Published:Updated:

விண்வெளிக் கழிவுகளை அகற்ற புதிய யுக்தி

Vikatan Correspondent
விண்வெளிக் கழிவுகளை அகற்ற புதிய யுக்தி
விண்வெளிக் கழிவுகளை அகற்ற புதிய யுக்தி
விண்வெளிக் கழிவுகளை அகற்ற புதிய யுக்தி

ஜப்பானிய விண்வெளி ஆய்வு மையமான JAXA, விண்வெளியில் உள்ள கழிவுகளை அகற்ற புதிய யுக்தியைக் கையாள உள்ளது. இதன்படி, கடந்த வாரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள விண்கலம் மூலம், விண்வெளியில் சுற்றிவரும் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்துக்கு இழுத்து வரப்பட்டு தகர்க்கப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

2013-ம் ஆண்டு வரை பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்களின் ஆய்வில், 5 லட்சம் எண்ணிக்கையுள்ள விண்வெளிக் கழிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செயலிழந்த செயற்கைக்கோள்களின் பாகங்கள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இன்னும் சுழன்று கொண்டிருக்கின்றன. இது விண்வெளி ஆய்வு மையங்களுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. ஜப்பானின் இந்தப் புதிய தொழில்நுட்பம் மூலம் 700 மீட்டர் வரை நீளமுள்ள மின்சக்தி கொண்ட உலோகக் கயிறுகளால் விண்வெளிக் கழிவுகள் பூமியின் வளிமண்டலத்துக்குக் கொண்டுவரப்பட்டு தகர்க்கப்பட உள்ளன.

விண்வெளிக் கழிவுகள் ஜி.பி.எஸ். உதவியுடனும், ஆப்டிகல் கேமராக்கள் உதவியுடனும் அடையாளம் காணப்பட்டு தகர்க்கப்படும். இந்தப் பரிசோதனை முயற்சியின் கீழ் சில நூறு கிலோவிலிருந்து, சில டன் எடைகொண்ட கழிவுகள் வரை அகற்றப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.