Published:Updated:

ஸ்பென்சரில் பாகவதர்!

ஸ்பென்சரில் பாகவதர்!

ஸ்பென்சரில் பாகவதர்!

ஸ்பென்சரில் பாகவதர்!

Published:Updated:
##~##

பீட்டர் இங்லேண்ட் முதல் 'ஐந்து சட்டை

ஸ்பென்சரில் பாகவதர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

500!’ என்று கூறுகட்டி விற்கும் கடைகள் வரை கலர் கலராகக் கடை விரிக்கும் வளாகம் சென்னை ஸ்பென்சர் பிளாசா. ஹைதர்அலி காலத்துக் கத்தி, விக்டோரியா கால கடிகாரம், பிரிட்டிஷார் பயன்படுத்திய கிராமபோன்கள் என்று பழம்பொருட்கள் நிறைந்து பார்வையாளர்களைக் கவர்கிறது பப்ளி ஜமால் கடை. நரைத்த மீசையைத் தடவியபடி பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேசி அசத்துகிறார் பப்ளி ஜமால்.  

 ''100 வருஷங்களுக்கு முன்னால் குஜராத்தில் இருந்து சென்னையில் குடியேறினோம். பெல்ஜியம், ஆஸ்திரியானு வெளிநாடுகள்ல இருந்து கண்ணாடி விளக்குகளை இறக்குமதி செய்யும் வியாபாரம் செய்துட்டு இருந்தார் எங்க தாத்தா. இப்பவும், இந்தியாவில் இருக்கிற பல அரண்மனைகள், கோயில்களில் எங்க தாத்தா விற்ற கண்ணாடி விளக்குகள் தொங்கிக்கிட்டு இருக்கு. இதைத் தவிர வெளிநாடுகளில் இருந்து அழகான பொருட்களை வாங்கி வந்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்தப் பொருட்களை வைக்கிறதுக்காகப் பெரிய அறையை ஒதுக்குற  அளவுக்கு கலெக்ஷன்ஸ் சேர்ந்திருக்கு. தாத்தா இறந்த பிறகு, எங்க அப்பா கண்ணாடி இறக்குமதி வியாபரத்தைத் தொடர்ந்தார். சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருந்த காலகட்டம்கிறதால வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த பயங்கர எதிர்ப்பு இருந்துச்சு. அதனால கண்ணாடி இறக்குமதி தொழிலைக் கைவிட்டுட்டு மீதியிருந்த விளக்குகளைப் பழைய கலெக்ஷன்ஸ் இருந்த அறையில் போட்டு பூட்டிட்டார். ஒரு சமயம் எங்க அப்பாவைப் பார்க்க வந்த நண்பர் ஒருத்தர் அந்த அறையைப் பார்த்துட்டு, 'எனக்கு இந்தக் கடிகாரம் வேணும். என்ன விலைனு சொல்லு, வாங்கிக்கிறேன்!’னு சொல்லி முதல் வியாபாரத்தைத் தொடங்கி வெச்சார்.  அப்புறம் என்ன, பழைய கலெக்ஷனைக் கடையில் வெச்சு விற்க ஆரம்பிச்சோம். இந்த வியாபாரம் ஆரம்பிச்சு கிட்டத்தட்ட 60 வருஷங்களுக்கு மேல ஆயிடுச்சு'' என்றபடி அருகில் இருந்த கிராமபோனில் ஒரு எல்.பி. ரெக்கார்ட் பிளேட்டை மாட்டி அதன் சாவியைக் கையால் சுற்றிவிட்ட உடன் 'மேயாத மான்...’ என்று பாடத் தொடங்குகிறார் தியாகராஜ பாகவதர்.

ஸ்பென்சரில் பாகவதர்!

''பழங்காலப் பொருட்கள்னா அலங்காரமா வீட்லவெச்சுக்கிறது மட்டும்தான்னு நினைக்கிறாங்க. ஆனால், இங்க இருக்கிற அனைத்துப் பொருட்களும் வொர்க்கிங் கண்டிஷன்ல இருக்கு. பொழுதுபோக்கா தொடங்கியது இப்ப சோறு போடுற தொழிலாக வளர்ந்து இருக்குது. நாடு முழுக்கச் சுத்தித் திரிஞ்சு விதவிதமான பொருட்களைச் சேகரிக்கிறோம். சிலருக்குத் தங்கள்கிட்ட உள்ள பொருட்களோட மதிப்புத் தெரியலை.  20 வருஷங்களுக்கு முன்ன நாகூர்ல ஒரு முஸ்லிம் அம்மாக்கிட்ட அந்தக் காலத்து கண்ணாடித் தட்டுங்க  இருக்குன்னு கேள்விப்பட்டு தேடிப்போனேன். நல்ல விலை கொடுத்து அந்தத் தட்டுக்களை வாங்கிட்டு புறப்படும்போது, 'என்கிட்ட இன்னொரு பொருளும் இருக்கு. உங்களுக்குத் தேவைப்படுமா பாருங்க’னு சொல்லி ஒரு பெட்டியில இருந்த புனித குர்ஆன் நூலை கொண்டு வந்து கொடுத்தார். கையால் எழுதப்பட்ட அந்தக் குர்ஆன் நூல் முழுக்கத் தங்க ஜரிகை ஓவியங்கள் மின்னிச்சு. 400 வருடங்கள் பழமையான அந்த  நூலுக்கு என்ன விலை கொடுக்கிறதுனு தெரியலை. அதை வாங்குற அளவுக்கு அப்ப என்னிடம் பணமும் இல்லை. சென்னைக்கு வந்ததும் நண்பர் ஒருத்தர்கிட்ட  விஷயத்தைச் சொன்னேன். 1,50,000-ம் கொடுத்து, அந்தக் குர்ஆனை வாங்கினார். அவ்வளவு பணத்தைப் பார்த்ததும் அந்த அம்மா ஆடிப்போயிட்டாங்க. 'இவ்வளவு பெரிய தொகையை எங்கே வைப்பேன்? நீங்களே வெச்சுக்கிட்டு மாசம் மாசம் செலவுக்குத் தேவையான பணத்தை மட்டும் கொடுங்க’னு சொன்னாங்க. அது சாத்தியப்படாதுனு சொல்லி மொத்தப் பணத்தையும் கொடுத்துட்டு வந்தோம்'' என்று சொல்லும் பப்ளி, ''எனக்கு வயசாயிடுச்சு. என் பசங்களுக்கும் இந்த வியாபாரத்தில் விருப்பம் இல்லை. இதில் ஆர்வமா இருக்குற வங்கள் கிட்ட மொத்த கடையை யும் விலைக்குக் கொடுத்துடலாம்னு இருக்கேன்'' என்கிறார்.

ஆர்வம் உள்ளவர்கள் அணுகலாமே!

- பொன்.செந்தில்குமார் படங்கள்: கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism