Published:Updated:

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

Published:Updated:
##~##

பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் கூட சோறு போடத் தயங்கும் பிள்ளைகள்தான் நாட்டில் அதிகம். ஆனால், ஆதரவற்ற முதியவர்களைச் சாலையில் எங்கு பார்த்தாலும் அவர்களுக்குச் சாப்பாடு அளிப்பது மட்டுமின்றி, நாம் அருவருத்து முகம் சுளிக்கும் காயங்களுக்கு மருந்திடவும் செய் கிறார் திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிமாறன்.

உலக அளவில் மிகச் சிறிய வயதில் சமூகச் சேவை செய்பவர்களுக்கு  அளிக்கப்படும் 'குளோபல் வேர்ல்டு ரெகார்ட்ஸ்’ விருது சென்ற ஆண்டு இவருக்குக் கிடைத்து உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

''எப்போதும் என் பையில்  ஒரு முதலுதவிப் பெட்டியும், ஒரு வேட்டி மற்றும் இரண்டு புடவைகளும் இருக்கும். வழியில் ஆதரவு  இன்றி அல்லலுறும் முதியவர்களுக்கு எது தேவையோ அதைச் செய்வதற்காகத்தான் இத்தனையும்'' என்று பேசத் தொடங்குகிறார் மணிமாறன்.

''என்னுடைய சொந்த ஊர்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தலையாம்பள்ளம்   கிராமம். சிறு வயதில் இருந்தே யாருக்காவது உதவி செய்யவேண்டும் என்றால் முதல் ஆளாக நிற்பேன். பள்ளியில் படித்ததைவிட என்.எஸ்.எஸ், ஸ்கௌட் போன்ற நாட்டு நலப் பணி திட்டங்களில் கலந்து கொண்டதுதான் அதிகம்.    

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

ஒன்பதாம் வகுப்பு வரை படித்துவிட்டு  திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். மாதம்

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

1,000  சம்பளம். முதல் மாதம் மட்டும் தான் அப்பாவிடம் சம்பளம் கொடுத்தேன். திருப்பூர் தெருக் களில் ஆதரவற்று சுற்றிக்கொண்டு இருக்கும் பலருக்கும் மாதச் சம்பளம் கிடைத்தவுடன், உணவு வாங்கிக் கொடுப்பேன். ஒருமுறை, உணவுப் பொட்டலங்களை வழங்கிக்கொண்டு இருந்தபோது, வயதான பெண்மணி எங்கு இருந்தோ ஓடிவந்து நான் கொடுத்த சாப்பாட்டை தன்னு டைய இரு கைகளாலும் அள்ளிச் சாப்பிட்டார். அவர் கண்களில் தெரிந்த அளவில்லாத மகிழ்ச்சி இந்த உலகத்தில் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாதது.இதை என்னுடைய அப்பாவிடம் சொல்லியபோது, 'அடுத்த மாதத் தில் இருந்து முழு பணத்தையும் ஆதரவற்றவர்களுக்கே செலவழி’ என்று சொல்லிவிட்டார்.

2008-ல் திருப்பூர் வந்த அப்துல்கலாமைச் சந்தித்துப் பேசியபோது, டெல்லி வந்து தன்னைச் சந்திக்கும் படி சொன்னார். டெல்லியில் என்னைப் பாராட்டி ஊக்கப் படுத்திய கலாம், 'தனி நபராக இல்லாமல் ஒரு அமைப்பாகத் தொடங்கி உங்கள் சேவையைத் தொடருங்கள்’ என்றார். நானும் 'உலக சேவை மையம்’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். ஆனாலும் எதிர்பார்த்த அளவு அது வெற்றி பெறவில்லை'' என்று பெருமூச்சு விட்டவர், சில நிமிட மௌனங்களுக்குப் பிறகு தொடர்ந்தார்.

அப்துல் கலாம் தந்த 1,000 ரூபாய்!

''டெல்லியில் இருந்து திருவண்ணாமலை திரும்பிக்கொண்டு இருக்கும் வழியில் பஸ் பஞ்சர் ஆகிவிடவே, நடந்து வந்துகொண்டு இருந்தேன்.  வழியில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண் மணிக்கு உடம்பு முழுக்க ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது. யாரும் அவருக்குக் குடிக்க தண்ணீர் கொடுக்கவும் தயார் இல்லை.   தாகம் தாங்க முடியாத அந்த மூதாட்டி, இலவசக் கழிப்பறையில் இருக்கும் நீரை அருந்தச் சென்றார். அவரைத் தடுத்து வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்ததோடு  புதுப் புடவையும் வாங்கிக் கொடுத்தேன். உடனே அவர் என்னை கட்டி அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார். அடுத்த நாள் அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ப்பதற்காக அதே இடத்தில் போய்ப் பார்த்தபோது அவரைக் காண வில்லை. இப்படி ஏராளமான சம்பவங்கள் காயங்களின் வடுக்களாக மனதின் ஓரத்தில் தங்கி உள்ளன. தொழு நோயாளிகளுக்கு என்ன மாதிரி யான சின்னச் சின்ன சிகிச்சைகள் அளிக்கலாம் என்பதையும் படித்துத் தெரிந்துவைத்து இருக்கிறேன். கண் தானம், உடல் தானம்பற்றி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் விழிப்பு உணர்வு முகாம் களில் கலந்துகொள்கிறேன்.

இந்த குளோபல் விருதை ஹாலந்துக்கு வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். ஆனால், எனக்கு அதற்கு வசதி இல்லை. 'இந்தியாவில் அப்துல் கலாமிடமே வாங்கிக்கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன். மறுபடியும் என்னைப் பார்த்த கலாம், மகிழ்ச்சியுடன் விருதை வழங்கினார். அப் போதுதான் கலாமின் பென்ஷன்  உதவித் தொகையை அவருடைய உதவியாளர் கொடுத்து விட்டுச் சென்றார். உடனே கலாம் அதில் இருந்து 1,000 ரூபாயை என்னிடம் கொடுத்து, 'இதை என் சார்பாக வைத்துக்கொள்’ என்றார். நிச்சயமாக அது குளோபல் விருதை விடப் பெரிது!'' என்கிறார் மணிமாறன்.

இருக்கலாம். ஆனால், அந்த ஆயிரத்தைவிட ஆயிரத்தில் ஒருவராகிய உங்களை மாதிரியான மனிதர்கள் அதிகம் மதிப்பு மிக்கவர்கள், மணிமாறன்!

- யா.நபீசா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism