்றைய நிலை புரியும். ஒருநாள், ராக்கெட் பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்கள். எனக்கு ராக்கெட் பற்றி தெரியும். ஆனால், அதை ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை. எதுவுமே எழுதாமல் அமர்ந்திருந்த என்னிடம் வந்த மேடம், 'ஏன் எழுதவில்லை?’ என்றார். 'தெரியவில்லை’ என்றேன்.  'அப்படின்னா 'ஐ டோன்ட் நோ’னு சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதானே?’ என்றார். அதற்கு நான் 'ஐ டோன்ட் நோ அப்படின்னா என்ன?’ என்றேன். அந்த மேடம் என்னைப் பார்த்து மிரண்டு போனார். வெறுப்பாக, 'இதுவே தெரியாம நீ எப்படி கட்டுரை எழுத வந்தே?’ என்று கேட்டு விரட்டிவிட்டார். இன்றுகூட யாராவது, 'ஐ டோன்ட் நோ’ என்றால் அந்த ராக்கெட் கட்டுரை அனுபவம்தான் என் நினைவில் வந்து செல்லும்.

என் ஊர்!

தொழிலில் ஏதாவது சிக்கலான பிரச்னை என்றால் என் கடந்த கால வாழ்க்கையைத்தான் நான் நினைத்துப் பார்ப்பேன்.  பள்ளி, வீட்டுச் சூழல் என ராயபுரத்தில் நான் சந்தித்த பிரச்னையை ஒப்பிட்டுப் பார்த்து, 'இதெல்லாம் ஒரு பிரச்சனையாடா?’ என்று மனதைத் தேற்றிக்கொள்வேன். ராயபுரத்தை விட்டு வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. இத்தனை வருடத்தில் ராயபுரத்திலும் நிறைய மாற்றங்கள். என்னிடமும் ஏகப் பட்ட மாற்றங்கள். ஆனால், ராயபுரம் கற்றுத் தந்த என் பேச்சுத் தமிழ் மட்டும் மாறவே இல்லை. அதை மாற்ற வும் நான் முயலவில்லை. ராயபுரத்துக்கான அடையாளமாக என்னிடம் மிச்சம் இருப்பது என் பேச்சு மட்டுமே!''

- வா.கார்த்திகேயன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism