Published:Updated:

நட்'பூ'விழா!

நட்'பூ'விழா!

நட்'பூ'விழா!

நட்'பூ'விழா!

Published:Updated:
##~##

ட்புக்காக புனையப்பட்ட கவிதைகள் ஏராளம். இலக்கியங்களில் உணர்ச்சி பொங்க உதாரணங்களையும் சொல்லி இருக்கிறார்கள். இப்போது நண்பர்களுக்காக நண்பர்கள் ஒன்றுகூடி எடுத்து இருக்கும் விழா,சேலத்தை நெகிழவைத்து இருக்கிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கச் செயலாளரும், 'பூ’ படத்தின் கதை ஆசிரியருமான ச.தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது தம்பி பாலசுப்ரமணியத்துக்கு எடுக்கப் பட்ட விழாதான் அது.

 தமிழ்ச்செல்வனின் மொத்த குடும்பமும்  இலக்கியத் தோடு பரிச்சயம் உடையது.  தமிழ்ச்செல்வனுக்குத் திருமணமாகி 30 ஆண்டுகளும், இவரது தம்பி பால சுப்ரமணியத்துக்குத் திருமணமாகி 25 ஆண்டுகளும் நிறைவடைந்து இருக்கின்றன. இதைக் கொண்டாடும் விதமாகதான் இவர்கள் இருவரின் நண்பர்கள் இணைந்து இப்படி ஒரு விழாவை நடத்தினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நட்'பூ'விழா!

கடந்த 11-ம் தேதி மாலை, சேலம் - ஐந்து ரோடு அருகே உள்ள ஐ.எம்.ஏ. ஹாலில் நண்பர்கள் குவிய ஆரம்பித்தார்கள். 'நண்பர்கள் மட்டும்...’ என்று வாசலியே அறிவிப்புப் பலகை. உள்ளே நெல்லை திருவுடையான் அவரே எழுதி இசை அமைத்த பாடல்களை பாடிக்கொண்டு இருந்தார். பாடல் வரிகளில் நட்பின் பெருமை. கோவையைச் சேர்ந்த தபேலா கலைஞர் ஆர்த்தர் தபேலாவை வாசித்தபடியே பறவைகளின் ஓசைகளையும் மிமிக்ரி செய்து அசத்தினார். இவர்களும் தமிழ்ச்செல்வனின் நண்பர்களே.

இந்த ஆரவாரங்களுக்கு இடையே மேடை ஏறினார்கள் சகோதரர்கள். ''நட்புக்கு நாங்கள் எடுக்கும் விழா இது. தமிழ்ச்செல்வனைப் பத்தி உங்க எல்லோருக்கும் தெரியும். ஆனா, அவரு டைய பூர்வீகம் பத்தி தெரியுமா? அவங்க குடும்பமே எழுத்தில் ஊறிப்போன தமிழ்க்குடும் பம். அவங்களுக்குச் சொந்த ஊர்கோவில்பட்டி. தமிழ்ச்செல்வன்தான் வீட்டுக்கு மூத்தப்பையன். அவருக்கு அடுத்தது எழுத்தாளர் கோணங்கி. மூன்றாவதுதான் இங்கே நிற்கும் பாலு. கட்டுமானப் பணித் தொழிலில் இருந்தாலும் எழுத்தும் வாசிப்பும்தான் பாலுவுக்கு உயிர் மூச்சு. அடுத்து பாண்டியன் நெடுஞ்செழியன் நல்லப் புத்தகங்கள் எங்கே இருந்தாலும் தேடிப்போய் வாங்கிடுவார். கடைசி சகோதரர் தமிழகம் அறிந்த நாடகக் கலைஞர் முருகபூபதி.  

நட்'பூ'விழா!

தமிழ்ச்செல்வனுக்கும் பாலுவுக்கும் ஒரே தேதியில் திருமண நாள் வரும். இந்த வருஷம் அதை சிறப்பாகக் கொண்டாடணும்னு முடிவு செஞ்சோம். ரெண்டு பேருக்குமே நாங்க தகவல் சொல்லாம நண்பர்கள் மட்டுமே ஒன்று கூடித் திட்டமிட்டோம். ரெண்டு நாளைக்கு முன்னாடி அவங்ககிட்டே விஷயத்தைச் சொன்னபோது, 'விழா எல்லாம் எதுக்குப்பா’னு தயக்கம் காட்டினாங்க. 'எல்லோரும் ஒரே இடத்தில் கூடுவதற்கு ஒரு காரணம் வேண்டாமா? வந்து சேருங்க’னு சொல்லிட்டோம். எல்லா நண்பர்களுமே குடும்பத்தோடு வந்து இருக்காங்க. சந்தோஷமா இருக்கு. இனி, ஒவ்வொருத்தரோட திருமண நாளிலோ அல்லது பிறந்த நாளிலோ இப்படி ஒன்றுகூடி நம்ம சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கணும்...'' என்று பேசிவிட்டு அமர்ந்தார் எழுத்தாளர் பவா.செல்லத்துரை.

இரண்டு தம்பதியரும் கேக் வெட்ட... கலர்ஃபுல் வெடிகளால் குலுங்கியது அரங்கம்.

நட்'பூ'விழா!

''திடீர்னு தொலைபேசியில் தொடர்புகொண்டு கூப்பிட்டாங்க. இப்படி ஒரு பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருப்பாங்கனு நான் நினைக்கவே இல்ல. நட்புக்கு, நண்பர்களுக்கு நன்றி. இங்கே வந்து இருக்கும் எல்லோரும் எனக்குப் பழக்கமானவர்கள். ஆனால், எல்லோரையும் பார்த்து பல வருடங் களாகிவிட்டது. சொல்லப் போனால் எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திப்பது இதுதான் முதல் முறை. இனி, இது தொடர்முறையாக வேண்டும். சந்திப்புக்குக் காரணமாக விழாவை வைத்துக்கொள்ளலாம். இங்கே இருக்கும் நண்பர்கள் எல்லோரும் ஒவ்வொரு காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானவர்கள். ஆனால், எந்தக் காலகட்டத்திலும் என்னைவிட்டு விலகாதவர்கள்'' என்று நெகிழ்ந்தார் இறுதியாய்ப் பேசிய தமிழ்ச்செல்வன்!

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism