Published:Updated:

'ஹலோ ஆட்டோ!'

'ஹலோ ஆட்டோ!'

'ஹலோ ஆட்டோ!'

'ஹலோ ஆட்டோ!'

Published:Updated:
##~##

திருநெல்வேலி ஹலோ எஃப்.எம். மற்றும் டி.வி.எஸ். டயர்ஸ்  இணைந்து திருநெல்வேலியில் நடத்திய 'ஹலோ ஆட்டோ’  நிகழ்ச்சிக்கு செமையாக ஆட்டோ கூட்டம்!

 ஆட்டோ ஓட்டுநர்கள், அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இலவச மெடிக்கல் செக்-அப், ஆட்டோவுக்கு 'வெஹிக்கிள்’ செக்-அப், கலை நிகழ்ச்சிகள் என்று நடந்த நிகழ்ச்சிகளால் ஜங்ஷன் எம்.டி.டி. ஸ்கூல் மைதானமே மஞ்சள் நிறத்தில் மின்னி யது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஹலோ ஆட்டோ!'

சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு வாசகங் களோடு ஆட்டோ ஊர்வலம் துவங்கியது. திருநெல்வேலியின் சந்து பொந்துகளில் ஆட்டோக்கள் புகுந்து புறப்பட்டு வந்தபின் ஆரம்பித்தன போட்டிகள். முதல் போட்டி குட்டீஸ்களுக்கான 'வாளியில் பந்து போடுதல் போட்டி’. குட்டீஸ்கள் மேடையை நோக்கிப் படை எடுக்க, ஒரு கல்லூரி மாணவர், 'என் பேரு விசு. எனக்கு 20 வயசாகுது. ஆனா, குழந்தை மனசு.  என்னையும் விளையாட்டுல சேர்த்துக்கோங்க’ என்று கெஞ்சினார். 'சரி’ என்று ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டார்கள். ஆனால், விசுவோ ஐந்து பந்துகளில் ஒரு பந்து மட்டும் போட்டு முதல் சுற்றிலேயே அவுட் ஆகி வெளியேறிவிட்டார்.

அடுத்ததாக 'ஊசியில் நூல் கோத்தல்’ போட்டிக்கான அறிவிப்பைத் தொடர்ந்து மூன்று பெண்கள் மட்டும் மேடை ஏறினர். சுய அறிமுகம் செய்தபோதுதான் தெரிந் தது. ஒன்று, பள்ளி மாணவி திவ்யா. மற்ற இருவரும் அவரது அம்மா மற்றும் ஆச்சி என்று. 'ஒரே குடும்பத்துக்காரங்க மூணு பரிசைத் தட்டிட்டுப் போறாங்க’ என்று ஆர்.ஜே. மஞ்சு உசுப்பேற்ற, மற்ற பெண்கள் சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மேடை ஏறினார்கள். அடுத்து 'ஆட்டோ வில் சிறந்த வாசகம் எழுதியவர்களுக்கான போட்டி’.  'முதியோர், நோயாளி, மாற்றுத் திறனாளிகளுக்குச் சலுகைக் கட்டணம்!’ என்று எழுதி இருந்த உடன்குடி கலீல்ரஹ்மான் முதல் பரிசை வென்றார். 'அடுத்த பிறப்பு என்பது இருந்தால் நான் நாயாகப் பிறந்து இந்தப் பிறவியில் நன்றி யோடு நடந்தவர்களுக்கு நன்றி செலுத்த விரும்புகிறேன்!’ என்று எழுதியிருந்த  பொன்சுடர் இரண்டாம் பரிசும், 'தமிழீழம் என் தாயகம்’ என்று எழுதியிருந்த மணி கண்டன், மூன்றாம் பரிசும் பெற்றார்கள்.

'ஹலோ ஆட்டோ!'

சேவை நாயகர்களாக இருக்கும் ஆட்டோ டிரைவர் களைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. முதலில் மேடை ஏறியவர் உடன்குடி கலீல்ரஹ்மான் (ஆட்டோ வாசகப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர்). ''உடன்குடி சுற்று வட்டாரத்தில் எந்தவித விபத்து, அசம்பாவிதம் நடந்தாலும் இவருக்குத்தான் முதலில் போன் வரும். இவர் 108-க்குத் தகவல் சொல்லி, அடிபட்டவரை உடனே காப்பாற்றச் சென்றுவிடுவார். அதேபோல, அநாதைப் பிணம் கிடந்தாலும் அதை மார்ச்சுவரிக்கு எடுத்துச் செல்வார். இறுதிச் சடங்கும் செய்வார்'' என்று ஆர்.ஜே. அற்புதராஜ் சொல்ல, கைதட்டலால் அரங்கை அதிர வைத்தார்கள் அனைவரும். அடுத்ததாக 25 பவுன் நகையை மறந்துவிட்டுச் சென்றவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஒப்படைத்த மணிகண்டன், கீழே கிடந்த மூன்று மொபைல்களை உரியவர்களிடம் ஒப்படைத்த ஈஸ்வரன், 65 மணி நேரம் தொடர்ந்து ஆட்டோ ஓட்டி லிம்கா சாதனை செய்த அந்தோணிராஜ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்கள். பெண் ஆட்டோ ஓட்டுநர் களும் கௌரவிக்கப்பட்டனர் . திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர்கள் காந்திமதி, சுகந்தி, தேவி ஆகிய மூவருக்கும் பரிசுகளுடன் கூடிய மெடல் வழங்கப்பட்டது.

'ஹலோ ஆட்டோ!'

இறுதியாக மேடை ஏறிய ஆட்டோ நண்பர்கள், ''இன்னிக்கு முகூர்த்த நாள். சவாரிக்குப் போனா 600 ரூபாய் வரைக்கும் வருமானம் பார்த்து இருப்போம். ஆனா, மெடிக்கல் செக்-அப், வெஹிக்கிள் செக்-அப்லாம் செய்து இருக்க முடியாது.  இந்தச் சந்தோஷம் நிச்சயம் கிடைச்சு இருக்காது. இது எங்களுக்கான ஃபேமிலி சவாரி!'' என்று நெகிழ்ந்தார்கள்.  

ஆ.கோமதிநாயகம், படங்கள்: ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism