Published:Updated:

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

Published:Updated:
##~##

சென்னை டு கும்பகோணம் நெடுஞ்சாலை. வாகாகப் படுத்துக்கொண்டு கேமராவில் ஆங்கிள் பார்க்கும் அந்த மனிதரை விநோதமாகப் பார்த்துக் கொண்டு கடக்கிறார்கள் பயணிகள். அவர் ஜான் பாஸ்கோ. நெய்வேலி அரசு இடைநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர். காலை 6 மணி முதல் 8 மணி வரை கண்ணில் அகப்படும் காட்சிகளை கேமராவில் சுருட்டிக்கொள்பவர், 9 மணிக்குப் பொறுப்பான தலைமை ஆசிரியராக மாறிவிடுகிறார்.

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நான் முதன்முதலில் பணியில் சேர்ந்த இடம் மரக்காணம் அரசு ஆரம்பப் பள்ளி. மாலையில் பள்ளியைவிட்டு வந்தவுடன் பொழுதுபோவது சிரமமாக இருக்கும். அப்போது எனக்கு போட்டோகிராஃபியை அறிமுகப்படுத்தியவர் தமிழாசிரியர் விவேகானந்தன். தினமும் மாலையில் அவர் வீட்டுக்குச் சென்று போட்டோ எடுப்பது, டெவலப் செய்து பிரின்ட் போடுவது ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். அவர் போட்டோகிராஃபி தொடர்பான புத்தகங் களைப் படிக்கக் கொடுப்பார். தொடக்கத்தில் சாதாரண ஃபிலிமைவிட ஸ்லைடு ஃபிலிம்தான் அதிகம் பயன் படுத்தினேன். காரணம், அப்போது கலர் பிரின்ட் போடுவதற்கு நிறைய செலவாகும். ஆனால், ஸ்லைடு ஃபிலிமில் எடுத்தால் அப்போதே அந்தப் படத்தை ஸ்க்ரீன் செய்து பார்த்துவிட லாம். ஆசிரியராக இருக்கும்போது புகைப்படம் எடுப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆனால், தலைமை ஆசிரியர் ஆன பிறகு கூடுதல் பொறுப்புகள், குறைவான நேரம். எனவேதான் காலையிலேயே கேமராவும் கையுமாகக் கிளம்பிவிடுகிறேன்'' என்கிறார் ஜான்பாஸ்கோ சிரித்தபடி.

புதுச்சேரி சுற்றுலாத் துறை நடத்திய புகைப்படப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு, ஹெச்.பி. நிறுவனம் நடத்திய 'பருவ நிலை மாற்றம் தொடர் பான தேசிய அளவிலான புகைப்படப் போட்டி’யில் இரண்டாவது பரிசு, 'அலைவ்’ பத்திரிகை தேசிய அளவில் நடத்திய போட்டிகளில் பல முறை பரிசுகள் என்று ஜான்பாஸ்கோவின் சாதனைப் பட்டியல் நீள்கிறது. போட்டோ கிராஃபிக்காகவே வெளிவரும் பெட்டர் போட்டோ கிராஃபி, ஆசியன் போட்டோ கிராஃபி போன்ற இதழ்களிலும் இவரது படங்கள் இடம்பிடித்து இருக்கின் றன.

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

''டிஜிட்டல் புரட்சிக்கு அப்புறம் போட்டோகிராஃபி அசுர வளர்ச்சி அடைந்து இருக்கிறது. ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றில் வந்து குவியும் படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே இது புரியும். 10 வருடங்களுக்கு முன்னால் ஒரு கழைக் கூத்தாடியின் வாழ்க்கையை ஒன்று அல்லது இரண்டு படங்களில் காட்டிவிட்டால் போதும். ஆனால், இப்போது நாம் அந்த இரண்டு படங்களை எடுக்கும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் இரண்டு லட்சம் பேர் அதே படங்களை எடுக்கின் றனர் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கழைக் கூத்தாடியைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தொடர்ந்து படம் எடுத்தால்தான் நம்மால் நல்ல படங்களை எடுக்க முடியும். எனக்கு

மூன்றாவது கண்ணில் முந்நூறு கதைகள்!

வாழ்க்கையில் ஒரே ஒரு வருத்தம். நண்பர்களுடன் இணைந்து 'நெய்வேலி அமெச்சூர் போட்டோகிராஃபர் சொசைட்டி’ என்ற ஓர் அமைப்பைப் போட்டோகிராஃபிக்காகவே தொடங்கினேன். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அதைத் தொடர முடியவில்லை'' என்று வருத்தப்படுபவர் வாரணாசி, அலகாபாத், குஜராத் என்று புகைப்படம் எடுப்பதற்காக அவ்வப்போது இந்தியா முழுக்கப் பயணமும் செய்கிறார்.

''அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளைப் புகைப்படங்கள் எடுத்து ஆவணம் ஆக்க வேண்டும் என்பது என் விருப்பம்'' என்கிறார் ஜான்பாஸ்கோ!

- ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism