Published:Updated:

ஜெயிக்கப் போவது யார்...

ஜெயிக்கப் போவது யார்...

பிரீமியம் ஸ்டோரி
ஜெயிக்கப் போவது யார்...
ஜெயிக்கப் போவது யார்...
ஜெயிக்கப் போவது யார்...
ஜெயிக்கப் போவது யார்...
 
சேப்பலா, உல்மரா?
ஜெயிக்கப் போவது யார்...

‘‘இ ந்தியா - பாகிஸ்தான் இடையே இப்போது நடப்பது கிரிக்கெட் அல்ல... யுத்தம்! தோற்பது எந்த அணியாக இருந்தாலும், அதன் பயிற்சியாளரின் தலை உருள்வது நிச்சயம்!’’ என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். பாகிஸ்தானின் பயிற்சியாளர் பாப் உல்மரின் தலைக்குதான் அதிக ஆபத்து!

ஜெயிக்கப் போவது யார்...

‘இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்... முதலாவது அதிகாரம்! மற்ற எந்த அணிகளையும்விட பாகிஸ்தான் தன் பயிற்சியாளருக்கு முழு அதிகாரத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாவது காரணம், எதிரிகள். அதிகாரத்தைவிட அதிக அளவு எதிரிகளைச் சம்பாதித் திருக்கிறார் உல்மர். இந்தியாவிடம் தோற்றால், அதையே காரணமாக வைத்து உல்மரைக் காலி பண்ணக் காத்திருக்கிறார்கள் மியான்தத், இம்ரான்கான் போன்ற எதிரிகள்.

‘இந்திய அணிக்கு சேப்பல் வந்ததைப்போல் பாகிஸ்தான் அணிக்கு பாப் உல்மர் வந்த கதையும் சுவாரஸ்ய மானது. 2004-ல் நடந்த கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானை இந்திய அணி துவைத்து எடுத்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தோல்வியைப் பற்றி விவாதிக்கக் கூடியபோது, வெளிநாட்டு கோச் பற்றிய விவாதம் எழுந்தது. ‘இந்திய அணி பலவிதங்களில் நவீனமாகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் ஜான் ரைட் என்கிற வெளிநாட்டுப் பயிற்சியாளர். ஆனால், நாம் இன்னும் மியான்தத் போன்ற முன்னாள் வீரர்களை வைத்தே நம் வீரர்களுக்கு பயிற்சி தருகிறோம். இதை மாற்ற வேண்டும்’ என்று கூட்டத்தில் பலரும் சொல்ல, ‘சரி, உங்கள் கோரிக்கையை ஏற்கிறேன். உலகின் டாப் கோச்சான பாப் உல்மரைப் பயிற்சியாளராக நியமிக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்றார், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியர் கான்.

‘பாகிஸ்தானில் இருந்து அழைப்பு என்றதும், முதலில் கொஞ்சம் யோசித் திருக்கிறார் உல்மர். ‘இப்படித்தான் அழைப்பீர்கள். ஆனால், ஒரு தொடரில் தோற்றதும் குப்பைத் தொட்டியில் வீசிவிடுவீர்கள்’ என்று உலமர் தயங்க, ‘கவலையே படாதீர்கள்! அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள்தான் கோச்!’ என்று உறுதி கூறி, அவரை ஒப்புக்கொள்ளச் செய்திருக்கிறார் ஷாரியர் கான். பதிலுக்கு அவர் கேட்டது ஒன்றே ஒன்றைத் தான்... அது இந்தியாவுக்கு எதிரான வெற்றி!

ஜெயிக்கப் போவது யார்...

‘சேப்பலுக்கு இந்தியாவில் வந்த தைப் போலவே பாகிஸ்தானில் உல்மருக்கும் எதிர்ப்பு வந்தது. பாகிஸ்தானின் மொழி, கலாசாரம் எதற்கும் பொருத்தமில்லாத ஒருவர் எப்படிப் பயிற்சியாளராக முடியும் என்று சர்சையைக் கிளப்பினார் மியான்தத். அவரது ஆதரவு வீரர்கள் சிலரும் சண்டித்தனம் செய்ய, ஆஸ்தி ரேலியாவுக்கு எதிரான தொடரில் தோற்றது பாகிஸ்தான். உல்மரை நீக்கியே ஆக வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாரியர் கான், ‘உல்மரே பயிற்சியாளராகத் தொடர் வார்’ என்று அறிவித்து, அவருக்கு முழு அதிகாரமும் அளித்தார்.

‘அதிகாரம் கிடைத்ததும் சாட்டையைக் கையில் எடுத் தார் உல்மர். ‘பாகிஸ்தான் அணியில் நடக்கும் ஈகோ யுத்தத்தை முதலில் நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதில் ஈடுபடுபவர்களை அணியில் இருந்தே நீக்கி விடுவேன்’ என்று வீரர்களை எச்சரித்தார். அதேபோல், தான் பயிற்சியாளராக இருக்கும் வரை இன்சமாம் தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்று கண்டிப் பாகச் சொல்லிவிட்டார். ‘கேப்டன்கள் அடிக்கடி மாறினால், முன்னாள் கேப்டனை என்ன செய்வது என்ற கேள்வி வரும். அவரை அணியில் சேர்த்தால் டீமுக்குள் கோஷ்டிப் பூசல் உண்டாகும். இது அணியை பலவீனப்படுத்தும்’ என்பது உல்மரின் வாதம்.

ஜெயிக்கப் போவது யார்...

‘அடுத்ததாக, ஷோயப் அக்தரை அழைத்தார். ‘உன் பந்து வீச்சு சரியில்லை. நீ பந்தை வீசுவதற்காக நீண்ட தூரம் ஓடிவருகிறாய். உன் சக்தி எல்லாம் ஓடுவதிலேயே வீணாகிவிடுகிறது. அதனால் பந்து வீசுவதற்காக ஓடிவரும் தூரத்தைப் பாதியாகக் குறைத்துக் கொள்’ என்று அறிவுரை வழங்கினார். இது அக்தரின் ஈகோவை உரசிப் பார்த்தது. ‘ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வாங்கிய தனக்கு இவர் ஆலோசனை சொல்வதா என்று அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் இருந்தார். தவிர, அவருக்கு முக்கியத் தொடராக இருந்த இந்திய சுற்றுப் பயணத்திலும் கலந்து கொள்ளாமல் விலகினார். உல்மர் அசரவில்லை. இளம் பந்துவீச்சாளர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். ‘கழுத்து வரை பந்து உயர்ந்தால் இந்தியர்களால் சமாளிக்க முடியாது. எனவே, கழுத்தை நோக்கிப் பந்தை வீசுங்கள்’ என்று சொல்லிக் கொடுத்தார். அதோடு, அஃப்ரிடி, ஷோயப் மாலிக் இருவருக்கும் ஸ்பெஷல் கிளாஸ் களை எடுக்க, கடந்த ஆண்டு இந்திய மண்ணி லேயே இந்தியாவை வீழ்த்தினார் உல்மர்.

‘தான் இல்லாமலேயே பாகிஸ்தான் ஜெயித்த தும் கலவரமடைந்த அக்தர், உல்மரிடம் சரண டைய, அவருக்காக ஸ்பெஷல் வகுப்புகளை நடத்தினார் உல்மர். இதன் விளைவாக அக்தரின் ரன் அப் குறைந்து, பந்து வீச்சு வேகம் அதிகரித்தது. இப்போது மீண்டும் உலகின் முன்னணி பந்து வீச்சாளராகி இருக்கிறார் அக்தர். இன்சமாம் - உல்மர் கூட்டணியுடன் அக்தரும் சேர்ந்ததால் இங்கிலாந்தைத் துவைத்து எடுத்தது பாகிஸ்தான் அணி. இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரான வெற்றிதான் தன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பது உல்மருக்குத் தெரியும்.

