Published:Updated:

'கேட்டால் கிடைக்கும்!' - தமிழ் தொலைக்காட்சி செய்தியாளரின் ‘அமேசான்’ அனுபவம் #Amazon

'கேட்டால் கிடைக்கும்!' - தமிழ் தொலைக்காட்சி செய்தியாளரின் ‘அமேசான்’ அனுபவம் #Amazon
'கேட்டால் கிடைக்கும்!' - தமிழ் தொலைக்காட்சி செய்தியாளரின் ‘அமேசான்’ அனுபவம் #Amazon

"கேஷ்லெஸ் எக்கானமி" என்கிற பணமற்ற பரிவர்த்தனை நோக்கி நம்மை வலுகட்டாயமாக பிரதமர் அறிவித்த டிமானிட்டைஷேசன் தள்ளிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் பிரபல தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர் 'நெல்சன் சேவியர்' ‘அமேசான்’ என்கிற ஆன்லைன் வர்த்தக தளத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிந்துர்ந்துள்ளார்.  

"அமேசானும் பின்னே சில காமெடிகளும் !
-----------------------------------------------------------------------
1. நண்பன் ஒருவனுக்காக அமேசானில் மொபைல் ஒன்று ஆர்டர் செய்திருந்தேன்.
2. குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் மொபைல் என்னுடைய அலுவலகத்தில் டெலிவர் செய்யப்பட்டதாக மெசேஜ் வந்தது. ரிசப்சனில் என் பெயருக்கு எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள். மொபைல் மெசேஜ்ஜில் மீண்டும் டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக வந்தது. ஆனால் என் கைக்கு வரவில்லை.
3. கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டபோது அன்று இரவுக்குள் வந்துவிடும் என்றார்கள். வரவில்லை.
4. மறுநாள் காலை தொடர்பு கொண்டபோது அன்று இரவுக்குள் நிச்சயம் வந்துவிடும் என்றார்கள். அப்போதும் வரவில்லை.
5. அதற்கும் அடுத்த நாள் அழைத்து கொஞ்சம் சத்தம் போட்ட பின், மேலதிகாரிக்கு அழைப்பை ட்ரான்ஸ்பர் செய்தார்கள். அவர் கனிவாகப் பேசி கன்வின்ஸ் செய்து பணத்தை திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளித்தார்.
6. இதற்கிடையே டிவிட்டரில் அமேசானை டேக் செய்து கோபக்கனலை கொந்தளித்து வைத்திருந்தேன். பட் நோ ரெஸ்பான்ஸ்.
6. கடுப்பாய் இருந்தது. அன்று மாலையே Refunding Process has started என்று மெசேஜ் அனுப்பியிருந்தார்கள்.
7. இன்று அலுவலகத்திற்கு வந்தால், நான் ஆர்டர் செய்த மொபைல் வேறு ஒருவருடைய பெயரில், குறிப்பிட்ட அதே நாளில் அலுவலகத்தில் டெலிவரியாகியிருந்தது. அவர் அதை ஆர்டர் செய்யவில்லை என்பதாலும், நான் மொபைல் ஆர்டர் பண்ணி நிம்மதி இழந்த கதை அலுவலகத்திற்கே தெரியும் என்பதாலும், என்னிடம் வந்து மொபைலைக் கொடுத்துவிட்டார். அவர் கைக்கும் இன்றுதான் மொபைல் போய் சேர்ந்திருக்கிறது.
8. இப்போது என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருவேளை இந்த நட்டம் டெலிவரி பையன்கள் மீது சுமத்தப்பட்டு, அவர்களுக்கு தேவையில்லாத சம்பள பிடித்தம் செய்யப்படும் என யோசித்து, மீண்டும் கஸ்டமர் கேரை அழைத்து நடந்த கதை எல்லாம் விலாவாரியாக சொல்லி Refund ஐ கேன்சல் செய்துவிடுமாறு சொன்னேன்.
9. ஒரு நிமிடம் காத்திருக்க சொல்லிவிட்டு கஸ்டமர் கேர் அதிகாரி சொன்ன பதில்,
'இதற்கு முன்பு இப்படி ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. இனி பணத்தை திருப்பியளிக்கும் நடைமுறையை ரத்து செய்ய வாய்ப்பில்லை. எனவே அது குறித்து தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். இது எங்கள் தரப்பில் நிகழ்ந்த தவறு. வருத்தம் கோருகிறோம். ஓரிரு நாட்களில் பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வாழ்த்துக்கள் சார் !' "  என்று குறிப்பிட்டுள்ளார். 

'கேட்டால் கிடைக்கும்!' - தமிழ் தொலைக்காட்சி செய்தியாளரின் ‘அமேசான்’ அனுபவம் #Amazon

கடந்த 2008-ம் ஆண்டு 'நியூயார்க் டைம்ஸ்' இதழில் இதே போன்றதொரு சம்பவம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.  நியூயார்க்கை சேர்ந்த ஒருவர் கிறிஸ்துமஸை ஒட்டி அறிவிக்கப்பட்ட விலை குறைப்பு ஆஃபரில்  தன் மகனுக்கு சோனி "ப்ளே ஸ்டேசன்" ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி தினம் வரையில் காத்திருந்து வந்து சேரவில்லை. இந்த நிலையில் அவரின் மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் அவரது அபார்ட்மெண்டில் டெலிவரி செய்யப்பட்ட தகவல் இருந்தது. உடனடியாக அவரின் மென்சனிலிருந்த வீடுகளில் விசாரித்த போது இவரது பெயரில் இருந்த ஒருவரிடம் அந்த ப்ளே  ஸ்டேசன் இருந்தது. ஆனால் அதற்குள் அவர் அதை பயன்படுத்தியிருந்தார். அவரின் தவறோ இல்லை பொருளின் தவறோ அந்த ப்ளே ஸ்டேசன் சரியாக வேலை செய்யவில்லை. தன் மகனிடம் 'கிறிஸ்துமஸ் தாத்தா ப்ளே ஸ்டேசனை பரிசளிப்பார்' என்று சொல்லி வைத்திருந்த அவர் உடனடியாக ஆன்லைனின் மற்றொன்று ஆர்டர் செய்ய தேடிப்பார்த்த போது அந்த ஆஃபர் முடிந்து போயிருந்தது. இது பற்றி அமேசானின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு கேட்ட போது முதலில் 'அந்த விலைகுறைப்பு முடிந்துவிட்டது, இனி வாய்ப்பில்லை" என்று தெரிவிக்கப்பட்டதாம். பின்னர்  சிறிது நேரத்தில் மீண்டும் தொடர்புகொண்ட அமோசன் தரப்பு அதே விலையில் ப்ளே ஸ்டேசனை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளது. டெலிவரி செய்யப்பட்டபோது அதற்கான பணம் வேண்டாம் என கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது. இந்த சம்பவம் அப்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது அதை போன்ற ஒரு சம்பவம் தமிழ்நாட்டிலும் நிகழ்ந்துள்ளது. ‘அமேசான்’ வாடிக்கையாளர் சேவை மன நிறைவு குறித்து கடந்த 15 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட சர்வேக்களில் கடந்த 2015-ம் ஆண்டுதான் மிக மோசமாக இருந்ததாக புள்ளிவிபரங்கள் இந்த ஆண்டு வெளியாகின. இதை தொடர்ந்து தன் சேவையில் அந்நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளதாக இந்த சம்பவத்தை எடுத்துக்கொள்ளலாம்.

-வரவனை செந்தில்