Published:Updated:

புதிய பாதை!

புதிய பாதை!

புதிய பாதை!

புதிய பாதை!

Published:Updated:
##~##

''எழுத்துக்கு இசை சேர்க்கும் முயற்சியே இந்த மியூஸிக் நாவல். அதாவது புக்கிசை. 'நாம் படித்துப் பழகிய நாவல்களின் காட்சிகளுக்கு இடையேயான இடைவெளியைப் பாடலாலும் இசையாலும் நிரப்பினால் என்ன?’ என எங்களுக்குள் எழுந்த கேள்விகளுக்கான விடைதான் இந்த புக்கிசை.'' - முன் கதைச் சுருக்கம் சொல்கிறார் ஷம்மீர். வித்தியாசமான இந்த முயற்சிகளின் மூலம் கவனம் ஈர்க்கும் தாகத்துடன் புறப்பட்டுள்ளனர் ஷம்மீர்- சிவா என்ற இரு சாஃப்ட்வேர் இளைஞர்கள்.

புதிய பாதை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''நானும் ஷம்மீரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பிறகு நான் எஸ்.ஆர்.எம்மிலும் ஷம்மீர் அண்ணா யுனிவர்சிட்டியிலும் சாஃப்ட்வேர் முடித்தோம். இருவரும் தற்போது வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிகிறோம். பள்ளி நாட்களிலேயே எங்க ளுக்கு இசை மீது ஆர்வம். அதேபோல் புத்தகங்களின் மீதும் ஈடுபாடு உண்டு. திரைப்படங்களில் ஆங்காங்கே பாடல் வருவது போல் நாவலையும் பாடல், இசையுடன் உருவாக்கினால் என்ன எனத் தோன்றியது. அப்படித்தான் 'பாதை’ அமைப்பு உருவானது'' என்னும் சிவாவைத் தொடர்கிறார் ஷம்மீர்.

'' 'ரணம் சுகம்’ என்ற தலைப்பில் நானே ஒரு நாவல் எழுதினேன். அதன் கதை ரொம்பவே சிம்பிள். பொறியியல் கல்லூரியில் இசைக் குழு நடத்தும் நண்பர்கள். அதில் ஒருவனுக்கு ஏற்படும் காதல், அதனால் வரும் காயம் என ஒவ்வொரு கல்லூரி இளைஞனும் கடந்து வரும் பாதையை அந்த நாவலில் பதிவு செய்தேன். சினிமாவைப் போலவே அந்த நாவலில் இடையிடையே காதல், சோகம் எனப் பாடல்களை எழுதினேன். அந்தப் பாடல்களுக்கு இசை அமைத்து அதைச் சி.டி.-யாக்கி புத்தகத்துடன் இணைத்தோம்.

புதிய பாதை!

50,000-ம் ரூபாய் முதலீட்டில் 1,000 பிரதிகளை அச்சிட்டோம். நாங்கள் எதிர்பார்க்காத வரவேற்பு. அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. சரியான 'பாதை’யைத் தேர்வு செய்திருக்கிறோம் என்ற நிம்மதி. நாவலைப் படிக்கும்போது பாடல் வரும் இடங்களில் சி.டி.யை ஓடவிட்டு பாட்டைக் கேட்டுவிட்டு, பிறகு நாவலை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து படித்தால் சினிமா பார்த்த உணர்வு இருக்கும். நாவலைப் படித்து, பாட்டைக் கேட்டவர்கள் அந்த ஃபீல் கிடைத்தது என்றார்கள்'' என்று புன்னகைக்கிறார் ஷம்மீர்.

''எங்களின் இந்தப் புது முயற்சி குறித்தும் அடுத்த படைப்பு பற்றியும் பகிர்ந்துக்கொள்ள கவிஞர் மனுஷ்யபுத்திரனைச் சந்தித்தோம். அப்போது ஷம்மீர் தன் கவிதைத் தொகுப்பையும் எடுத்து வந்திருந்தார். அந்தத் தொகுப்பில் 'தாழ்ப்பாள் இல்லாத உலகம் இங்கே/திறந்து வாழ சாவி எங்கே?/பிரபஞ்ச ரகசியம் உனக்காகச் சொல்கிறேன்/காதல் தான் தூய கடவுளின் சாவி!’ என்ற கவிதை அவருக்கு ரொம்பவே பிடித்திருந்தது. 'உங்களின் அடுத்த புக்கிசை நாவலை 'உயிர்மை’ பதிப்பகத் திலேயே வெளியிடுகிறேன்’ என்றார். அடுத்த நாவல் 'நியான் நகரம்’ அதையும் ஷம்மீரே எழுதுகிறார்'' என்று நண்பனின் தோள் தட்டிச் சிரிக்கிறார் சிவா.

புதிய பாதை!

'' 'நியான் நகரம்’ நாயகன் ஒரு ஆர்.ஜே. அவன் நள்ளிரவில் நடத்தும் ரேடியோ ஷோவின் பெயர் தான் 'நியான் நகரம்’. நிகழ்ச்சியில் தன்னிடம் யார் தொலைபேசியில் பேசினாலும், அதை ஒலிப்பதிவு செய்யும் விநோதப் பழக்கம் அவனுக்கு உண்டு. அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்னைகள்தான் கதைக் கரு. இந்த 'நியான் நகரம்’ புக்கிசையை உயிர்மை இம்மாதக் கடைசியில் வெளியிடுகிறது'' என்கிற ஷம்மீர், ''இதில் வரும் பாடலில் ஒன்றைக் கேட்கிறீர்களா?'' என்றபடி பாடலை ஒலிக்க விடுகிறார். 'மிஸ்டர் டி.ஆர்.’ என்று தொடங்கும் அந்தப் பாடல் கலக்கல் கலாய்ப்புடன் கலகலக்கிறது.

'புக்கிசை’ தவிர்த்து சித்தர் பாடல்களுக்கு இசை அமைப்பது, திருக்குறளை 100 நொடி குறும்படங் களாக்குவது, சிறு, குறு கவிதைகளை ஒளி - ஒலி யாக்குவது என 'பாதை’யிடம் ஏகப்பட்ட புராஜெக்ட் டுகள் கைவசம் உள்ளதாம்.

பாதை தெரியுது பார்!

- மோ.அருண்ரூப பிரசாந்த்,படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism