Published:Updated:

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

Published:Updated:
##~##

துரை டால்ஃபின் மெட்ரிக்குலேஷன் ஸ்கூல். ப்ரீ.கே.ஜி. வகுப்பின் முதல் நாள். பள்ளி வாழ்க்கையின் முதல் நாளில் அடி எடுத்துவைக்க வந்துகொண்டு இருக்கி றார்கள் குழந்தைகள். வாசலில் நின்று கை கொடுக்கும் லாரல்-ஹார்டி, மிக்கி மவுஸைக் கடந்ததுமே குழந்தைகளின் முகத்தில் கலவர நிலவரம்.  

 பள்ளியை நெருங்கியதும் ரத்திஷாவின் சிணுங்கல் ஆரம்பிக்கிறது. 'நீங்க பெரிய பிள்ளையாகிட்டீங்க. இப்படி அழலாமா? அம்மா சொல்லிக் கொடுத்த ரைம்ஸைப் பாடுங்க பார்ப்போம்' என்று தேன்மொழி சொன்னதும் சத்தமாப் பாட ஆரம்பிக்கிறாள் ரத்திஷா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மம்மி டாட்டா போய் வாரேன்...
டாடி டாட்டா போய் வாரேன்...
ஒழுங்காய்ப் படிப்பேன்...
அழவே மாட்....''

- ரைம்ஸ் முடியும் முன்பே வீறிட்டு அழுகிறாள் ரத்திஷா. இடுப்பில் தூக்கிக் கொண்டுபோய் டீச்சரிடம் ஒப்படைக்க, அழுகையின் டெசிபல் அதிகரிக்கிறது.  நைசாக நழுவுகிறார் தேன்மொழி.

தலை வாரி பூச்சூடி உன்னை...

அடுத்து நாம் கண்ட காட்சி அப்படியே உல்டா. குழந்தை கிஷோரை வகுப்பறையில் விட்டுவிட்டு வெளியே நின்று அழுதுகொண்டு இருக்கிறார் தாய் ஜெஸி. 'ஒருநாள் கூட அவனைப் பிரிஞ்சு இருந்தது கிடையாது. அவனுக்குத் தண்ணிகூட தனியாக் குடிக்கத் தெரியாது. பாத்ரூம் வந்தா என்ன செய்வான்?' என்று ஏக்கமாகக் கேட்டார் கண்ணீ ரைத் துடைத்தபடி.

முகம் நிறைந்த புன்னகையோடு வெளியே வருகிறார்  இளங்கோவன். 'நான் சின்ன வயசுல ஸ்கூலுக்குப் போகும் போது கிளாஸ் ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே அழ ஆரம்பிச் சிட்டேன். என் அப்பா, 'இளங்கோ... அப்பா ஆபீஸ்ல வண்டிய விட்டுட்டு உன்னை கூட்டிட்டுப் போறேன்’னு பொய் சொல்லிட்டு எஸ்ஸாகிட்டாரு. தண்ணி குடிக்கணும்னு சொல்லி பைப் பக்கத்துல போய், அங்கே இருந்து தலை தெறிக்க ஓடினேன். வாத்தியார் பின்னாடியே துரத்துனாரு. ஒரு அரை கிலோ மீட்டராவது ஓடியிருப்பேன். கடைசியில என்னையப் பிடிச்சி அடி பின்னிட்டாரு. நானே இப்படி. என் மகன் அகிலன் உலக மகா சேட்டைக்காரன். 'என்னால சமாளிக்க முடியாது. நீங்களே உங்க புள்ளைய ஸ்கூலுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்க’ன்னு வொய்ஃப் சொல்லிட்டா. இவன் என்ன கூத்தெல்லாம் பண்ணப் போறானோன்னு பயந்துக்கிட்டே வந்தேன். கிளாஸ் ரூம் போனதும், 'நீங்க ஆபீஸ் போகலியா டாடி? நான் என்னைப் பார்த்துப்பேன். நீ முதல்ல கௌம்பு’ன்றான். எனக்குச் சப்புன்னு போயிடுச்சு. பசங்கள ஜட்ஜ் பண்ணவே முடியலை சார்' என்றார் சிரிப்பை அடக்க முடியாமல்.

தலை வாரி பூச்சூடி உன்னை...

வகுப்பறைக்குள் நுழைந்தால்; சில குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருக்கின்றன. பல குழந்தைகள் தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருக்கின்றன. பக்கத்துப் பையன் அழுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு குட்டிப் பொண்ணு தானும் அழுகையை ஆரம்பிக் கிறது.

மாலை 3 மணி. மீண்டும் பள்ளி வளாகம். முதல் நாள் என்பதால்  குழந்தை-பெற்றோரின் பெயரைச் சரிபார்த்து ஒப்படைக்க ஆரம்பித்தார்கள். அதுவரை சமாதானமாகி சமர்த்தாக இருந்த குழந்தைகள், அம்மாவைப் பார்த்ததும் வெளியே ஓடிவரத் துடிக்க... கூட்டத்தில் தாய் தவிக்க... ஒரே பாசப் போராட்டம்தான். தன் குழந்தை ரக்ஷனின் கையில் வீக்கம் இருப்பதைக் கண்டு பயந்துபோன ஜஸ்டின் டீச்சரிடம் விளக்கம் கேட்க, 'தன்னோட டிபன் பாக்ஸுல இருக்கிறத மட்டும்தான் சாப்பிடணும்னு குழந்தைக்குத் தெரியாதுல்ல சார். பக்கத்துல இருந்த பையன் டிபன் பாக்ஸுக்குள்ள கையவிட்டுட்டான். அவன் கடிச்சி வெச்சுட்டான். ஸாரி சார்' என்றார் டீச்சர். 'அது எப்படிங்க நீங்க பார்க்காம விட்டீங்க?' என்று தந்தை எகிற, மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்துகிறார்கள்.

குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பெரியவர்கள் ஆகிறார்கள். பெரியவர்கள் குழந்தையாகிவிடுகிறார்கள்!

- கே.கே.மகேஷ், படங்கள்: இ.ஜெ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism