Published:Updated:

நெட்டிசன்ஸ்... இன்றைய இணைய வாழ்க்கையை இப்படி அமைச்சு பாருங்களேன்!

நெட்டிசன்ஸ்... இன்றைய இணைய வாழ்க்கையை இப்படி அமைச்சு பாருங்களேன்!
நெட்டிசன்ஸ்... இன்றைய இணைய வாழ்க்கையை இப்படி அமைச்சு பாருங்களேன்!

நெட்டிசன்ஸ்... இன்றைய இணைய வாழ்க்கையை இப்படி அமைச்சு பாருங்களேன்!

காலைல கண்ணு முழுக்கிறதும் மொபைல்லதான். நைட்டு கண் மூடறப்ப கடைசியா பாக்குறதும் மொபைல்லதான். அந்த மொபைல்ல பாம்பு கேமா ஆடப் போறோம்? எல்லாம் நெட்டும், சாட்டும் தான். இணையத்துலதான் உலாவுறதுன்னு ஆயிடுச்சு. அட்லீஸ்ட் இதையெல்லாம் செய்யாதீங்க ப்ரோன்னு சொல்ற மாதிரி சில விஷயங்கள் இருக்கு. இந்த நற்காலை நேரத்துல இதை படிச்சு முடிஞ்சவரை ஃபாலோ பண்ணி பாருங்க பாஸ். 

  • பெரியவங்களை பாத்தா ஆளுங்கட்சி அமைச்சரா மடங்கினதெல்லாம் அந்த காலம். இப்பலாம் அதிகபட்சம் காதுல இருக்கிற ஹெட்ஃபோன கழட்டி வைப்போம். தட்ஸ் ஆல். அந்த ஹெட்ஃபோனால எவ்ளோ பிரச்னை தெரியுமா? வண்டி ஓட்டுறவங்க குடிச்சிட்டு ஓட்ட கூடாதுன்ற மாதிரி, நடக்கிறவங்க பாட்டு கேட்டுட்டே நடக்க கூடாதுன்னு ஒரு ரூல் போடணும். நாம என்ன லாரியா பாஸ்? “வர்லாம் வர்லாம் வா…பைரவா”ந்னு கேட்டு போறதுக்கு?
  • உலகத்துலயே சுவாரஸ்யமான பத்திரிகை எது தெரியுமா? பக்கத்து சீட்டுல இருக்கிறவன் படிக்கிற பேப்பர்தான். அதுல பாத்தா மட்டும் ரோஹித் ஷர்மா 300 ரன்னா அடிக்க போறாரு? அந்த மாதிரிதான் மொபைல் ஸ்க்ரீனும். எட்டி எட்டி பார்க்கற எந்த விஷயமும் எதுக்கும் உதவாது ப்ரோ. அப்படி பக்கத்து ஸ்க்ரீன்காரர் பாக்குற வீடியோவை நீங்க பாத்தே ஆகணும்ன்னா வாட்ஸப் நம்பர் சொல்லி அனுப்ப சொல்லுங்க, அவரும்  நம்பர் கொடுக்க தயங்காத ஆண்மகனா இருக்க வேண்டியது அவசியம்.
  • ஆஃபீஸ்ல வைஃபை இருக்கும்தான். அவங்க என்னதான் ஃபயர்வால் போட்டாலும், நாம அதை உடைப்போம்தான். பாட்டை டவுன்லோடு செய்வோம்தான். அல்லது ஆப்ஸ் அப்டேட் செய்வோம். அதுவரைக்கும் ஓகே. அச்சம் என்பது மடமையடா 1080 பிரிண்ட் வந்துடுச்சு. 'மஞ்சிமா வெயிட் வரைக்கும் துல்லியமா தெரிது'ன்னு எவனோ அடிச்சு விட்டத நம்பி 3 ஜிபி படத்தை டவுன்லோடு செய்றதெல்லாம் தப்பு பாஸ். லிமிட்டுக்கு மேல டேட்டா குவிச்ச வழக்குல நம்மள உள்ள போட்டுவாங்க. இது வேற ரெய்டு காலம்.
  • இன்னும் வராத ஒரே ஒரு செல்ஃபி பொறக்குறப்பவே குழந்தை எடுக்காத செல்ஃபி தான். மத்தபடி முதலிரவுல ஆரம்பிச்சு தற்கொலை வரைக்கும் எல்லா செல்ஃபியையும் இந்த உலகம் பாத்துடுச்சு. அதனால கொஞ்சம் யோசிச்சு எடுங்க பாஸ். குறைந்தபட்சம் கேமராவுக்கு நம்ம மூக்குக்கும் இடையில் ரெண்டு சிம்பு அளவுக்கு இடைவெளி இருப்பது நல்லது.
  • திருப்பதி கோவிலுக்கு போறப்ப யார் என்னனே தெரியாம தள்ளிவிடுவோமே.. அந்த மாதிரி வாட்ஸப்பை யூஸ் பண்ணாதீங்க. “நம்மில் எத்தனைக்கு பேருக்கு தெரியும்”னு வந்தாலே அது பொய்யான்னா செய்தியாதான் இருக்குன்ற அளவுக்கு ஆக்கிட்டாங்க ஹிஸ்டரி கிரியேட்டர்ஸ். “நம்ம மொபைலுக்கு வர்ற தகவல் தப்பா இருக்கலாம். ஆனா நம்ம மொபைல்ல இருந்து போற விஷயம் சரியானதா இருக்கணும்”. -இதை சூப்பர்ஸ்டார் பேசின பன்ச்சா நினைச்சு சீரியஸா எடுத்துக்கோங்க பாஸ்
  • லைக் போடுறதுக்கு உச்ச வரம்பு எதையும் மோடிஜி சொல்லலைதான். ஆனா, அதுக்காக கண்ணுல படுற ஸ்டேட்டஸ், கமெண்ட்ஸ்ன்னு எல்லாத்துக்கும் லைக் போடாதீங்க. ஃபேஸ்புக்ல லைக் போட்டாலும், மெஷர் பண்ணிதான் போடணும்னு மீம்ஸ்வாலாக்கள் எறங்கி அடிக்கிற அளவுக்கு பண்ணிடாதீங்கப்பு. பாராட்டுறது நல்ல விஷயம்தான். ஆனா அதை சரியா செய்யணும். தினமும் 100ரூ பாக்கெட் மணின்றாப்ள தினம் 20 லைக்தான்னு லிமிட் வச்சிக்கோங்க. அந்த 19 லைக்க பெஸ்ட் விஷயங்களுக்கு போடுங்க. மிச்சம் ஒண்ணா? அதத்தான் இந்த போஸ்ட்டுக்கு போட போறீங்களே..

-கார்க்கிபவா

அடுத்த கட்டுரைக்கு