‘டோனியையும், பதா னையும் கட்டி வைக்கத் தேவையான பல திட்டங்களை லேப் டாப்பில் தீட்டினார். இந்திய அணி மைதானத் துக்கு வரும் முன்பே, அந்த கூடாரத்துக்குள் சிக்கலை ஏற்படுத்த கங்குலி - சேப்பல் மோதல் பற்றி கட்டுரை மேல் கட்டுரையாக பாக். பத்திரிகைகளில் எழுதிக் குவித்தார். இவை போதாதென்று பாக். பந்து வீச்சுக்குச் சாதகமாக பிட்ச்களில் அடர்த்தியாக புல் வளர்க்கவும் உத்தரவிட்டார். ஆனால் பாவம், இந்திய அணியில் உள்ள சிக்கலைவிட பாகிஸ்தானில் அதிக சிக்கல்கள் இருப் பது உல்மருக்கு தெரியவில்லை. அடர்த்தியாக புல் உள்ள பிட்சை உல்மர் கேட்க, அதற்கு நேர்மாறாக புல்லே இல்லாத பிட்ச் லாகூரில் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜெயிக்கப் போவது யார்...

‘உல்மர் இதனால் சோர்ந்திருந்த வேளையில், சேப்பல் - டிராவிட் கூட்டணி, தன் அதிரடி திட்டங் களை நிறைவேற்றத் தொடங்கியது. முதல் திட்டம் ஷோயப் அக்தரை பலவீனப்படுத்துவது. சாதாரண மாக, ஒரு தொடரின் முதல் போட்டி யில் விக்கெட் விழாமல் தன் பந்து வீச்சில் அதிக ரன்களைக் கொடுத்தால், அதற்கடுத்த போட்டிகளில் சோர்ந்துபோவது அக்தரின் வழக்கம். 2004-ல், முல்டானில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஷேவாக் 300 ரன்களை எடுக்க, மனமுடைந்த அக்தர் அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக பந்து வீசாதது ஊரறிந்த விஷயம். எனவே, இந்த முறையும் அக்தரை பலவீனப்படுத்தும் பொறுப்பு ஷேவாக் கிடம் கொடுக்கப்பட்டது. அவரும் துணிந்து அட்டாக் செய்து லாகூரில் அக்தரை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.

‘அடுத்ததாக, அணியின் ஒற்று மையை உல்மர் குறிவைக்க, அதைத் தடுக்கும் பொறுப்பு சச்சினிடம் வழங்கப் பட்டது. பாகிஸ் தானில் இப்போது கங்குலி எங்கே சென் றாலும் சச்சினும் கூடவே இருக்கி றாராம். இதனால், தான் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வின்றி ஃப்ரெஷ்ஷாக இருக்கிறார் கங்குலி. இந்த இரண்டையும் தவிர, மூன்றாவதாக ஒவ்வொரு போட்டி யிலும் பேட்டிங் வரிசையைக் குழப்பி உல்மருக்கு தலைவலி கொடுப்பதும் ஒரு திட்டம்.

‘முதல் ரவுண்டில் சேப்பல் ஜெயித்துவிட்டார். அடுத்தடுத்த ரவுண்டுகள் எப்படி என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!‘

செல்லம்!

மூன்று மாதங்களே ஆன தன் மகன் ‘சமித்’தையும் பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் டிராவிட். ஓய்வு நேரங்களில், கேப்டனின் மகனைப் போட்டி போட்டுத் தூக்கிக் கொஞ்சுகிறார்கள் நம் வீரர்கள்!

 

கால்களின் காவலன்!

ஜெயிக்கப் போவது யார்...

அக்தரின் பந்துவீச்சை விட அவரது ஷூக்களைப் பற்றித்தான் ஆர்வமாகப் பேசுகிறார்கள். செம க்ரிப்புடன் வடிவமைக்கப் பட்டுள்ள ஷூக்களின் விலை 53 ஆயிரம் ரூபாய்!

 

ஸ்பெஷல் பிரேயர்!

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் லாகூர் அருகே உள்ள ‘ராய்விண்ட்’ மசூதியில் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்கள் பாகிஸ்தான் வீரர்கள். இதற்கு ஏற்பாடு செய்தவர்... கிரிக்கெட்டை விட்டு தீவிர மதப் பிரசாரகராக மாறியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்!

 

பாயா பதான்!

ஜெயிக்கப் போவது யார்...

பாகிஸ்தானில் எந்த ஓட்டலுக்குப் போனாலும் பதான் கேட்கும் முதல் கேள்வி, ‘‘பாயா கிடைக்குமா?’’ என்பதுதான். பாகிஸ்தான் பாயாவுக்கு அந்த அளவு அடிமையாகிவிட்டார் பதான்.

 

 
ஜெயிக்கப் போவது யார்...
\ பி.எம். சுதிர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு