Published:Updated:

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

தலை வாரி பூச்சூடி உன்னை...

சிலேட்டுப் பருவத்தின் முதல் நாள்

Published:Updated:
##~##

''சந்துரு குட்டி சமத்துல்ல. நீ அழாமச் சமர்த்தா இருப்பியாம். ஈவ்னிங் உனக்குப் பென்டென் வாட்ச் வாங்கித் தருவேனாம்!'' அமுதா  தன் குழந்தையின் அழுகையை அடக்க ஆறுதல் வார்த்தை கள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவருக்கு அழுகை எட்டிப் பார்த்தது.

 ஜூன் 15 காலை. திருவண்ணாமலை வேடியப்பனூர்  அருணாச்சலா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில்தான் இந்தப் பாச நெகிழ்ச்சிக் காட்சி. யூனிஃபார்மோடு வரும் குழந்தைகளை             வரவேற்க, தலைமை ஆசிரியை முதல் அனைத்து ஆசிரியை களும் யூனிஃபார்ம் சேலைகளோடு  ஆஜர். ''அழாதடா, இந்தா சாக்லேட்!'' என்று, வந்திருந்த குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுத்து                   வரவேற்றுக்கொண்டு இருந் தனர். 9 மணிக்கு பிரேயர் ஆரம்பம். புதிதாக வந்த குழந்தைகள் என்ன பாட்டு என்று தெரியாமல் 'ஙே’ என்று விழித்துக்கொண்டு, பக்கத்தில் இருந்த குழந்தைகளைப் பார்த்தபடி, இடை இடையே பாட்டுப் பாடி முடித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலை வாரி பூச்சூடி உன்னை...

பிரேயர் முடிந்ததும்தான் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும் என்கிற 'விபரீத உண்மை’யை உணர்ந்து வீறிட்டு அழத் தொடங்கின குழந்தைகள். மீண்டும் சமாதானப் படலங்கள். அழுகையின் சுருதி மெள்ள குறைய, எல்.கே.ஜி. வகுப்பறைக்குள் நுழைந்தால், சாமி படங்களுக்குப் பூ மாலை போட்டு அதன் முன் பழங்கள், இனிப்பு, பொரி, சாக்லேட் என்று தட்டுகள் படையலுக்குத் தயாராக இருந்தன. தலைமை ஆசிரியை விஜயகுமாரி, முதல் குழந்தையாக அருண்குமார் என்ற குழந்தையை மடியில் அமரவைத்து,

தலை வாரி பூச்சூடி உன்னை...

கையைப் பிடித்து நெல்லில் 'அ’ என்று எழுதப் பழக்கினார். பெற்றோர்களை அழைத்து அவர்களின் கால்களில் அருணை விழச் சொன்னார். பிறகு, பெற்றோர்களும் அருண்குமாரின் கையைப் பிடித்து நெல்லில் எழுதப் பழக்கினர்.

நம் போட்டோகிராஃபர் கேமராவைக் கையில் எடுக்க, ஃபிளாஷ்கள் மின்னியதும் மீண்டும் அழுகை ஆரம்பம். பெற்றோர்கள் 'என்னவோ, ஏதோ’ என்று உள்ளே அலறி அடித்து வர, சுகுமார் என்கிற குழந்தை அலறி அடித்து அம்மாவிடம் ஓடியது. ''உங்களைப் பார்த்ததும் ஊசி போட வந்துட்டீங்கனு நினைச்சுட்டாங்க'' என்றார் சுகுமார் அம்மா. (தேவையா நமக்கு?) மீண்டும் ஹெச்.எம் விஜயலெட்சுமி சாக்லேட்டுகளை விநியோகிக்கத் தொடங்க, விக்னேஷ் என்கிற வாண்டு மட்டும் எல்லா சாக்லேட்டுகளையும் வாங்கி டவுசர் பையில் போட்டுக் கொண்டே அழுகையையும் சாமர்த்தியமாகத் தொடர்ந்தது. இவன் இப்படி என்றால் வகுப்பறையில் இருந்த கங்காதரன் சமர்த்தாகப் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டு இருந்தான். எட்டிப் பார்த்தால், தட்டில் இருந்த லட்டுகளை ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டு இருந்தான். அழுகை யிலும் இதைப் பார்த்து குபீர் என்று சிரித்தன சில குழந்தைகள்.

அடுத்ததாக 3, 4, 5-ம் வகுப்பு மாணவர்களை ஒன்றாக உட்காரவைத்து முதல் நாள் அறிமுகக் கூட்டம். மகாலட்சுமி, ஸ்ரீதேவி, கவிதா மிஸ்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு குழந்தைகளை அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார்கள். ''புவனா, உச்சிப்புள்ளையார் கோயில் தெருவில் இருந்து வர்றேன் மிஸ்!'' என்று அறிமுகப்படலங்கள் ஆரம்பம். உள்ளே நுழைந்த இந்தி மிஸ் தமிழ்ச்செல்வி, ''ஆப் ஹைசே ஹை?'' என்று இந்தியில் நலம் விசாரிக்க, ''ஆப் சி சே'' (ஃபைன்) என்று கோரஸ் ஆகப் பதில் சொன்னார்கள் குழந்தைகள். ''சமத்துக் குழந்தைகள் சார். போன வருஷம் சொல்லித் தந்ததை அப்படியே ஞாபகம்வெச்சிருக்காங்க பாருங்க!'' என்றார் தமிழ்ச்செல்வி நம்மிடம்.

மதிய உணவுக்கு மணி அடிக்க, தாங்கள் கொண்டுவந்து இருந்த சாப்பாட்டை பள்ளி தட்டுகளில் கொட்டி, கண் மூடி பிரேயரைத் தொடங்கினர்.

''காட் ப்ளெஸ் மம்மி!
காட் ப்ளெஸ் டாடி!
ஹெல்ப் மீ ஆல்வேஸ்
டு கீப் தெம் ஹேப்பி!''

குழந்தைகளின் குரல் கேட்டு, அன்று கடவுள் நிச்சயம் அதிக சந்தோஷத்தில் இருந்து இருப்பார்!

-கோ.செந்தில்குமார்,படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism