Published:Updated:

என்னது 1.36 லட்சத்துக்கு பஜாஜின் 400சிசி பைக்கா? #Dominar400

என்னது 1.36 லட்சத்துக்கு பஜாஜின் 400சிசி பைக்கா? #Dominar400
என்னது 1.36 லட்சத்துக்கு பஜாஜின் 400சிசி பைக்கா? #Dominar400

இந்திய பைக் மார்க்கெட்டில், பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக்குகளைப் பொறுத்தவரை, பஜாஜின் பல்ஸர் பைக்குகளைப் போல, அதிக ரசிகர்களை வேறு எந்த தயாரிப்பும் கவர்ந்ததில்லை. பல்ஸர் அறிமுகமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், மீண்டும் அனைவரது பார்வையையும், தனது பக்கம் திருப்பியுள்ளது பஜாஜ். Dominar என்ற பெயருடைய 400சிசி பைக்கை, 1.36 - 1.50 லட்சத்துக்கு (Non ABS/ABS - டெல்லி எக்ஸ் ஷோரும் விலை) பஜாஜ் இன்று அறிமுகப்படுத்தியது. எனவே ஒரு புதிய பிராண்டின் முதல் பைக்காக Dominar களமிறங்கி இருக்கிறது. இந்த புதிய 400சிசி பைக்கின் தயாரிப்பு பணிகள் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக துவங்கிவிட்டன. அதில் ஸ்பெஷலான விஷயம் என்னவென்றால், பைக்கின் அசெம்பிளி லைனில் இருக்கும் அனைவரும் பெண்கள் என்பதுதான்

பஜாஜின் பவர்ஃபுல்லான, விலை உயர்ந்த பைக்காக, Dominar பொசிஷன் செய்யப்பட்டுள்ளது. இதில் கேடிஎம் டியூக் 390 / RC 390 பைக்கில் இருக்கும் அதே லிக்விட் கூலிங், 4 வால்வு DOHC, ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ள 373.3சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் - ஸ்லிப்பர் கிளட்ச் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் பஜாஜ் பைக்குகளுக்கே உரித்தான Triple Spark Plug தொழில்நுட்பத்தின் உதவியுடன்,  35bhp@8000rpm பவரையும், 3.5kgm@6,500 டார்க்கையும் வெளிப்படுத்தும் விதத்தில் இன்ஜின் ரி-ட்யூன் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் Low End Torque சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 8.23 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் Dominar, அதிகபட்சமாக 148 கிமீ வேகம் வரை செல்லும் என்கிறது பஜாஜ்.

கடந்த 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், பல்ஸர் CS400 என்ற பைக்கை பஜாஜ் காட்சிப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த கான்செப்ட் பைக்கில் இருந்த ஆட்டோமேட்டிக் LED ஹெட்லைட் - LED இண்டிகேட்டர் - LED டெயில் லைட், ஸ்பிளிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் ஆகியவை தொடர்கின்றன. ஆனால் முன்பக்க USD ஃபோர்க்குக்குப் பதிலாக, தடிமனான 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 110/70 R17 MRF ரேடியல் டயர்களும், பின்பக்கம் 150/60 R17 MRF ரேடியல் டயர்களும் Dominar பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 157 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் அளவு 13 லிட்டர் என்பது கவனிக்கத்தக்கது.

 ஆனால் ஒற்றை இருக்கை, இருவர் வசதியாக உட்கார்ந்து செல்லும்படியான ஸ்பிளிட் சீட்டாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பைக்கின் இருபுறமும் இருக்கும் பெட்டல் டிஸ்க் பிரேக் (முன்பக்கம் 320 மிமீ - பின்பக்கம் 230 மிமீ) செட்-அப்பிற்கு, டூயல் சேனல் ஏபிஎஸ் அளிக்கப்பட்டுள்ளது ப்ளஸ். ஹோண்டா CBR250R, மஹிந்திரா மோஜோ, ராயல் என்ஃபீல்டு கிளாஸிக் - தண்டர்பேர்டு - ஹிமாலயன் ஆகிய பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கப்போகிறது Dominar 400சிசி பைக். தற்போது அடுத்த ஆண்டில் வரவிருக்கும் BS-IV மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப தனது பைக்குகளை மேம்படுத்தி வரும் பஜாஜ் நிறுவனம், அதில் அவென்ஜர் மற்றும் பல்ஸர் சிரீஸ் பைக்குகளை ஏற்கெனவே அறிமுகப்படுத்திவிட்டது. அவை பஜாஜ் டீலர்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் Dominar பைக்கின் புக்கிங் ஆன்லைனில் (9000 ரூபாய்) துவங்குவதுடன், 22 நகரங்களில் இருக்கும் தனது டீலர்களில் Dominar காட்சிக்கு வைக்கப்படும் என பஜாஜ் கூறியுள்ளது. டெலிவரிகள்  ஜனவரி 2017 முதல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பஜாஜ் பைக்கிலே முதன்முறையாக, LED ஹெட்லைட், முழுக்க டிஜிட்டல் மீட்டர்கள், ட்வின் சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் கிளட்ச், ரேடியல் டயர்கள் ஆகியவை இருப்பது, 182 கிலோ எடையுள்ள இந்த 400சிசி Dominar பைக்கில்தான்! தவிர கடல் மட்டத்திலிருந்து சுமார் 18380 அடி உயரத்தில்கூட இந்த பைக் சிக்கலின்றி இயங்கும் என்கிறது பஜாஜ். கடந்த 2001-ல் பல்ஸரின் வருகைக்குப் பின்பு, எப்படி பட்ஜெட் பெர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டானதோ, அதே போல இந்த Dominar பைக்கும் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கப்போவது நிச்சயம்! இதனைத் தொடர்ந்து, ஸ்போர்ட்ஸ் பைக் விரும்பிகளைக் கவரும்படியான RS400 பைக்கையும், அட்வென்ச்சர் பிரியர்களுக்கான பைக்கையும், வருங்காலத்தில் பஜாஜ் தயாரிக்கும் என நம்பலாம்.

 - ராகுல் சிவகுரு.