Published:Updated:

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

Published:Updated:
##~##

டி.டி.எஸ். தியேட்டர்கள் அதிகரித்துவிட்ட மதுரை யில், பழங்கால தியேட்டர் ஒன்று இப்போதும் சக்கைபோடு போடுகிறது. 'கல்கத்தா மெட்ரோ தியேட்டர்’ மாடலில் 1939-ம் வருஷம் திறக்கப்பட்ட சென்ட்ரல் தியேட்டர் இன்று வரை வெற்றிகரமாக ஓடுவதற்கு இரண்டே பேர்தான் காரணம். எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி.

 ஒவ்வொரு முறை எம்.ஜி.ஆர். படம் போடும் போதும் கட்-அவுட்டுக்கு மாலை, பாலாபிஷேகம், பட்டாசு, இனிப்பு என்று அமர்க்களப்படுத்துகிறார்கள் வாத்தியார் ரசிகர்கள். சிவாஜி ரசிகர்களிடம் இந்த மாதிரியான ஆர்ப்பாட்டங்கள் இருக்காது. ஆனால், 'சிவாஜி இதுவரை நடித்த படங்களின் எண்ணிக்கை எத்தனை? எந்தெந்த தியேட்டர்களில் அந்தப் படம் எத்தனை நாள் ஓடியது?’ போன்ற விவரங்களோடு, 'அதே நேரத்தில் ரிலீஸான எம்.ஜி.ஆர். படத்தைவிட எவ்வகையில் இந்தப் படம் சிறந்தது?’ என்ற சீண்டல் வாசகங்களுடன் கையில் எழுதிய போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்துகிறார்கள். அன்று முதல் இன்று வரை ஓயவில்லை இந்த ரசிக சண்டைகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

எம்.ஜி.ஆர் நடித்த 'அன்னமிட்ட கை’ படம் பார்க் கச் சென்றோம். படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே வெளியே வரும் சில ரசிகர்கள் டிக்கெட் கவுன்ட்டருக்குச் சென்று, 'எவ்வளவு டிக்கெட் போயி ருக்குதுண்ணே? போன மாசம் கணேசன் படம் போட்டீங்களே, முதல் தேறுச்சா?' என்று லந்து கொடுக்கிறார்கள்.

''உங்க ஆளு கணேசன் பக்கத்துலதான் வருவார்போல'' என்று டிக்கெட் கொடுப் பவர் சொல்ல, கேட்டவரின் முகம் மாறுகிறது. உடனே செல் எடுத்து, ''தலை வர் படத்துக்கு உடனே கிளம்பி வாங் கப்பா!'' என்று ஆள் பிடிக்கிறார். அன்று இரவே, '40 வருடத்துக்கு முன் ரிலீஸான படத்தின் வருமானத்தை ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டிய கணேசன் ரசிகர்களே, நேற்று ஓடிய எங்கள் படத்தின் வசூல் சாதனை என்ன தெரியுமா?’ என்று பதிலடி போஸ்டரை எழுதி ஒட்டிவிட்டுப் போனார் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகரான குமார். வாரம் முழுக்க வேட்டியும் வெற்று உடம்புமாகத் திரியும் குமார், ஒரு புரோகிதர். ஆனால் எம்.ஜி.ஆர். படம் போடும் நாளில் குமாரை ஜீன்ஸ், டி-ஷர்ட் என மாடர்ன் அவதாரத்தில் பார்க்கலாம்.

இன்னொரு எம்.ஜி.ஆர். ரசிகரான டிரை சைக்கிள் ஓட்டும் 'வேங்கை’ பிச்சை நெற்றியில் அண்ணா படத்தையும், உள்ளங்கையில் இரட்டை இலை சின்னத்தையும் பச்சை குத்தியிருப்பவர். 'இதென்னண்ணே பிரமாதம்? இடது தொடையில் 'அடிமைப் பெண்’ எம்.ஜி.ஆரையும், வலது தொடையில் 'தேர்த் திருவிழா’ எம்.ஜி.ஆரையும், கையில் 'தாய்க்குப் பின் தாரம்’ எம்.ஜி.ஆரையும் பச்சை குத்தி இருக்கேன்'' என்று திகிலைக் கிளப்புகிறார்.

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

இன்னொரு புறம் சிவாஜி ரசிகரான கீரைத் துறை அரிகிருஷ்ணனை சக ரசிகர்கள் எல்லாம், 'அரி திலகம்’ என்று அழைக்கும் அளவுக்குத் தீவிர சிவாஜி ரசிகர். 'எம்.ஜி.ஆர். படத்துக்கு லோ கிளாஸ் டிக்கெட் மட்டும்தான் ஃபுல் ஆகும். ஆனா, நடிகர் திலகம் படத்துக்கு முதல்ல காலியாகுறது ஹை கிளாஸ் டிக்கெட் தான். தியேட்டர்ல சிவாஜி படம் ஓடும்போது, வசனத்தை மட்டும் நிறுத்திட்டு நான் அப் படியே பேசுவேன். பாட்டு வரும் போது, டி.எம்.சௌந்தரராஜ னுக்குப் பதிலா என் குரலுக்குத் தான் சிவாஜி வாயசைப்பாரு. 'காவிரி தந்த தமிழகத்து புதுமணலில் களம் அமைத்து சேர-சோழ-பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்றுபோல் போர்த் தொடுத்துக்கொண்டு இருந்த காலமது...’ என்று தொடங்கி மூச்சுவிடாமல் வசனம் பேசிவிட்டு, ''இது 1956-ல் வெளியான 'ராஜா ராணி’ படத்து வசனம். சிவாஜியைத் தவிர்த்து, உலகத்திலயே இதுவரைக்கும் எந்தக் கொம்பனும் இவ்வளவு நீள வசனத்தை ஒரே மூச்சில் பேசுனது இல்லை'' என்று மார் தட்டுகிறார்.

'நான் அந்தக் காலத்துலயே ஒம்பதாம் வகுப்பு வரைக்கும் படிச்சவண்ணே. சிவாஜினா எனக்கு உசிரு. ஒரு வாரத்துல முழுப் படத்தையும் மனப் பாடம் பண்ணிடுவேன். சிவாஜி நடிச்ச 282 தமிழ்ப் படங்கள்ல 173 படத்தோட சி.டி. வெச்சி ருக்கேண்ணே'' என்று புள்ளி விவரங்களால் புல்லரிக்கவைக்கிறார்.

மதுரையில்... எம்.ஜி.ஆர். Vs சிவாஜி

சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான கணேசனை சந்தித்தோம். 'எங்க தியேட்டரில் ஆடலாம்-பாடலாம், சூடம் காட்டலாம். விசில் அடிக்கலாம், பூ அள்ளி வீச லாம். எதுக்கும் தடை கிடையாது. ஆனா, தியேட்டருக்குள் வேட்டு போடக் கூடாது. பெஞ்ச், சேரை உடைக்கக் கூடாது. பொம்ப ளைங்களுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது. அவ்வளவுதான் நிபந்தனை.

சிவாஜி படங்களை ரிலீஸ் பண்ணி வளர்ந்த தியேட்டர்தான் இது. ஆனா, இன்னிக்கு எம்.ஜி.ஆர். படங்கள்தான் முக்கிய வருமானமே. தேர்தல் சமயத்தில் நல்ல கலெக்ஷன்' என்றார் மகிழ்ச்சியாக!

- கே.கே.மகேஷ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், க.கார்த்திக்