பிரீமியம் ஸ்டோரி
நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
நாளைய நம்பிக்கை!
 
சத்யன்
நாளைய நம்பிக்கை!
வயது 14
ல்லியான ஒரு பையன் பத்து நாட்கள் டைபாய்டில் படுத்தால் எப்படி இருப்பான்? கிட்டத்தட்ட அப்படியே ஒரு மூங்கில் போல இருக்கிறான் சத்யன்!

ஆனால், இன்று டேபிள் டென்னிஸ் போட்டியின் சப் ஜூனியர் பிரிவில் சத்யன்தான் இந்தியாவின் நம்பர் ஒன்!

தேசிய சப் ஜூனியர் சாம்பியன் பட்டங்கள் அவன் பாக்கெட்டில்! சீனாவில் நடந்த உலக ஜூனியர் சர்க்யூட் டேபிள் டென்னிஸ் போட்டி களில் சீனா, டோஹா, இரான் ஆகிய நாடுகளில் வென்ற ஏழு பதக்கங்கள் சத்யன் வீட்டுச் சுவரை அலங்கரிக்கின்றன.

நாளைய நம்பிக்கை!

‘‘இந்த உடம்பை வைத்துக்கொண்டு இதெல்லாம் எப்படி சாத்தியம்?’’ என்று கேட்டால், சிரிக்கிறான். ‘‘இந்த உடம் பால்தான் இதெல்லாம் கிடைத்தது. டேபிள் டென்னிஸில் என்னுடன் மோதும் பலர் என் உடம்பைப் பார்த்து ஏமாந்துவிடுவார்கள். ‘சின்னப் பையன், ரொம்ப நேரம் தாக்குப்பிடிக்க மாட் டான்’ என்று நினைத்து ஆட வருவார் கள். ஆனால், தொடர்ந்து ஐந்தாறு மணி நேரம் நான்ஸ்டாப்பாக ஆடுவேன் நான். என் ஸ்டாமினாதான் என் சக்சஸ்!’’ என்கிறான் அழகாக.

சத்யன் டேபிள் டென்னிஸ் ஆட வந்ததே தற்செயலாகத்தான். அப்போது சத்யனுக்கு வயது ஐந்து. சத்யனின் அக்காக்கள் திவ்யாவும், ரேகாவும் தங்கள் பள்ளியில் டேபிள் டென்னி ஸில் கலக்கிக்கொண்டு இருந்தார்கள். சென்னையில் பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சந்திரசேகர் நடத்தும் பயிற்சி முகாமில் அவர்களைச் சேர்க்க விரும்பினார் அம்மா மலர்க்கொடி. அதற்காகப் பயிற்சி முகாம் செல்லும் போது, சிறுவன் சத்யனையும் அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால் அங்கிருந்த கோச், சத்யனின் சகோதரிகளை அனுமதிக்க வில்லை. ‘இவர்கள் இருவரும் 10 வயதைக் கடந்தவர்கள். டேபிள் டென்னிஸில் சிறப் பாகத் திகழ, இன்னும் சிறிய வயதிலேயே பயிற்சியை ஆரம்பித்திருக்க வேண்டும். நீங்கள் விரும்பினால், உங்கள் சின்ன மகனுக்குப் பயிற்சி அளிக்க நான் தயார்’ என்று அவர் சொல்ல, சத்யனின் டேபிள் டென்னிஸ் வாழ்க்கை ஆரம்பமானது.

நாளைய நம்பிக்கை!

ஆரம்பத்தில் சும்மா ஜாலிக்காக ஆட ஆரம்பித்த சத்யன், ஆட்டத்தின் த்ரில் பிடித்துப் போக, தீவிரம் காட்டத் தொடங்கினான். 2001-ல் நடந்த ஸ்டேட் ரேங்கிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதும், உற்சாகம் மேலும் கூடியது. கடுமையான பயிற்சி துவங்கியது. எங்கே எப்போது டேபிள் டென்னிஸ் போட்டி என்றாலும், அங்கே ஆஜராகிவிடுவான் சத்யன். அங்கு ஆடும் வீரர்களின் ஸ்டைல் என்ன, அவர்களின் ப்ளஸ், மைனஸ்கள் என்னென்ன என்பதை ஒரு டைரியில் குறித்துக் கொள்வான்.

எந்தப் போட்டியில் ஆடினாலும், முதல் செட்டில் சத்யன் பாய்வதில்லை. மாறாக, எதிரியின் பலம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நிதானமாக ஆடுவான். அந்த செட்டில் எதிராளி ஜெயித்தாலும் கவலைப் படுவதில்லை. அடுத்த செட்டில் அதற்கும் சேர்த்து தன் வேகத்தை தீவிரப்படுத்துவான்.

நாளைய நம்பிக்கை!

‘‘இதனால் இரண்டு வித நன்மைகள் உண்டு. ஒன்று, முதல் செட்டில் நான் மோசமாக ஆடுவதால், எதிரணி வீரர் என்னைக் குறைத்து மதிப்பிட்டு அடுத்த செட்டில் கோட்டைவிடுவார். இரண்டு, முதல் செட்டில் நான் ரிலாக் ஸாக இருப்பதால், அடுத்தடுத்த செட் களில் முழு பலத்துடன் என்னால் ஆட முடியும்’’ என்கிறான் சிரித்துக்கொண்டே.

டேபிள் டென்னிஸுக்காகப் பல நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிற சத்யனை மிகவும் கவர்ந்த நாடு சீனா.

‘‘அவங்களுக்கு செம ப்ளான் இருக்கு. நாமெல்லாம் கொஞ்சம் ஸ்போர்ட்ஸ், கொஞ்சம் படிப்புனு எதிர்காலத்தைப் பத்தி சரியா திட்டமிடாம பிச்சுப் பிச்சு வாழறோம். ஆனா, சீனாவில் தங்களுக்கு எது முக்கியம்னு முதல்லயே தீர்மானிச் சுக்கிறாங்க. அப்புறம், அதுக் கேத்த மாதிரி திட்டமிடறாங்க. உதாரணமா, ஒரு டேபிள் டென்னிஸ் பயிற்சி மையத்துக்குப் போனேன். அங்கே இருக்கிற வீரர்கள் அடிப்படைக் கல்வி மட்டும்தான் படிச்சி ருக்காங்க. ஆனா, டேபிள் டென்னிஸ்ல தினமும் பத்து மணி நேரம் வரை பயிற்சி செய்றாங்க. அதனால்தான் அவங்க சாம்பியனா இருக்க முடியுது’’ என்கிறான் சத்யன்.

சீனாவைப் பார்த்து சத்யன் ஏங்கும் இன்னொரு விஷயம்... டேபிள் டென்னிஸுக்கு பயிற்சி தரும் ரோபோ! அங்கெல்லாம் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோபோ மின்னல் வேகத்தில் பால் வீசிப் பயிற்சி தருகிறதாம். ஆனால், சத்யனின் அகாடமியில் ஒரே ஒரு ரோபோதான் இருக்கிறது. இன்னும் வசதிகள் கிடத்தால், அது தன் வெற்றிப் பயணத்தை மேலும் வேகமாக்கும் என விரும்புகிறான் சத்யன்.

வாழ்த்துவோம்!

 
நாளைய நம்பிக்கை!
\ பி.எம். சுதிர்
படங்கள்: சு. குமரேசன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு