Published:Updated:

முதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்!

சத்தியமங்கலம் டூ பண்ணாரிலிவிங் டுகெதர் மலைக் கிராமங்கள்

முதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்!

சத்தியமங்கலம் டூ பண்ணாரிலிவிங் டுகெதர் மலைக் கிராமங்கள்

Published:Updated:
##~##

'லிவிங் டுகெதர்’- வார்த்தையைக் காதில் கேட் டால் நகர மக்களே அலறிப் பதறுவார்கள். ஆனால், ஈரோடு வனப் பகுதியில் இருக்கும் மலைவாழ்மக்களோ இதை வாழ்க்கையாகவே பல ஆண்டு காலம்கடைப் பிடித்து வருகிறார்கள்.

சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் பீக்கிரிப்பாளையம், ராமபைலூர், பெங்காபதி போன்ற மலைக் கிராமங்களில்  ஊராளிகள் எனப் படும் மலைவாழ் மக்கள் வசிக்கிறார்கள். நாகரிகத்தின் எச்சில் படாத இந்த மக்களின் வாழ்க்கை... காடு, மாடு, ராகி, கம்பு என்று இயற்கையோடு கலந்து கழிகிறது. திருமணமும் அப்படியே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்!

''எங்க இனத்தில் வயசுக்கு வந்த பையனுக்கும் பொண்ணுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போச்சுன்னா, பெத்தவங்க சம்மதத்தைக் கேட்க வேண்டியதே இல்லை. ஒருகுடிசை போட்டு ஒண்ணா சேர்ந்துவாழ ஆரம் பிச்சுடலாம். கல்யாணம், தாலிங்கிற பேச்சே கிடையாது. எத்தனைப் புள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாம். பொண்ணு மாசமா இருக்கானு கேள்விப்பட்டா, பெத்தவளே மனசு மாறி, மாப்பிள்ளை வீட்டுக்கு ஓடி வந்து ஒத்தாசைப் பண்ணுவா. ஆனா, இப்படி பத்து வருஷங்களுக்கு மேல கல்யாணம் கட்டாம சேர்ந்து வாழக் கூடாது. ஏன்னா, பிள்ளைங்களும் வளர்ந்து பெருசாகி இருப்பாங்க இல்லையா. அதனால், ஊர் கூடி அந்த ஜோடிக்கு கல்யாணம் கட்டிவெச்சிடுவோம். இதுதான் எங்க வம்ச வழக்கம்'' என்கிறார் பெங்காபதி கிராமத்தைச் சேர்ந்த குருவி!

மகள் பிறந்து அதற்கு அபிநயா என்று பெயர்சூட்டு விழா முடித்த பிறகுதான் திரு மணம் செய்து இருக்கிறார்கள் முருகன் - ராஜா மணி தம்பதி. ''காதல் வந்ததுமே நாங்க ஒண்ணா சேர்ந்து வாழ ஆரம்பிச்சிடுறது இல்லை. பையன் நாலஞ்சு இடத்துல காட்டு வேலைக்குப் போயி, குறைஞ்சது ஆயிரம் ரூபாய் சம்பாதிச்சு, குடிசை கட்டியப் பிறகு தான் பொண்ணைக் குடித்தனம் கூட்டிட்டுப் போவான். பெத்தவங்க காசுல கூத்தடிக்கிற சோலி எல்லாம் எங்ககிட்டே கிடையாது. பொண்ணைக் கூட்டிக்கிட்டுப்போன பையன் உருப்படியா நடந்துக்கிறானானு பெத்தவங்க பார்த்துக்கிட்டே இருப்பாங்க. ஏதாச்சும் தப்பு நடக்கிறது தெரிஞ்சா பேயாட்டம் ஆடிப்போடு வாங்க'' என்கிறார் முருகன்.

முதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்!

இவர்களின்  கல்யாணமும் எளிமையாகத்தான் இருக்குமாம். இதை 'நூல் போடுற சடங்கு’ என் கிறார்கள். மாப்பிள்ளை தனது பெற்றவர்களிடம் காசு வாங்காமல் சொந்தமாகச் சம்பாதித்த பணத்தில் மட்டுமே கல்யாணத்தை நடத்த முடியும். ''நமக்குத் தடபுடலா கல்யாணம் பண்ற பழக்கம் கிடையாது. மாப்பிள்ளை ஊர் விருந்துக்காக ஒரு கிடாவும் ரெண்டு மூட்டை கேழ்வரகும் கொடுக்கணும். ஊர் கூடி நல்ல நாள், நேரம் குறிச்சுக் கல்யாணத்தை நடத்திடு வோம். சில பேருக்கு நூல் போடுறது ரொம்ப வருஷம் தள்ளிட்டே போய்ச் சில நேரம்அப்பா வுக்கும் பையனுக்கும் ஒரே நாளில கல்யாணம் ஆகறதும் உண்டு.

முதலில் குழந்தை... அப்புறம் கல்யாணம்!

பேரன், பேத்திங்க எல்லாம் தாத்தா - பாட்டி கல்யாணத்தை ரசிக்கிற பாக்கியம் எங்க இனத் தில் மட்டுமே கிடைக்கும். இதோ, இந்த ரங்கன் கல்யாணம் அப்படித்தான் நடந்துச்சு. அவன் கல்யாணத்து அன்னிக்குதான் அவனோடபெத்த வங்களுக்கும் கல்யாணம் நடத்திவெச்சோம். ஒரு கிடாவை வெட்டி ரெட்டைக் கல்யாணத்தை முடிச்சிப்புட்டான் கடன்காரப் பையன்!'' என்று உரிமையோடு கோபித்துக் கொள்கிறார் பீக்கிரிப்பாளையத்தைச் சேர்ந்த வேலுமணி.

சேர்ந்து வாழ ஆரம்பித்த பிறகும் சரி... கல்யா ணத்துக்கு பிறகும் சரி... இவர்களுக்குள் பிணக்கு என்பது அரிதாகவே இருக்கிறது. அப்படியே வந்தா லும், அனுசரித்துக்கொண்டு கடைசி வரை சேர்ந்துதான் வாழ வேண்டுமாம். அதேபோல், காதலித்துவிட்டு கை கழுவிச் செல்வது எல்லாம் இங்கு நடக்காது. ஊருக்குள் அன்னம், தண்ணீர் புழங்கக் கூடாது என்பது உட்பட ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதிலேயே கைவிட்டு சென்ற மாப்பிள்ளை மனைவியிடம் கப்சிப் ஆகிவிடுவாராம்!

இவர்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு வெளியாட்களை வெகு அரிதாகவே கூப்பிடுகிறார்கள். அப்படியே வந்தாலும் பத்தடி தள்ளி நின்று வாழ்த்திவிட்டு சென்றுவிட வேண்டுமாம். அப்படி ஒரு சென்டிமென்ட்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: ஜா.ஜாக்சன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism