Published:Updated:

உங்களுக்குக் கோபமே வராதா தோனி? சொல்லுங்க நீங்க ராஞ்சில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

உங்களுக்குக் கோபமே வராதா தோனி? சொல்லுங்க நீங்க ராஞ்சில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?
உங்களுக்குக் கோபமே வராதா தோனி? சொல்லுங்க நீங்க ராஞ்சில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

உங்களுக்குக் கோபமே வராதா தோனி? சொல்லுங்க நீங்க ராஞ்சில என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

'மகேந்திர சிங் தோனி' என வீட்டில் இவரைப் பெயரிட்டு அழைத்தாலும் ரசிகர்கள் இவரை 'தல', 'கூல் கேப்டன்', 'மகி', 'எம்.எஸ்.டி' என்று பல பெயரிட்டு செல்லமாக அழைத்தனர். இவர் விளையாடும்போது மைதானத்தில் எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அதை மிகவும் எளிமையான முறையில் கையாளுவார். அதனால் இவரைச் செல்லமாக 'கூல் கேப்டன்' என்றும் அழைத்தனர். சமீபத்தில் இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தகவல், ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. சில வருடங்களுக்கு முன் சச்சினின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே சிலர் கிரிக்கெட் பார்த்தனர். அதேபோல் தனக்கென வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கிக்கொண்டார் 'மகி'. 

தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் வேற மாறி :

வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு முனையில் ரோகித் ஷர்மாவும் மறுமுனையில் எம். எஸ். தோனியும் ஆடிக்கொண்டிருந்தனர். ரோகித் ஷர்மா அருகே அடித்துவிட்டு சிங்கிள் ஓடி வந்தபோது, வழியில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் 'முஸ்தாபிஸர் ரஹ்மான்' குறுக்கே நின்று கொண்டிருந்தார். அதைப்பார்த்து எச்சரித்தார் ரோகித் ஷர்மா. சிறிதுநேரம் ஏற்பட்ட சலசலப்பை நடுவர்கள் தீர்த்துவைத்தனர். அடுத்த பந்தில், தோனியும் அதே போல் அடித்துவிட்டு சிங்கிள் ஓடி வர முயற்சித்தார். குறுக்கே நின்ற பவுலரை முட்டித் தள்ளிவிட்டு தனது ரன்னை எடுத்தார். அப்படி நடந்துகொண்டதற்காக அபராதமும் கட்டினார் தோனி. 

இறுக்கிப் பிடி முறுக்கி அடி :

தோனியின் தனித்துவத்தில் இதுவும் ஒன்று. ஏன் அவரது முத்திரை என்றுகூட சொல்லாம். அதுதான் 'ஹெலிகாப்டர் ஷாட்'. ஹெலிகாப்டரின் ரெக்கைகள் எப்படிச் சுற்றுமோ அதே முறையை கிரிக்கெட்டில் பந்தை அடிப்பதற்குப் பயன்படுத்தினார் தோனி. அது அவரின் நண்பரான 'லால்' சொல்லிக் கொடுத்த முறை. சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 'லால்'. செலவு முழுவதையும் தோனியே பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி 2013-ல் இறந்துவிட்டார் லால்.

28 வருடங்களுக்குப் பிறகு :

வெற்றியோ தோல்வியோ தோனியின் ஆட்டத்தில் சிறிதளவுகூட வித்தியாசம் இருக்காது. கடைசிப் பந்துவரை போராடக்கூடிய மனிதர்தான் தோனி. அப்படி இவர் போராடி வென்ற மேட்ச்சில் ஒன்றுதான் 2011 உலகக் கோப்பை. ஓப்பனிங் பேட்ஸ்மேன் சச்சின், சேவாக் இருவரும் ஏமாற்றிவிட... கவுதம் கம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 97 ரன்களில் அவுட்டானார். ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க யுவராஜ் சிங்கிற்குப் பதில் களமிறங்கினார் தோனி. ஆச்சரியம் கலந்த பயத்தில் ரசிகர்கள் ரியாக்ட் செய்தனர். ஒவ்வொரு பந்தையும் மிகவும் பொறுப்பான முறையில் கையாண்டார் தோனி. மெதுவாக இலக்கை நோக்கிப் பாயத் தொடங்கியது இந்தியா. பந்தும் ரன்னும் ஒரே நிலையில் இருப்பதை அறிந்த ரசிகர்களுக்குப் பயம் குறையத் தொடங்கியது. முடிவில் 11 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலை ஏற்பட்டது. தோனி பேட்டிங் சைடில் இருக்க குலசேகரா பந்து வீசத் தயார் நிலையில் இருந்தார். பந்து தோனியை நோக்கி வீசப்பட்டது. அதைத் தன் ஸ்டைலில் சிக்ஸிற்கு விரட்டி, இந்தியாவின் வெற்றியை சரித்திரத்தில் இடம் பெறச் செய்தார் தோனி. வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினார்கள் ரசிகர்களும் இந்திய வீரர்களும். பெவிலியனிலிருந்து ஓடிவந்து தோனியைத் தழுவி கட்டியணைத்தார் ஒரு மனிதர் அவர் தான் 'சச்சின் டென்டுல்கர்'. அதைப் பார்த்த ஒவ்வொரு இந்தியரின் கண்ணும் கண்ணீரில் மிதக்கத் தொடங்கியது. சச்சினின் உலகக்கோப்பை கனவை நிறைவேற்றியதோடு, உலகக்கோப்பையை சச்சின் கைகளில் கொடுத்து அழகு பார்த்தார் தோனி.

எம். எஸ். தோனி தி அன்டோல்டு ஸ்டோரி :

தோனியின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கூடும் என்ற கேள்விக்கு இந்தப் படம்தான் சிறந்த பதில். இவரின் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாறுதான் படத்தின் கதை. இவர் எப்படி கிரிக்கெட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார், இவர் சிறு வயதில் கிரிக்கெட்டிற்குள் நுழைய இவர் செய்த தியாகங்கள், கஷ்டங்கள், இவரின் குடும்ப நிலை, காதல், நண்பர்கள் என அனைத்தும் படத்தில் கலவையாக இடம்பெற்றிருந்தன. என்னதான் மூன்றுமணி நேரம் தியேட்டரில் படம் ஓடினாலும் கடைசி ஐந்து நிமிடங்கள்தான் ரசிகர்களுக்குச் சிறந்த விருந்தாக அமைந்தது. படம் முழுவதும் ரீல் தோனி நடித்துவந்த நிலையில் கடைசி ஐந்து நிமிடங்கள் ரியல் தோனியின் என்ட்ரி. திரையில் தோனியைக் கண்ட ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் குழந்தை போல் துள்ளிக் குதித்தது. மைதானத்தில் அவர் சிக்ஸர் அடித்தால் அரங்கம் எப்படி அதிருமோ அதேபோல் தியேட்டரே அதிர்ந்தது.

பின்னாடியும் கண்ணு :

இவரது சிறப்பம்சத்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதும் ஒன்று. இவர் விக்கட் கீப்பராக நின்றுகொண்டிருந்தால் எதிர் அணியில் விளையாடும் பேட்ஸ்மேன்களுக்கு அல்லுதான். ஏனென்றால் ஒரு செகண்ட் க்ரீஸை விட்டுத் தள்ளிப்போனாலும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்வதில் வல்லவர். நேருக்கு நேர் மட்டுமில்லாமல் ஸ்டம்பைப் பார்க்காமலே ரன் அவுட் ஆக்குவதிலும் கெட்டிக்காரர். நியூஸுலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 'ராஸ் டெய்லர்' அடித்த பந்தை 'குல்கர்னி' தூரத்தில் இருந்து தோனியை நோக்கி எறிய அதை திரும்பிப் பார்க்காமலேயே ஸ்டம்பில் அடித்து கெத்து காட்டினார் நம்ம தல தோனி.

-தார்மிக் லீ     

அடுத்த கட்டுரைக்கு