Published:Updated:

காணாமல் போன நுணா மரங்கள்!

காணாமல் போன நுணா மரங்கள்!

காணாமல் போன நுணா மரங்கள்!

காணாமல் போன நுணா மரங்கள்!

Published:Updated:
##~##

''சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகள்தான் பாலசண்முகம், ரகுவுடன் என்னை இணைத்த புள்ளிகள். நாங்கள் மூவரும் ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள். வண்ணங்கள்தான் தொடர்ந்து எங்களை இயங்க வைக்கின்றன. 'கலர்ஸ்’ என்ற தலைப்பிலேயே ஓர் ஓவியக் கண்காட்சியை வைத்தால் என்ன?’ என்று எங்களுக்குள் எழுந்த கேள்விக்கான பதில்தான் இந்தக் கண்காட்சி. 'Search of sareeram’ - இது என் ஓவியங்களுக்கான கான்செப்ட். ரகுவின் ஓவியங்கள்... கோயில்களின் புராதனம், பால சண்முகத்தின் ஓவியங்கள்... இயற்கை என மூவரும் வெவ்வேறு விஷயங்களைப் பேசும் ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளோம்'' - நிதானமாகப் பேசுகிறார் ஸ்ரீராம சந்தோஷ். ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமின் மாணவர். சென்னை ஆழ்வார்பேட்டை வின்யாசா கலைக் கூடத்தில் கடந்த வாரம் இவர் களின் ஓவியக் கண்காட்சிக்கு விசிட் அடித்தோம்.

காணாமல் போன நுணா மரங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 ''என் ஓவியங்களில் நிறைய முக்கோணங்களைப் பார்க்கலாம். தொடர்ந்து தேடிக்கொண்டே இருப் பது என்பதை அர்த்தப்படுத்தத்தான் இந்த முக்கோ ணங்களைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் ரிலாக்ஸ்டாகச் சம்மணமிட்டு சின் முத்திரை பிடித்தபடி அமர்ந்து இருக்கும் காட்சியை மனதில் ஓட்டிப்பார்த்தால், முக்கோண வடிவில் இருப்பதை கவனித்து இருக்க லாம். நாம் கற்கும் விஷயங்கள் எளிதாகப் பதியவும், நாம் என்னவாக ஆக வேண்டும் என நினைக்கிறோமோ அதுவாகவே ஆக மனம் தொடர்ந்து நம்மை வழிநடத்தவும் இந்த சலனமற்ற நிலையே காரணம். இந்த விஷயங்களுடன் பிரபஞ்சம், காதல், ஆண்-பெண், சிவன்-சக்தி எனப் பல்வேறு விஷயங்களை நவீன வடிவிலான இந்த ஓவியங்கள் மூலம் சொல்லி இருக்கிறேன். எதைச் சொல்ல வருகிறேன் எனப் பார்த்த நொடியில் பலரால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. சின்னதாக விளக்கி னால், ஓவியத்தின் அடிப்படை பிடிபடும்'' என்கிறவரிடம், ''பி.சி. சார் என்ன சொன்னார்?'' என்றால் லேசாகச் சிரித்தபடி, ''சார் அதிகம் பேச மாட்டார். ஆனால், 'நிறைய பெயின்டிங் பண்ணு; காட்சிக்கு வை’னு தூண்டிட்டே இருப்பார்'' என்கிறார்.

''கும்பகோணம் அடுத்து உள்ள ஆடுதுறை தான் என் சொந்த ஊர். ஓவியக் கல்லூரியில் படித்தபோது, ஒவ்வோர் ஆண்டும் ஒரு மாதம் வெவ்வேறு மாநிலங்களுக்குப் பயணப்பட்டு அங்கேயே தங்கி பெயின்டிங் பண்ணி திரும்புவோம். இந்தக் கண்காட்சியில் நான் வைத்துள்ள ஒன்பது ஓவியங்களும் தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், திருவண்ணாமலை, காசி, கஜுரஹோ என வெவ் வேறு ஊர்களின் கோயில் சிற்பக் கலைகளின் பெரு மைகளை சொல்லும். இந்த அனைத்து ஓவியங்களும் நீர் வண்ணத்தில் வரையப்பட்டவை. ஆயில் கலரில் வரையும்போது திருத்தங்கள் செய்யலாம். ஆனால், நீர் வண்ணத்தில் தவறு என்றால் தூக்கிப் போட வேண்டியதுதான். திருத்தங்கள் எதுவும் செய்ய இயலாது. இதை ஒரு சவாலாக எடுத்து செய்தேன்'' என்கிற ரகுவுக்கு, இறுதி வரை ஓவியத் துறையிலேயே இயங்க விருப்பம்.

காணாமல் போன நுணா மரங்கள்!

பாலசண்முகமோ ஓர் இயற்கை விரும்பி. கோவையில் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனியில் டிசைனராகப் பணிபுரிகிறார். ''பட்டுக்கோட்டை அருகே உள்ள செண்டாங்காடு என் சொந்த ஊர். இன்றைய நாகரிகச் சூழல் நம்மை இயந்திரங்களாக மாற்றிவிட்டன. இன்னொரு புறம் இயற்கையின் சமநிலையையும் நாம் குலைத்து வருகிறோம். இயற்கையின் கொடையைக்கூட, பணம் தருபவை, பணம் தராதவை எனப் பிரித்து பணம் தராதவற்றைத் தூர வீசி விடுகிறோம். நான் பார்த்து வளர்ந்த நுணா மரங்கள், தொட்டாச்சிணுங்கி செடிகள், விலாங்கு மீன்கள் போன்றவற்றை என் கிராமத்தில் கூட இப்போது காண முடியவில்லை. இவற்றை என் ஓவியங்களில் மீட்டெடுக்கிறேன். இயற்கையைச் சித்திரங்கள் ஆக்கும்போது, என்னை நானே புதுப் பித்துக்கொள்கிறேன்'' என்கிறார் பாலசண்முகம்!

- ம.கா.செந்தில்குமார், படங்கள்: ஜெ.தான்யராஜு