Published:Updated:

டீன் கொஸ்டீன்

அகதி குழந்தையை எப்படித் தத்து எடுப்பது?

டீன் கொஸ்டீன்

அகதி குழந்தையை எப்படித் தத்து எடுப்பது?

Published:Updated:
##~##

ஆ.சாந்தி, சென்னை-21.

 ''28 வயது இளம் விதவை நான். இரண்டு பெண் குழந்தைகள். சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எவரும் இல்லை. நான் விதவைகளுக்காக வழங்கப்படும் உதவித்தொகையைப் பெற முடியுமா? அதற்கான வழிமுறைகள் என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜான் லோப்பஸ் நிறுவனர் - தலைவர்,
  தகவல் அறியும் உரிமை இயக்கம்.

டீன் கொஸ்டீன்

''உங்கள் கணவர் இறந்ததற்கான இறப்புச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் தந்து, உங்களுக்கான விதவைச் சான்றிதழைப் பெறலாம். விதவைச் சான்றிதழிலேயே உங்கள் குடும்பச் சூழல், குழந்தைகள் நிலையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருக்கும். விதவைச் சான்றிதழ் பெற்றதும் உதவித் தொகை பெற சமூக நலத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

குடும்ப வருமானம்

டீன் கொஸ்டீன்

2,000-க்குக் கீழே உள்ளவர்களும் வேலை செய்ய முடியா மல் படிக்கும் அல்லது சிறு வயதுக் குழந்தைகள் இருந்தால் மட்டுமே, விதவை உதவித்தொகை

டீன் கொஸ்டீன்

500  கிடைக் கும். பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள்தான் விதவை உதவித்தொகையைப் பெறலாம். பிள்ளைகள் வேலை செய்யும் அளவுக்கு இருந்தால், பொய் சொல்லி விதவை உதவித் தொகையைப் பெறுவது சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், உதவித் தொகை கேட்டு விண்ணப்பிப்பவர்கள் நிலை உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியதா என்று நேரடியாக வீட்டுக்கு வந்து ஆய்வு செய்வார்கள். எனவே, பொய்யைத் தவிர்ப்பது நலம்!''

எம்.ராஜா, திருவள்ளூர்.

''நான் சமீபத்தில் என்னுடைய பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டேன். காவல் துறையில் புகார் அளித்தால், பல காரணங்களைக் காட்டி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்ய மறுக்கிறார்கள். மறுமுறை பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கவும் முடியாத சூழ்நிலை. என் பிரச்னைக்கு என்ன வழி?''

செந்தில் பாண்டியன்,பாஸ்போர்ட் அதிகாரி.

''பாஸ்போர்ட் தொலைத்தால், சட்டப்படி போலீஸ் FIR காப்பி தந்து தான் ஆக வேண்டும். தர முடியாது என்று சொல்ல முடியாது. FIR போடாவிட்டாலும் போலீஸின் கவனத்துக்கு உங்கள் பாஸ்போர்ட் தொலைந்ததுபற்றிய தகவல் கிடைத்தது என்பதை நிரூபணம் செய்ய ஒரு ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம். FIR காப்பி இல்லாமல் இன்னொரு முறை பாஸ்போர்ட் பெறலாம் என்ற நிலை இருந்தால், நிறையப் பேர் இரண்டு பாஸ்போர்ட் வைத்து இருப்பார்கள். இது சட்டப்படி தவறு. எனவே,

டீன் கொஸ்டீன்

பாஸ் போர்ட் தொலைந்து 10 வருடங்கள் கழித்து FIR காப்பியை நீட்டினால் அது செல்லாது. பாஸ்போர்ட் தொலைந்தவுடன், போலீஸிடம் இருந்து FIR காப்பி (அ) ரசீது வாங்கி வந்தால், மறு பாஸ்போர்ட் தருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!''

க.குமார், மதுரை.

''கல்லூரியில் படிக்கும் மாணவன் நான். என் நண்பன் எல்லோரிடமும் சட்டென்று ஒட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவன். ஆனால், வெகு சீக்கிரமே பிரிந்துவிடுகிறான். நீண்ட கால நட்பை அவனால் பராமரிக்கவே முடியவில்லை. திடீர் திடீரென யாரிடமும் பேசாமல் அமைதியாகி விடுகிறான். இதற்கு என்ன காரணம்?''

ராஜமோகன்,
மனோதத்துவ நிபுணர்.

''டீன் ஏஜ் வயதில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படுவது சகஜமே. பொதுவாக, இந்த வயது உடையவர்கள் ஒருவரிடம் நட்புறவுகொள்வதற்கு நான்கு காரணங்கள் உண்டு. தன்னுடன் நெருக்கமாகப் பழகுதல், ஒரே குணாதிசயம், தன்னிடம் இல்லாத ஒரு விஷயம் மற்றவரிடம் இருப்பது, உடல் கவர்ச்சி ஆகியவைதான் அந்த நான்கு காரணங்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் எதிர்பார்த்த விஷயம் அந்த நபரிடம் இல்லாமல் போனால், நட்பில் ஏமாற்றம் ஆகி நட்புறவை முறித்துக்கொள்வார்கள். சில சமயம், தங்களின் சொந்தப் பிரச்னை காரணமாகவும் மற்றவர்களிடம் இருந்து தனித்து இருக்கலாம். இதுபோன்ற மனநிலைகொண்டவர்கள், நண்பர்கள் தவிர மற்ற யாரிடமும் மனம் திறக்க மாட்டார்கள். 'நீ தனி நபர் அல்ல... உனக்காக நாங்கள் இருக்கிறோம்!’ என்பதை அவருக்குப் புரியவையுங்கள். இதற்குப் பிறகும், அவர் தனித்து இருந் தால், தாமதிக்காமல் மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்!''

உ.ரமேஷ், காரைக்கால்

''இலங்கை அகதி ஒருவரின் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். என்ன வழிமுறை?''

அருள்மொழி, வழக்கறிஞர்

''பொதுவாக, தத்தெடுப்பு மையங்கள் மூலம்தான் தத்தெடுக்க முடியும். தத்தெடுப்புச் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாகப் பதிவுசெய்து குழந்தையைத் தத்தெடுக்கலாம்.

இலங்கைப் போரினால் பாதிக்கப் பட்ட குழந்தைகளை வளர்க்கப் பல மையங்கள் உள்ளன. அந்த மையங் களை அணுகி குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் மூலம் தத்தெடுத் துக்கொள்ளலாம்.

தத்தெடுக்க விரும்புபவர் குடும்பச் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கை, தத்தெடுக்கப்பட உள்ள குழந்தைக்குத் தேவையான பொருளாதார வசதிகளுக்கான வாய்ப்பு கள் எந்த அளவுக்கு இருக்கின்றன? வீட்டில் மூத்த உறுப்பினர்களின் ஒப்புதல், குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க, தகுதி உள்ளது எனச் சான்றளிக்க சமூகத் தகுதி வாய்ந்த இருவர் கூறும் விளக்கம் போன்ற விவரங்களைத் தனித் தனிப் படிவங்களில் பூர்த்திசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். தத்தெடுப்பவர் வீட்டில் வேறு பெண் குழந்தைகள் வளரக் கூடாது. அகதிக் குழந்தை என்பதால் எங்கே, யார் பாதுகாப்பில் இருந்து குழந்தையைப் பெறுகிறீர்கள் என்பது போன்ற சில விவரங்களைக் குழந்தை கள் பாதுகாப்பு கருதி அளிக்க வேண்டி இருக்கும்!''

டீன் கொஸ்டீன்