Published:Updated:

''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!''

அனுபவம் பேசும் கிங்காங்

''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!''

அனுபவம் பேசும் கிங்காங்

Published:Updated:
##~##

''வீட்ல பொண்ணு தேடின விஷயம் தெரிஞ்சு 'கலாவை உங்க பையனுக்குத் தரலாம்னு இருக்கோம்’னு வந்தாங்க. கலா என் தூரத்துச் சொந்தம். 'இங்க பாரு கலா, கல்யாணத்துக்கு அப்புறம் தப்புப் பண்ணிட் டோமோனு நீ நினைச்சுடக் கூடாது. அதனால், ஒரு தடவைக்குப் பத்துத் தடவை யோசிச்சுக்க’னேன். 'உங்களை எனக்கு பிடிச்சிருக்கு’னு ஒத்தை வரியில முடிச்சாங்க. வடபழனி

''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முருகன் கோயிலில் கல்யாணம். பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வாழ்த்தினாங்க. அப்பா, அம்மா, மனைவி கலா, மகள்கள் கீர்த்தனா, சக்திபிரியானு வாழ்க்கை சந்தோஷமா இருக்குண்ணே' என்றபடி சிரிக்கிறார் கிங்காங். குறையை நிறைகளாக்கிய நகைச்சுவைக் கலைஞன்.

 தன் அலுவலக அறையில் உள்ள வெள்ளி விழா கேடயங்கள், ரஜினி, கமல் என ஸ்டார்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பார்த்தபடி, '' 'கொடி பறக்குது’ பட டப்பிங்குக்காகப் பிரசாத் ஸ்டுடியோவுக்கு ரஜினி சார் வந்திருந்தார். நான் அப்ப 'பட்டிக்காட்டுத் தம்பி’ பட ஆடியோ ரிலீஸுக்கு வந்திருந்தேன். எனக்கு ரஜினி சார்கூட போட்டோ எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. 'ஸ்டில்ஸ்’ ரவி சார்கிட்ட சொன்னதும் அவர் ரஜினி சாரிடம் அதைச் சொன்னார். 'அழைச்சிட்டு வாப்பா’னு சொல்லி என்னைச் சந்தோஷமா அள்ளி குழந்தை மாதிரி இடுப்புல தூக்கிவெச்சுக்கிட்டார்.  

'திருநாள்’ படத்தில் ரெண்டு வரி நான் பாடற மாதிரி ஸீன். அதைப் பாடுறதுக்காக ஸ்டுடியோவுக்கு வந்தேன். ரெகார்டிங்ல இருந்த இளையராஜா சாரோட சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்னு மனசு படபடனு அடிச்சுக்குது. பி.ஆர்.ஓ. விஜயமுரளி யிடம் சொன்னேன். ராஜா சாரும் ஆனந்தமா சிரிச் சுக்கிட்டே போஸ் கொடுத்தார். இந்த மாதிரி சிரிப் புடன் ராஜா சார் இருக்குறது ரொம்ப அபூர்வமாம். நான் அதிர்ஷ்டசாலி சார்!'' என்றவர் தொடர்ந்தார்.

''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!''

''திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம், வரதராஜபுரம் கிராமம்தான் சொந்த ஊர். ஒரு அக்கா, மூணு தங்கச்சி, நான் ஒரே பையன்.தென்னாத்தூர் ஸ்கூல்ல அஞ்சாவது வரைதான் படிச்சேன். நான் இதுவரை யார்கிட்டயும் என் வயசை சொன்னதே இல்லை. என்றும் 16தான். வயசுன்னதும் ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. வடிவேல் சார் பொறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையா இருந்தாலும் அவரின் பூர்வீகம் காட்டுப் பரமக்குடி. அங்க அவர் ஒரு அய்யனார் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் பண்ணினார். அன்னைக்கு புரொகிராம் பண்ண எனக்கு சான்ஸ் கொடுத்தாரு. புரொகிராமை ரசிச்சவரு, ஸ்டேஜுக்கு வந்து 'உன் வயசு என்னடா?’ன்னாரு. கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை'' என்பவர், தான் சினிமாவுக்கு வந்த கதையைச் சொல்கிறார்.

''சின்ன வயசுலயே பாட்டு, டான்ஸு, நாடகம்னு சுத்துவேன். 'சங்கரதாஸ் நாடக மன்றம்’னு ஒரு குழுவைச் சுப்பிரமணினு எங்க உறவினர் ஒருத்தர் நடத்திட்டு இருந்தாரு. அதுல நான்தான் பஃபூன். என் திறமையைப் பார்த்தவங்க 'நீ சினிமாவுக்குப் போக வேண்டிய ஆளுடா’னு உசுப்பேத்திட்டாங்க. கொஞ்ச நாள்ல அக்கா மகாதேவி, மாமா ராதா உடன் மெட்ராஸ் வந்துட்டேன்.

''குறைவான ஆசை... நிறைவான வாழ்க்கை!''

என்னைச் சைக்கிள்ல தூக்கி வெச்சுக்கிட்டு மாமாதான் கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கினார். சான்ஸ் கெடைக்குதோ இல்லையோ, தவறாம அவமானம் கெடைக்கும். ஒரு நாள் மணிவண்ணன் சாரைப் பார்க்க அவரு வீட்டுக்குப் போயிருந்தப்ப,  'யோவ் குழந்தைய படிக்க வைக்காம இப்படி சுத்திக்கிட்டு இருக்கியேய்யா?’னு காச்மூச்னு சத்தம்போட்டார். இந்தச் சமயத்துலதான் கலைப்புலி ஜி.சேகர் சாரின் அறிமுகம் கெடைச்சுது. அவர் மூலமா 'மீண்டும் மகான்’ங்கிற படத்தில் நடிச்சேன். ஆனா அந்தப் படத்தில் நான் நடிச்ச ஸீன் எதுவுமே வரலை. 'ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்’ல இருந்துதான் என் சினிமா  வாழ்க்கை ஆரம்பமாச்சு.

'அதிசயப் பிறவி’யில் நான் ஆடின பிரேக் டான்ஸ்தான் எனக்குனு ஓர் அடையாளத்தைக் கொடுத்துச்சு. அந்த டான்ஸுக்கு ஐடியா கொடுத்ததே ரஜினி சார்தான். அந்தப் பாட்டுக்கு  முந்தைய ஸீன்ல அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருத்தர் ரஜினி சார் முன்னாடி 'கிளாப்’ அடிக்கிறேனு என் தலையில அடிச்சுட்டார். தலையத் தடவி பாக்குறேன் கையெல்லாம் ரத்தம். ரஜினி சார் கார்லயே என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அன்னைக்குச் சாயங்காலம்தான் அந்த பிரேக் டான்ஸ் ஸீன் ஷூட்டிங். தலைக் காயத்தோட கஷ்டப்பட்டு ஆடினேன். அந்த நாள் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாளா தங்கிப் போயிடுச்சு'' என்பவர், ''என் உயரத்தைப் போலவே கம்மியா ஆசைப்படுறதாலதான் நான் சந்தோஷமா இருக்கேன்ங்கிறதையும் மறக்காம எழுதிக்குங்கண்ணே'' என்று சிரித்தபடி வாசல் வரை வந்து வழியனுப்புகிறார் கிங்காங்!

- ந.வினோத்குமார், படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism