Published:Updated:

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

லைதளப் பெயர்களை வைத்து நடத்தப்படும்சந்தை யைப்பற்றி இந்த வாரம் பார்க்கலாம். அதற்கு முன் அதைப்பற்றிய பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

தொழில்நுட்ப இயக்கத்தின்படி பார்த்தால், வலைதளப் பெயர் என்பது அவசியம் இல்லாத ஆட்டுத் தாடி. இணையத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் கணினி ஒவ்வொன்றுக்கும் 4 அல்லது 6 எண்களாலான IP விலாசம் கொடுக்கப்படுவதையும், அதைவைத்து நீங்கள் அந்த கணினிகளில் இயங்கும் வலைதளங்களுக்குச் செல்லலாம் என்பதையும் பல மாதங்களுக்கு முன் இந்தத் தொடரில் வெளியான கட்டுரை ஒன்றில் பார்த்தோம். உதாரணத்துக்கு, http://180.150.140.172/ என்ற விலாசத்தைக் கொடுத்தால்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வருங்காலத் தொழில்நுட்பம்

'விகடன் டாட் காம்’-க்குச் செல்ல முடியும். ஆனால், இந்த எண்களை நினைவில்வைத்துக்கொள்வது கடினம் என்பதால், வலைதளங்களுக்குப் பெயர்களைக் கொடுக்க வேண்டிய தேவை வந்தது. இணையம் பரவலாகத் தொடங்கிய 80-களில், வலை தளப் பெயர்களின் கன்ட்ரோல் அமெரிக் காவில்தான் இருந்தது. ஏழு வகையான வலைதளப் பெயர்கள் மட்டுமே அப்போது இருந்தன: .com, .edu, .gov, .int, .mil, .net, .org; ஆகியவையே அவை. Top Level Domain, சுருக்கமாக TLD எனப்படும் மேல் மட்டப் பெயர் ஒன்றுக்குக் கீழே நீங்கள் உங்கள் வலைதளப் பெயரைப் பதிவுசெய்து கொள்ள லாம். உதாரணத்துக்கு,antonprakash என்ற பெயரை .com - க்குக் கீழே பணம் கொடுத்துப் பதிவுசெய்துகொண்டால், antonprakash.com என்ற பெயர் உங்களுக்குச் சொந்தமாகிவிடும். இதற்குப் பின்னர், இந்த மேல் மட்டப் பெயருக்குக் கீழ் எத்தனை பெயர்களை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். அதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது. உதாரணத்துக்கு, hobbies.antonprakash.com

வருங்காலத் தொழில்நுட்பம்

90-களில் மேற்கண்ட மேல் மட்டப் பெயர்கள் மட்டுமே போதாது என்ற நிலை வந்தது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கே உரிய மேல் மட்டப் பெயரை ஏன்வைத்துக் கொள்ளக் கூடாது? வேறு ஏதாவது பெயர் தேவைப்பட்டால், அதை எப்படி ஒருங்கிணைப்பது? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.

இவற்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் ICANN என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. Internet Corporation for Assigned Names and Numbers என்ற இந்த அமைப்பு, உலக நாடுகளின் அரசு மற்றும் முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த அமைப்புதான் புதிதாகத் தேவைப்படும் மேல் மட்டப் பெயர்களை அங்கீகரிக்கிறது.

ஒவ்வொரு மேல் மட்ட வலைதளப் பெயரிலும் உங்களுக்குத் தேவையான பெயரைப் பதிந்து கொடுக்கத் தரகர்கள் உண்டு. Registrar எனப்படும் இந்தத் தரகர்கள், இந்தச் சேவையை உங்களுக்குச் செய்துகொடுக்க ICANN நிறுவனத்துக்கு வருடம்தோறும் ஒவ்வொரு மேல் மட்ட வலைதளப் பெயருக்கும் கப்பம் கட்ட வேண்டும். Network Solutions, Godaddy போன்றவை இதுபோன்ற தரகு நிறுவனங்களே.

இப்போது சந்தைக்கு வரலாம்.

இணையம் என்பது தகவல்களைப் பகிர்ந்துகொள்வது என்ற ஒரிஜினல் நோக்கத்தில் இருந்து, வணிகப் பரிவர்த்தனைகளுக்கு என மாறத் தொடங்கியதும் வலைதளப் பெயர்கள் என்பது ரியல் எஸ்டேட்போல சூடு பிடிக்கும் என்பதை உணர்ந்தவர்கள், தங்களது நிறுவனங்களுக்கு மட்டும் அல்லா மல், பொதுவாக இருக்கும் பெயர் களையும் வளைத்துப் போட்டுவிட, 'வலைதளப் பெயர்ச் சந்தை’ உருவானது.

கிளுகிளுப்பான பெயரில் ஆரம்பிக்கலாம். sex.com என்ற பெயரை 94-ல் 10 டாலர்களுக்கும் குறைவாகக் கொடுத்து ஹேரி க்ரெமன் என்பவர் பதிவுசெய்தார். அது 2006-ல் விற்கப்பட்டபோது ஹேரிக்குக் கிடைத்தது 14 மில்லியன் டாலர்கள்!

வருங்காலத் தொழில்நுட்பம்

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு social.com 5 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படப்போவதாக அறிவிக்கப்பட்டு 2.5 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது. இதற்குக் காரணம் என்ன என்பதைக் கடைசியில் பார்க்கலாம்.

வலைதளப் பெயர்களை ஆயிரக் கணக் கில் பதிந்துவைத்துக்கொண்டு, அவற்றை விற்று லாபம் ஈட்டும் சிலரை சிலிக்கான் வேலியில் நான் சந்தித்து இருக்கிறேன். இப்படி வலைதளப் பெயர்களின் உரிமை யாளர்களையும் வலைதளப் பெயர்களை வாங்கும் விருப்பம்கொண்டவர்களையும் இணைக்க ஆன் லைன் சந்தைகள் உள்ளன. ஏல அடிப்படையில் நடத்தப்படும் விற்பனையில், சில 100 டாலர்களுக்குப் பல பெயர்களும் மில்லியன் டாலர்களில் சில பெயர்களுமாகக் கத்திரிக்காய் கூறுபோல வலைதளப் பெயர்கள் தொடர்ந்து விற்கப்படுகின்றன. www.sedo.com பிரபலமான ஒரு சந்தைத் தளம்.

வருங்காலத் தொழில்நுட்பம்

வலைதளப் பெயர்களைப்பற்றி இந்த வாரம் எழுதியது ஒரு விதத்தில் டாபிக்கல்தான். காரணம், ICANN அமைப்பு இந்த வாரம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு. இதுவரை குறிப்பிட்ட மேல் மட்டப் பெயர்களை நிர்வகித்து வந்த ICANN நிறுவனம், அடுத்த வருடத்தில் இருந்து யார் வேண்டுமானாலும், மேல் மட்டப் பெயர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இருக்கிறது. உதாரணத்துக்கு, vikatan.com என்று இருக்கும் விகடனின் மேல் மட்டப் பெயர், சிம்பிளாக .vikatan என்றாகலாம். அப்படியானால், மதுக்கரை ராஜன் தனது பெயரில் பதிவுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாமா?

கண்டிப்பாக. விண்ணப்பத் தொகை ஒரு லட்சத்து 35 ஆயிரம் டாலர்களுடன் விண்ணப்பித்தால், .rajan அவருக்குச் சொந்தமாகலாம்!

LOG OFF