Published:Updated:

ஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன?

ஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன?
ஹனிமூன் செல்ல உலகின் பெஸ்ட் இடங்கள் என்ன என்ன?

திருமணமான புதிதில் தம்பதிகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது அவர்களின் தேனிலவுப் பயணம் தான். அந்த வகையில் உலகில் அதிகமான தம்பதிகளை ஈர்க்கும் டாப் ஹனிமூன் ஸ்பாட்களின் தொகுப்பு.   

 ஃபுளோரிடா : 


 

பாதுகாப்பான அதே சமயம் திரில்லான அட்வெஞ்சர் விளையாட்டுகளுடன் தங்கள் ஹனிமூன் பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஃபுளோரிடாவை டிக் அடிக்கலாம். எப்போதும் நல்ல பருவ நிலையுடன் திகழும் ஃபுளோரிடாவின் முக்கியமான சிறப்புகளில் ஒன்று அந்த நட்பான ஊர் மக்கள். பல அரியவகை உயிரினங்களை பாதுகாக்கும் தேசிய பூங்கா ஒன்றும் ஃபுளோரிடாவில் இருக்கிறது. நம்மில் பலபேருக்கு சிறு வயதிலிருந்தே டிஸ்னி லேண்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும். அந்த கனவையும் ஃபுளோரிடா மாகாணத்தில்  அமைந்திருக்கும் வால்ட் டிஸ்னி லேண்டில் நனவாக்கி கொள்ளலாம். 

அருபா : 

நெதர்லாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் கரீபியக் கடலில் அமைந்திருக்கும் குட்டித் தீவு அருபா. தீவின் மொத்த நீளமே 32 கிமீ தான். தீவை சுற்றிலும் கடற்கரைகள், உணவு விடுதிகள், நைட் கிளப்புகள், கேசினோக்கள் என அருபாவில் பொழுபோக்கு அம்சங்கள் அன்லிமிடெட். உலக அளவில் புதுமணத் தம்பதிகளின் தேனிலவுத் திட்டத்தில் அருபாவுக்கு எப்போதும் இடம் உண்டு. ஓய்வெடுப்பதற்கும், மனதை புத்துணர்ச்சியாக்கி கொள்வதற்கும் அருபா சிறந்த இடம். அருபாவின் தலைநகரான ஓரோனியஸ்தாத்தில் இருக்கும் பூபாலி பறவைகள் சரணாலயம் அருபாவின் இன்னொரு ஸ்பெஷல். 

போரா போரா :


தென்ன 'போரா போரா' என கேட்குறீர்களா? பிரான்ஸின் பொலிசினியாவிலுள்ள ஒரு குட்டித் தீவுதான் போரா போரா. தீவைச் சுற்றி தெளிவான நீலக் கடல், வெள்ளை பவளப் பாறைகள் என போரா போரா ஒவ்வொரு விஷயங்களிலும் உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். கடலுக்கு நடுவே ஆங்காங்கே இருக்கும் குடில்களில் அமர்ந்து காலை நீரில் வைத்துக் கொண்டு உங்கள் துணையுடன் ஒரு கப் காபி அருந்தும் அனுபவத்தை வேறெங்கும் பெற முடியாது. உலகின் அழகான தீவுகளில் போரா போராவுக்கு எப்போதுமே தனி இடம். இந்த குட்டி தீவின் மக்கள் தொகையே ஏறத்தாழ 8000 பேர் தான். தண்ணீர் சாகசங்கள், இரவு நேர பார்ட்டிகள் என களைகட்டும் போரா போரா செல்ல நினைத்தால் மே மாதத்தில் உங்கள் பயண திட்டத்தை வகுத்து கொள்ளலாம். இங்கே இருக்கும் ஒவ்வொரு ரிஸார்ட்டும் ஒவ்வொரு வகையான ஹனிமூன் பேக்கேஜுகளை வழங்குகின்றன. அதை சரியாக விசாரித்து உங்களுக்கு பிடித்த ஸ்டைலில் பதிவு செய்து கொள்ளுங்கள். 

கிரீஸ் :


லகின் வரலாற்றில் கிரேக்க நாகரிகத்துக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. கிரேக்க நாகரீகத்தின் கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்டது கிரீஸ். நகரை ஒட்டி கடல் மலைச்சரிவில் வீடுகள் என கிரீஸுக்கு சென்று வருவது வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். மிகப் பழமையான வரலாற்று பின்னணி, பல்வேறு வித்தியாசமான நில அமைப்புகளை கண்டது கிரீஸ். மே, ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கிரீஸில் நல்ல பருவநிலை நிலவும். கிரீஸ் நகரை சுற்றிலும் பல்வேறு தீவுகளுக்கும் அரண்மனைகளுக்கும் சென்று வருவது மறக்க முடியாத அனுபவமாய் இருக்கும். ஒவ்வொரு டிராவல் ஏஜென்சியும் பல்வேறு விதமான பேக்கேஜுகளை வழங்குகின்றன. சன்டோரினி சிவப்பு கடற்கரை, இரவு நேரத்தில் கிரீஸின் ஏதென்ஸ் நகரை சுற்றி வருவது என கிரீஸ் ட்ரிப்பில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உள்ளன.    

ஹவாய் :


சுபிக் பெருங்கடலின் நடுவே அமைந்திருக்கும் ஹவாய் மாகாணம் பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. அமெரிக்க மாகாணங்களில் கடலில் இருக்கும் ஒரே மாகாணமும் இதுவே. நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை கொண்டுள்ள ஹவாய் புதுமண தம்பதியினருக்கு ஏற்ற இடம். பொதுவாக மிதமான வெப்பநிலையை கொண்டுள்ள ஹவாயில் எந்த தீவுக்கு செல்ல போகிறோம் என முடிவெடுத்து விட்டு செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு விதமான நில அமைப்பையும். வித விதமான பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்டுள்ளன. அழகிய கடற்கரையில் நிலா வெளிச்சத்துடன் புதிதான உணவு வகைகளுடன் உணவருந்த ஏற்பாடு செய்வது உங்கள் துணைக்கு நிச்சயம் பரவசமான அனுபவமாக இருக்கும். ரொமான்டிக்கான இடமாக மட்டுமல்லாமல் அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்கும் ஏற்ற இடம் ஹவாய். 

பஹாமாஸ் :

 ட்லாண்டிக் பெருங்கடலில் ஏறத்தாழ 700 குட்டித் தீவுகளை கொண்டது பஹாமாஸ். மென்மையான மணலுக்குள் உங்கள் பாதங்கள் புதைந்திருக்க உங்கள் துணையின் கைகளை கோர்த்துக் கொண்டு  கண்களை மூடித் திறக்கும் பொழுது நீலக்கடல் விரிந்தால் நீங்கள் பஹாமாஸின் ஏதாவதொரு கடற்கரையில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என அர்த்தம். பத்தோடு பதினொன்றான சுற்றுலாத் தளம் அல்ல பஹாமாஸ். காதலர்களுக்கும், புதுமணத் தம்பதியினருக்கும் ரொம்பவே ஸ்பெஷலான இடம். தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்து மனதை புத்துணர்ச்சியாக்கிக் கொள்ள நினைப்பவர்களும் பஹாமாஸுக்கு ஒரு டிக்கெட் போடலாம். இரவில் மெல்லிய கேண்டில் வெளிச்சத்தோடு உங்கள் துணையுடன் உணவருந்துவது அன்லிமிடெட் சந்தோஷத்தை கொடுக்கும்.

மெக்ஸிகோ :

ழக்கமாக ஹனிமூன் என்றால் குளிர் பிரதேசங்களுக்கு தானே பயணம் செல்வார்கள். ஆனால் நல்ல வெப்பமான ஒரு பகுதிக்கு நீங்கள் செல்ல விரும்பினால் மெக்ஸிகோ பெஸ்ட் சாய்ஸ். இயற்கையான சூழல், கடற்கரைகள் என மெக்ஸிகோ  சுற்றுலாவுக்கும் ஹனிமூனுக்கும் ஏற்ற இடம். சுவையான அதே சமயம் புது வகையான உணவு வகைகளின் காதலரா நீங்கள் அப்படியானால்  நீங்கள் தவறவிடக் கூடாத நகரங்களில் இதுவும் ஒன்று. இரவு நேர பார்ட்டிகள், அட்வெஞ்சரஸ் விளையாட்டுகள், பொழுபோக்கு அம்சங்கள் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்ட இடங்கள், அருங்காட்சியகங்கள், வாட்டர் ஸ்போர்ட்ஸ் என மெக்ஸிகோவை திகட்டாமல் சுற்றி வரலாம். கடற்கரைகளின் ரிசார்ட்டுகளில் இதமான இசையோடு இரவு உணவை எடுத்துக்கொள்வது நல்ல அனுபவமாய் இருக்கும். புது வித கலாச்சாரங்களை அனுபவித்துப் பார்க்க மெக்ஸிகோவுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம் கப்பிள்ஸ்.

இத்தாலி : 


     

த்தாலி எப்போதுமே காதலர்களின் கனவு தேசம். காதலர்களுக்கு மட்டுமல்லாது அதிக சுற்றுலா பயணிகள் செல்ல விரும்பும் நகரங்களில் இத்தாலியும் ஒன்று. உலகின் சிறந்த உணவு வகைகள் பழமை மாறாத கட்டிடங்கள் தேவாலயங்கள் என வித்தியாச அனுபவத்துக்கு இத்தாலி சிறந்த சாய்ஸ். வெனிஸ் நகரின் வாய்க்கால்களில் உங்கள் துணையுடன் படகில் பயணம் மேற்கொள்வது தான் இத்தாலியின் இன்னொரு ஸ்பெஷல். வித விதமான வைன் வகைகள் இத்தாலியின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தனியாக வைன் டூர் என்றே ஒரு ட்ரிப் இருக்கிறதாம். நகரம் எங்கும் தேவாலயங்கள், அருங்காட்சியகங்கள் என நிறைந்திருக்க. வெனிஸ், ரோம் நகரங்கள் இத்தாலியில் மிஸ் பண்ணிவிடக் கூடாத நகரங்கள். வெனிஸ் படகுப் பயணத்தில் முக்கியமா உங்க செஃல்பி ஸ்டிக்கை மறந்துடாதீங்க!

ஹாப்பி ஜர்னி..!!

-  க. பாலாஜி