Published:Updated:

'முடியட்டும் விடியட்டும்' முதல் 'எல்லையிலே வீரர்கள்' வரை - 2016ன் தெறி ஹேஸ்டேக்ஸ்

'முடியட்டும் விடியட்டும்' முதல் 'எல்லையிலே வீரர்கள்' வரை -  2016ன் தெறி ஹேஸ்டேக்ஸ்
'முடியட்டும் விடியட்டும்' முதல் 'எல்லையிலே வீரர்கள்' வரை - 2016ன் தெறி ஹேஸ்டேக்ஸ்

'முடியட்டும் விடியட்டும்' முதல் 'எல்லையிலே வீரர்கள்' வரை - 2016ன் தெறி ஹேஸ்டேக்ஸ்

தினமும் புதுப்புது செய்திகள் வெளிவந்தாலும் சமூக வலைதளங்கள் நம்மை ஆல்டைம் அப்டேட்டிலேயே வைத்திருக்கின்றன. நிறைவடையப் போகும் 2016 -ல் தமிழர்களின் சோஷியல் மீடியா சுவர்களில் அதிகமாகச் சுற்றித் திரிந்த வசன ஹேஸ்டேக்குகளின் பின்னணி என்னனு தெரிஞ்சிக்கலாம் வாங்க...

அங்கே எல்லையிலே... :
மோடி கறுப்புப் பணத்தை ஒழிக்கும் திட்டம் எனச் சொல்லி நாட்டு மக்களையெல்லாம் கால்கடுக்க ஏ.டி.எம் வரிசையில் நிற்கவைத்ததைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். 'என்னய்யா அப்பாவி மக்களை இப்படிப் பண்றீங்க'னு புலம்பினவங்களுக்கு இன்னும் கடுப்பாகுற மாதிரி 'அங்கே எல்லையில் ராணுவ வீரர்கள் எல்லாம் கால்கடுக்க நின்னுதானே நாட்டைக் காப்பாத்துறாங்க... நாட்டுக்காக வரிசையில் நிற்கமாட்டீங்களா...' எனச் சில தேசபக்தர்கள் கூவ, அதைப் பிடித்து அடி அடி என அடிக்கத் தொடங்கினார்கள் நெட்டிஸன்கள். வருடத்தின் எல்லை முடிவில் தொடங்கினாலும் 'எல்லையிலே...' செம ட்ரெண்ட் அடித்தது. 

அப்படித்தான் பேசிக்கிறாங்க :
வருடத்திற்கு ஒரு விஜய் படம் வருவதும், எதிர்த் தரப்புகள் அதை வெச்சு செய்வதும் 'ஆதி'காலந்தொட்டு நடைபெறும் வழக்கம். இந்த வருடம் தெறி கொஞ்சம் தப்பிக்க, பைரவா டீஸருக்கே தலைகீழாகத் தொங்கவிட்டு 'உறி உறி' என உறித்தனர் மீம் க்ரியேட்டர்ஸ். 'நீ என்ன பெரிய வசூல் மன்னனா' என டீஸரில் நிலைமை புரியாமல் கேட்க, 'அப்படித்தான் பேசிக்கிறாங்க' என விஜய் அண்ணா அசால்ட்டாகச் சொன்னதை அவர் கழுத்துக்கே திருப்பி மீம்ஸ், ஸ்டேட்டஸ் என வீசினார்கள். இந்த வசனமும் செமையாக ட்ரெண்டாச்சுனு பேசிக்கிறாங்க.

முடியட்டும் விடியட்டும் : 
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி தளபதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செஞ்சு 'நமக்கு நாமே'ன்னு தானே தன் கையால ஹேண்ட்பாரைப் பிடிச்சு சைக்கிள், ஸ்கூட்டர்னு ஓட்டினப்போ முழங்கின மந்திரச் சொல் தான் 'முடியட்டும் விடியட்டும்'. பாவம், எதுக்கு இதை ஆரம்பிச்சாரோ, அந்த திட்டமும் பணால் ஆகி அவரைக் கலாய்க்க அவரே ஐடியா கொடுத்த மாதிரியும் ஆகிப் போச்சு. அந்த ரெண்டு வார்த்தையை ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ஹேஸ்டேக் போட்டு அடிக்க, கடைசியில 'வேதனைகொள்ளாதே உடன்பிறப்பே' னு தளபதிக்கே தொண்டர்கள் ஆறுதல் சொல்ற நிலைமையும் வந்திடுச்சே.. அடப்பாவமே!

என்னம்மா ஆச்சு உங்களுக்கு? :

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆன பின்பு எந்தத் தகவலும் வராத சூழலில் போராளிகள் அனைரும் சமூக வலைதளங்களில் போஸ்ட் பொங்கல் மட்டும் வைக்க, கவிஞர் சினேகன் ஒரு ஸ்டெப் மேலே போய், ஒரு பக்கம் கழுத்தைச் சாய்த்தபடி, 'என்னம்மா ஆச்சு உங்களுக்கு... நீங்க வேணும் எங்களுக்கு..' என எதுகை மோனையோடு கவிதை பாடிக் கலங்க மொத்த நெட்டிஸன்களும் ஒரே இடத்தில் கூடிப் பாராட்டுவிழாவே நடத்தி முடித்தார்கள். பாவமாப் பேசினவருக்கு மிஞ்சினது என்னமோ பரிதாபம்தான்.

சோர்ஸ் சொல்லுது :
சோஷியல் மீடியாக்களில் அள்ள அள்ளக் குறையாத அளவுக்கு வதந்திகள் விஸ்வரூபம் எடுத்தன. இந்த ஆண்டு முழுவதும் அவ்வப்போது ஒவ்வொன்றாக அதிர்ச்சி கிளப்பி அதை எகிடுதகிடாக ஃபார்வர்டு செய்து தமிழர்கள் சமூக சேவை புரிந்தார்கள். ஒரு கட்டத்தில் எந்தச் செய்தி வந்தாலும் அதை நம்புவதற்குக் கூட அனைவரும் தயங்குவதற்குக் காரணம் வதந்திகள் காட்டுத்தீயைப் போல எளிதில் பரவியதுதான். சரி இது சரிப்படாதுனு அடுத்த லெவலில் 'சோர்ஸ் சொல்லுது', 'நம்பத் தகுந்த வட்டாரத் தகவல் ' ன்னு கலர்கலரா புருடா விட்டுப் பீதியைக் கிளப்புனாய்ங்க. 'சோர்ஸ் சொல்லுது'ன்னு சீரியஸா சொல்லவேண்டிய விஷயத்தை காமெடி ஆக்கின தலைமுறை நம்ம தலைமுறைதேன்.

நெருப்புடா :
தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'கபாலி' ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பரபரப்பாகி 'நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்..' என வெறித்தன தீம் சாங்கோடு வெளிவந்தது. உலகத்தமிழ் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் முகத்தைத் திரையில் பார்க்கப்போகும் மகிழ்ச்சியில் நெருப்புடா ஹேஸ்டேக் போட்டுத் தெறிக்கவிட, கூடவே #மகிழ்ச்சியும் சேர்ந்து ட்ரெண்ட் அடித்தது. கபாலி காய்ச்சல் ஓயும்வரை சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்திருந்த இந்த ஹேஸ்டேக்குகள் கல்பனா அக்கா 'நெர்ர்ருப்புடா...' என முழங்கியதையும் சேர்த்து இந்த வருடத்தின் செம ட்ரெண்ட் செட்டர் ஆனது கபாலி.

இவை தவிர தினம் தினம் பல மேட்டர்கள் ட்ரெண்ட்டிங்கில் விளையாடின. பொழுது போகாமல் ஆரம்பிச்ச மேட்டரெல்லாம் அதிரிபுதிரி ட்ரெண்ட் ஆனது. 'நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்' முதல் 'ஆதாரம் இருக்கிறது', 'எதுனா சொல்லுவோம்'  வரை அத்தனையையும் கீபோர்டு நட்டுகள் கழறக் கழறத் தட்டிக் கதறவிட்டது தமிழ் 'சமூக வலைதளச் சமூகம்'. 

- விக்கி 

அடுத்த கட்டுரைக்கு