பிரீமியம் ஸ்டோரி
ஒரு விளக்கம்
ஒரு விளக்கம்
ஒரு விளக்கம்
ஒரு விளக்கம்
 
ஒரு விளக்கம்

வி கடன் 1.1.06 இதழில், சட்டசபையில்கேள்வி கேட்கப் பணம் வாங்கியதை ஒப்புக்கொள்ளும் விதத்தில் தீரர் சத்தியமூர்த்தி பேசியதாக ஒரு தகவலை, ‘பாரததேவி’ இதழிலிருந்து மேற்கோள் காட்டி, ‘ஓ... பக்கங்கள்!’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் ஞாநி. அது குறித்து, சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ஆதங்கம் பொங்க நம்மிடம் பேசினார்.

‘‘அப்படியரு உரையை அப்பா எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் நிகழ்த்தினார் என்பது பற்றிய விவரம் 'பாரததேவி' இதழில் இல்லை. அப்படி எதுவும் நடந்ததாக ஆதாரம் உண்டா?

ஒரு விளக்கம்

என் ஒன்பதாவது வயதிலிருந்து அப்பாவின் நிழலாகவே நான் இருந்திருக்கிறேன். 1940-ம் வருஷத்திலிருந்து, அதாவது இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில், மாநில மற்றும் மத்திய சட்டசபை நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளவில்லை. அதற்கு முன் 1935 முதல் 39-ம் வருடம் வரை காங்கிரஸ் மாநிலங்களவை செகரட்டரி யாகவும், பின்னர் துணைத் தலைவராகவும் என் தந்தை முழுவீச்சில் பணியாற்றினார். அப்போது அரசியல்வாதி களின் அத்தனை நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படை யாக இருந்தன. 'பாரததேவி'யில் சொல்வது போல, அப்பா பணம் வாங்கிக்கொண்டு சட்டசபையில் பேசுவதாகக் கூறியிருந்தால், உடனடியாக அது மீடியா கவனத்துக்கு வந்திருக்காதா? அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் புலாபாய் தேசாய், காந்தி, நேரு போன்றோர் அப்பாவைக் கடுமையாக விமர்சித்திருக்க மாட்டார்களா?

அப்பா சிறு துளியேனும்அப்பழுக்கு கொண்டவராக இருந்திருந்தால், ‘சட்டசபைக்கு நம் கட்சி சார்பாக டஜன் உறுப்பினர்களை அனுப்ப வேண்டியதில்லை. சத்தியமூர்த்தி ஒருவரே போதும்’ என்று காந்திஜி பெருமிதமாகச் சொல்லியிருப்பாரா? அல்லது, காமராஜர்தான் அப்பாவை தன் ‘அரசியல் குரு’ என்று பகிரங்கமாக அறிவித்திருப்பாரா?

ஒரு விளக்கம்

என் தந்தை இறந்தது 1943 மார்ச் 28-ம் தேதி! அதற்கு ஒன்பது மாதம் கழித்து, டிசம்பர் 8-ம் தேதி ‘பாரததேவி’ இதழில், அப்பாவுக்குக் களங்கம் கற்பிக்கும் வகையில், ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்கிற ரீதியில், இப்படியரு கட்டுரை வெளியானது என்றால், இதற்கு என்ன அர்த்தம்? இறந்தவர்கள் கல்லறையிலிருந்து எழுந்து வந்து, தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க மாட்டார்கள் என்ற தைரியம்தானே?!

கலப்படம் இல்லாத உண்மைத் தகவல்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டும்’’ என்கிறார் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, மன வருத்தத்துடன்!

இது குறித்து, கட்டுரையாளர் ஞாநி...

‘‘62 ஆண்டுகளுக்கு முன்பு, அப்போதைய காங்கிரஸ் ஆதரவு இதழான ‘பாரததேவி’யில் வெளி யானதைத்தான் குறிப்பிட்டிருந்தேன். இதை அப்போதே பெரியார், ‘குடி அரசு’ இதழில் வெளியிட்டிருந்தார். இன்று சத்தியமூர்த்தியும் இல்லை. பெரியாரும் இல்லை. பாரத தேவியை நடத்தியவர்களும் இல்லை. மேற்படி வரிகளை மேற்கோள் காட்டி எழுதியதில் என் நோக்கம் - 60 ஆண்டுகளுக்கு முன்பு முழு நேர அரசியல்வாதியின் சிக்கலையும், இன்றைய அரசியல்வாதியின் வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டுப் பார்ப்பது மட்டுமே! சத்தியமூர்த்தியின் சில கருத்துக்களுடன் மாறுபாடு இருந்தபோதும், அவருடைய நேர்மையை நான் சந்தேகிக்கவில்லை. ‘பாரததேவி’யின் மேற்கோளைக்கூட, அவர் தன் நிலையை மறைக்காமல் ஒளிவுமறைவின்றிப் பேசிய நேர்மையை உணர்த்துவதாகக் கருதியே பயன்படுத்தினேன்’’ என்கிறார்.

ஒரு விளக்கம்
ஒரு விளக்கம்
 
ஒரு விளக்கம்
-எஸ். கல்பனா,
படம்: கே. கார்த்திகேயன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு