Published:Updated:

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

Coimbatore

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

Published:Updated:
Coimbatore
##~##

ளமான மண், சுவையான குடிநீர், இதமான தட்பவெப்ப நிலை என்று இயற்கையின் அத்தனை விஷயங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட கோவை வாசிகளுக்குப் பொழுதுபோக்கு விஷயங்கள் மட்டும் விரல்விட்டு எண்ணத்தக்க அளவில்தான் உள்ளன. ஹோட்டல், தியேட்டரை விட்டால், வேறு போக்கிடம் இல்லை என்கிற நிலையில், ஒண்ணே ஒண்ணு... கண்ணே கண்ணு என்று இருப்பது... கோவை குற்றாலம் அருவி.

 வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இங்கே சீஸன் நாட்கள்தான். அதுவும் கோடைக் காலத்தில் கோவை வாசிகளின் சிக்கனமான பட்ஜெட் பயணத்துக்கு இதுதான் சிறந்த சுற்றுலாத் தலம். குடும்பத்துடன் காலை கிளம்பி மாலை திரும்ப அதிகபட்சம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

1,000 இருந்தால் போதும். கோவை நகரில் இருந்து பேரூர் கோயிலைத் தாண்டி, சிறுவாணி சாலையில் வேகம் எடுத்து, காருண்யா கல்லூரி வளாகம் கடந்தால், அத்தனை அழகாக எழுந்து நிற்கிறது மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர். இதனுள்தான் ஒளிந்து கிடக்கிறது கோவை குற்றாலம் அருவி.

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

சில கி.மீ. உள்ளே சென்றதும் இது தமிழ்நாடு என்பதை நிச்சயம் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு இதமாக, அடர்த்தியான குளிராக இருபுறமும் நெருக்கமாக நிற்கும் பசுமை மரங்களால் சூழப்பட்டு இருக்கிறது அந்தச் சாலை.

காட்டு யானைகள் உலவும் பகுதி என்பதால், அடர்வனத்துக்குள் செல் வதைத் தவிர்க்கவும். பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு சற்றுத் தூரம் நடந்தால், அருவி தரிசனம். மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இருக்கும் குஞ்சுராமுடி வனப் பகுதியில் பொழியும் மழை நீர், பெரும் புல்வெளிகள் வழியாகக் காடு, மேடு கடந்து இங்கே அருவியாக வந்து விழுகிறது. குற்றால அருவியின் மினியேச்சர்போல் இருந்தாலும் அங்கே குளித்ததற்கு இணையான புத்துணர்ச்சியும் குளுமையும் இங்கும் சாத்தியம். அருவியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லென்ற குற்றாலச் சாரலும் உண்டு.  

மாலை 5.30 மணி வரைதான் அருவியில் குளிக்க அனுமதி. வழுக்கும் பாறைகள் ஆங்காங்கே நிறைய இருக்கின்றன. 'உற்சாக’ மிகுதியில் அத்து மீறி அங்கு செல்ல வேண்டாம்.

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

கோவை குற்றாலத்தில் இப்போது சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காகச் சில வசதிகளை செய்து தந்துள்ளது வனத் துறை. செயற்கையான மர வீடுகளை அழகாக உருவாக்கி வைத்துள்ளார்கள். ஒருநாள் மதியம் 12 மணியில் இருந்து மறுநாள் மதியம் 12 மணி வரை தங்குவதற்கு

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

2,000  கட்டணம். உணவு உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் அறையைத் தேடி வந்துவிடும். இந்த அறையில் ஏ.சி. வசதியும் உண்டு; வாட்டர் ஹீட்டரும் உண்டு. இரவு நேரத்தில் வனத்துக்குள் விலங்குகளின்  சத்தத்தையும் பூச்சிகளின் இரைச்சலையும் கேட்டு ரசிக்கலாம்.

தமிழ்நாட்டில் உள்ள எல்லா சுற்றுலா மையங்களுக்கும் இருக்கும் அதே மாசுப் பிரச்னையை கோவை குற்றாலமும் அனுபவிப்பதுதான் சோகம். 'புகை, மது, பிளாஸ்டிக் விஷயங்களுக்குத் தடை’ என்று முகப்பிலேயே எச்சரிக்கிறது வனத் துறை. ஆனாலும் இவற்றை மறைத்து எடுத்துச் சென்று பயன்படுத்துவதுடன், காட்டுக்குள்ளேயே அதை வீசிவிட்டும் செல்கின்றனர் சுற்றுலாப் பயணிகள். வாரம்தோறும் திங்கள் கிழமை அன்று சுற்றுலாப் பயணிகளுக்கு 'நோ என்ட்ரி’ போட்டுவிட்டு கஷ்டப்பட்டு அனைத்தையும் சுத்தம் செய்கிறது வனத் துறை.

கோடைக்கு ஏற்ற கோவை குற்றாலம்!

பிக்னிக் பார்ட்டிகள் இதை மட்டும் மாற்றிக்கொண்டால், கோவை குற்றாலம் இன்னும் குளிரக் குளிர மிளிரும்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்