Published:Updated:

என் ஊர்!

'ஊரைச் சுத்தி புளிய மரம் உலுப்பிவிட்டா கலகலக்கும்!'

என் ஊர்!

'ஊரைச் சுத்தி புளிய மரம் உலுப்பிவிட்டா கலகலக்கும்!'

Published:Updated:
##~##

லக்கியச் செல்வர் குமரி அனந்தன் தன் ஊர் குறித்தும், தன் இளமைக் காலம் குறித்தும் இங்கே மனம் திறக்கிறார்...

''கன்னியாகுமரிக்குப் பக்கத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம்தான் என்னோட ஊர். தமிழ்நாட்டில் மதுரைக்குப் பிறகு, மதுரை மாதிரியே அமைப்பு உள்ளது ஊர் எங்க ஊருதான். வடக்கு சாலை, கிழக்கு சாலை, தெற்கு சாலை, மேல் சாலைனு ஒட்டுமொத்த ஊரையும் நாலா பிரிச்சு இருப்பாங்க. சாலையின் இருபுறமும் பெரிய பெரிய புளிய மரங்கள் நிற்கும். சின்ன வயசுல என்னோட முக்கியமான பொழுதுபோக்கே புளி எடுப்பதுதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

ஊரில் உள்ள புளிய மரங்கள் எல்லாத்தையுமே குத்தகைக்கு விட்டு இருப்பாங்க. குத்தகை எடுத்தவர் மரத்தில் ஏறி பறிக்குறது மட்டும்தான் அவருக்குச் சொந்தம். மற்றபடி காத்தடிச்சு கீழே விழுற புளியம்பழங்களை யார் வேணும்னாலும் எடுத்துக்கலாம். இதை எடுக்கிறதுக்காகவே அதிகாலையில் பசங்களோட நார்ப் பெட்டியைத் தூக்கிட்டு கிளம்பிருவேன். 'ஊரைச் சுத்தி புளிய மரம்... உலுப்பிவிட்டா கலகலக்கும்’னு தெம்மாங்கு பாடிக்கிட்டே புளியம் பழம் பொறுக்குவோம்.

என் ஊர்!

எங்க ஊருல மொத்தம் இரண்டு குளம். ஒண்ணு, சாஸ்தான் குளம். இன்னொன்னு, சாஸ்தான் தெப்பக் குளம். இங்க பெண்கள் குளிக்க மாட்டாங்க. ஆண்கள் மட்டும்தான் குளிப்பாங்க. லீவு நாள்ல சாஸ்தான் குளத்தில் தொட்டு விளையாட்டு விளையாடுவோம். அண்டங்கல் பந்து, சோவி விளையாட்டுன்னு  நான் விளையாடுன விளையாட்டு எதுவுமே இன்னிக்கு இல்லை. அண்டங்கல்  பந்து விளையாட்டுக்கு ஆலமரத்தோட அடிப் பாகத்தைக் கீறிவிடுவோம். அதில் இருந்து 'ஆலம் பால்’ வரும். அந்தப் பால் இறுகி ரப்பர் மாதிரி ஆனதும் துணியைவெச்சு கட்டிக்குவோம். இதைத் தூக்கி எறிஞ்சா ரப்பர் பந்து மாதிரியே துள்ளிப் போகும்.

எங்க அப்பா தீவிரமான காங்கிரஸ்காரர். அதனால் சின்ன வயசு லேயே கதர் ஆடைதான் போடுவேன். பசங்க 'சாக்கு மூட்டை’னு கிண்டல் பண்ணுவாங்க. அப்ப எங்க ஊர்ல பள்ளிக்கூடம் கிடையாது. எங்க ஊரு சர்ச்ல போதகரா இருந்த அப்பாதுரை ஓர் ஆசிரியரும் கூட. அவரிடம்தான் நாலாப்பு வரைக்கும் படிச்சேன். அதுக்குப் பின்னாடி கொட்டாரம், கன்னியாகுமரினு பல பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிச்சாலும், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். பள்ளிக்கூடத்தில் படிச்சதை என் வாழ்வில் மறக்கவே முடியாது. எங்க ஊர்ல இருந்து சுசீந்திரம் எட்டு கிலோ மீட்டர். பஸ் வசதி கிடையாது. அகஸ்தீஸ்வரத்தில் இருந்து கொட்டாரம் வரைக்கும் நடந்து போய் பஸ் ஏறணும். பஸ் ஏறினதுமே ஸ்கூல் வர்ற வரைக்கும் சத்தமா 'வந்தே மாதரம்’, 'ஜெய் ஹிந்த்’ன்னு கோஷம் போடுவேன். அது பிரிட்டிஷ் ஆட்சிக் காலம்கிறதால என்னை பஸ் ஸ்டாப்ல பார்த்தாலே பஸ் நிக் காமப் போக ஆரம்பிச்சுடுச்சு. உடனே என்னோட அப்பா எனக்கு ஒரு 'ராலே’ சைக்கிள் வாங்கித் தந்தாங்க. அதில்தான் ஸ்கூலுக்குப் போனேன்.

ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறப்ப, சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தில் முத்துகருப்பப் பிள்ளை, இளங்கோ, காந்தி ராமன்னு மூணு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூவர்ண ராட்டை கொடியைத் தூக்கிப் பிடிச்ச படியே 'வந்தே மாதரம்’னு கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நானும், மத்த ஸ்கூல் பசங்களும் சேர்ந்து கோஷம் போட்டுக்கிட்டே பின்னா லேயே போனோம். பிரிட்டிஷ் சர்க்கார்ல திவானா இருந்த ராமசாமி ஐயர் துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு போட்டுட்டார். சுசீந்திரத்தில் இருந்து ஓட ஆரம்பிச்சவன், தேரூர் பாலத்தில்தான் போய் நின்னேன்.

10-ம் வகுப்பு படிக்கும்போது இந்தி பாடத்தில் ஃபெயிலாயிட்டேன். வீட்டுக்குத் தெரிஞ்சா அப்பாத் திட்டுவாரேங்கிற பயத்துல ரயில் ஏறி சென்னைக்குப் போயிட்டேன். ஊரைவிட்டு ஓடி வந்தாலும் காந்தியத்தை நான் விடலை. மதுரையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் என் பேச்சைக் கேட்ட காமராஜர், என்னைக் கட்சிப் பணிக்குக் கூப்பிட்டார். அனந்த கிருஷ்ணன் இன்னிக்கு குமரி அனந்தனா தமிழகம் முழுவதும் தெரியு றேன்னா அதுக்குக் காரணம்,  இந்த ஊருதான்!''

- என்.சுவாமிநாதன், படங்கள்: ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism