Published:Updated:

என் ஊர்!

'தந்தனனானே... தந்தானே!'

என் ஊர்!

'தந்தனனானே... தந்தானே!'

Published:Updated:
##~##

ன் சொந்த ஊரான அமரப்பூண்டி குறித்து இங்கே மனம் திறந்து பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

 ''பழநியில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் இருக்குது அமரப்பூண்டி. பழநி அண்ணாமலை கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்லதான்  பிறந்தேன். ரொம்ப சேட்டைக்காரன். சரஸ்வதி நடுநிலைப் பள்ளியில் 8-வது வரைக்கும் படிச்சேன். சின்ன வயசுலேயே காசுவெச்சு கோலிக் குண்டு விளையாடுவேன். அப்பா தேடிப்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

பிடிச்சு கொட்டுவார். ஆனாலும்  அடங்குனதே இல்லை. எங்க ஸ்கூலில் சின்னுச்சாமினு ஒரு சயின்ஸ் வாத்தியார் இருந்தார். 40 வருஷம் அந்த ஸ்கூலில் வேலை பார்த்தார். அவர்கிட்ட படிச்ச பசங்க கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து, அந்தக் குழந்தைகளும் அவர்கிட்டே படிச்சாங்க. அவர் கையில் எப்பவும் சாக்லேட் இருக்கும். ரோட்டில் குழந்தைகளைப் பார்த்தா சாக்லேட் கொடுத்து தட்டிக் கொடுப்பார். பாடம் எடுக்கும்போது புக்கையே பார்க்க மாட்டார். அவ்ளோ சின்ஸியரான வாத்தியார்.  

ஊர்க் குளம் ஒண்ணு இருக்கு. அங்கே மீன் பிடிக்க 6 மணிக்கே கிளம்பிருவோம். கக்கா போய்ட்டு, குளத்தில் கால் கழுவிட்டு அதுலேயே தூண்டில் போடுவோம். ரெண்டு மீன் பிடிச்சா, உலக மகா சந்தோஷமா இருக்கும். யாராவது 'சாப்பிட்டியா?’னு கேட்டா, ''ஆமா மீன் பிடிச்சுட்டு வந்தேன்ல. அதைத்தான் குழம்புவெச்சி சாப்பிட்டேன்’னு பெருமையாச் சொல்வேன். குளம் வத்திருச்சுன்னா, அந்தக் குளம் கிரிக்கெட் கிரவுண்டா மாறிடும். ஆடி 18-ல ஆடிப் பெருக்கு  கொண்டாடுவோம். விளக்கு வெளிச்சத்துல 'தந்தனனானே... தந்தானே’னு கும்மி அடிப்பாங்க. கும்மி முடிஞ்சதும் எல்லாரும் சாப்பாட்டைப் பகிர்ந்து சாப்பிடுவாங்க.  அந்த விழாக்கள் இப்போ நடக்குறதே இல்லை.

கண்ணுத்துரை, செல்வராஜ், சரவணன், செந்தில், வடிவேல் எல்லாரும் சேர்ந்து திருடன்-போலீஸ் விளையாடுவோம். ரத்ன ராஜ்னு என் ஃப்ரெண்ட்டை சுடுகாட்டுக்குக் கூட்டிட்டுப் போயிருவேன். அங்கேதான் யாரும் தேடி வர மாட்டாங்க. உயிரைக் கையில பிடிச் சிட்டு உட்கார்ந்திருப்பேன். எங்களைக் காணாம எல்லா வீட்டுக்காரங்களும் போலீஸ்காரங்க மாதிரி எங்களைத் தேடிட்டு இருப்பாங்க.

என் ஊர்!

8-வது முடிச்சதும், கொட்டயம் ஜே.ஆர்.சி உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன். சைக்கிள்ல செட்டு சேர்ந்து போவோம். அப்போ பொண் ணுங்களும் எங்ககூட சைக்கிள்ல வருவாங்க.  அப்பல்லாம் பொண்ணுங்களைப் பார்க்கப் பிடிக்கும். ஆனா, பேசுனா பதறும். போற வழி எல்லாம்  மா, முந்திரி, கொய்யாத் தோப்பு இருக் கும். அங்கங்கே நிறுத்தி நிறுத்தி சாப்பிட்டுக்கிட்டே போவோம்.

எங்க ஊர்ல பாவேந்தர் திரையரங்கம் இருந் துச்சு. அங்கே ரிலீஸ் ஆகும் எல்லாப் படங் களையும் பார்த்துருவேன். தியேட்டரைச் சுத்தி கம்பி வேலி போட்டு இருப்பாங்க. படம் போட் டதும் வேலியை விலக்கி திருட்டுத்தனமா உள்ளே வருவோம். அங்க இருந்து டாய்லெட் வந்து யூரின் பாஸ் பண்ணிட்டு வர்ற மாதிரி வந்து உட்கார்ந்துருவோம். இப்படியே மூணு வருஷம் படம் பார்த்தேன்.  

பழநியில் பிளஸ் ஒன் சேர்ந்தேன். பக்கத்து ஸ்கூல் பொண்ணு ஒண்ணை லவ் பண்ணேன். பார்வையாலேயே பேசிப்போம். ஒருநாள் மழை பேய்ஞ்சு தண்ணி தேங்கிட்டு இருந்த நேரம். செருப்பு அறுந்துடுச்சுபோல. அதைக் கையில் பிடிச்சுக்கிட்டு பாவாடையை லேசாத் தூக்கி, தண்ணியில் கால் படாமத் தாவித் தாவி நடந்து வந்தா. அப்போ காலில் மருதாணி போட்டு இருந்தா. அவ நின்ன இடத்தில் சில பூக்கள் உதிர்ந்துகிடந்துச்சு. 'உன் மருதாணிக் கால்கள் பட்ட இடத்தில் மல்லிகைப் பூ பூக்குதடி’னு ரெண்டு வரிக் கவிதை எழுதி, ரொம்ப நாளா கையில்வெச்சிட்டு இருந்தேன். கடைசி வரைக்கும் கவிதையையும் கொடுக்கலை; காதலையும் சொல்லலை. இந்த ஸீனைத்தான் 'வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில்வெச்சேன்.

என் ஊர்!

எங்க ஊர்ல வருஷா வருஷம் திருவிழா நடக்கும். திருவிழாவுக்குக் கட்டாயம் எம்.ஜி.ஆர் படம் போடுவாங்க. வழுக்கு மரப் போட்டி நடத்துவாங்க. காதலும், நட்பும், கிண்டலும், கேலியும், சந்தோஷமும் ஊர் முழுக்க இருக்கும். ஒவ்வொரு முகமும் சிரிப்பால் நிறைஞ்சிருக்கும்.  அதோட பாதிப்புதான் என்னுடைய படங்களில் எப்படியும் ஒரு திருவிழா ஸீன் இருக்கும். ப்ளஸ் டூ படிச்சதும் சினிமாவில் சேர்றதுக்காகச் சென்னை வந்துட்டேன். ஆனாலும் என்னுடைய ஒவ்வொரு படத்திலும் என் ஊரைப் பிரதிபலிச்சுக்கிட்டே இருக்கேன். இதைத் தவிர வாழ்க்கையில் என்ன பெரிய சந்தோஷம் இருக்கு?''

- எஸ்.கலீல்ராஜா, படங்கள்: வீ.சிவக்குமார்