Published:Updated:

தூத்துக்குடி 'சகா'க்கள்!

தூத்துக்குடி 'சகா'க்கள்!

தூத்துக்குடி 'சகா'க்கள்!

தூத்துக்குடி 'சகா'க்கள்!

Published:Updated:
##~##

தூத்துக்குடியில் 'சகா’ கலைக் குழு என்றால், கேட்பவர்களுக்குக் குதூகலம் கிளம்பும். வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் நடத்தும் 'சகா’ கலைக் குழுவினர், தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் மேடை ஏறுகிறார்கள். தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், டிரம்ஸ், ஸ்டாண்ட்-அப் காமெடி, நாடகம், டான்ஸ் என்று சகல தளங்களிலும் கால் பதித்துக் கலை வளர்க்கும் மாணவக் கலைஞர்களைச் சந்தித்தோம்.  கலைக் குழுவின் தலைவர் சங்கர், எம்.ஃபில் மாணவர். ''சின்ன வயசில் இருந்தே எனக்குக் கலை ஆர்வம் அதிகம்.  என் அண்ணன் ஓர் ஒயிலாட்டக் கலை ஞர். ஒருமுறை எய்ட்ஸ், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புப் பற்றிய வீதி நாடகங்களைப் பார்த்தேன். நாமளும் இப்படி நடத்தினா என்னன்னு தோணுச்சு. ஆனா எப்படி, எங்கே இருந்து ஆரம்பிக்கிறதுனு தெரியலை. காலேஜ் சேர்ந்ததும் நிறைய மாணவர்களோட அறிமுகம் கிடைச்சது. ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒவ்வொரு திறமை ஒளிந்து இருந்தது. திறமை உள்ளவங்க ஒண்ணுசேர்ந்தோம். முதல்ல கல்ச்சுரல் போட்டிகளில் கலந்து பரிசு வாங்கினோம். அடுத்தபடியா கலைக் குழு ஆரம்பிச்சோம். குழுவில் இருக்கும் பெரும்பாலான ஸ்டூடன்ட்ஸ் பேர் 'எஸ்’ல ஆரம்பிச்சது. அதனால 'சகா’ன்னு பேர்வெச்சோம்.

தூத்துக்குடி 'சகா'க்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இப்போ எங்க கலைக் குழுவில் 30 சகாக் கள் இருக்காங்க. கலைகளில் கவனம் செலுத்தி னாலும் படிப்பிலும் கவனம் செலுத்துவோம். எங்க ட்ரூப்ல இருக்கும் யாருக்குமே அரியர் கிடையாது. நிகழ்ச்சிகளில் எங்களுக்குக் கிடைக்கும் பணத்தைவெச்சு எங்க படிப்புச் செலவை சரிபண்ணிக்கிறோம். கலைக் குழு வில் இருக்கும் சில மாணவர்கள், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. வருமானத்துக்காக இரவில் மீன் பிடிப்பது, புரோட்டா கடையில்  வேலை செய்றதுனு பார்ட் டைம் வேலை பார்க்கிறாங்க'' என்று பேசி முடித்து இர்வினை அறிமுகப்படுத்துகிறார்.

தூத்துக்குடி 'சகா'க்கள்!

பார்வையற்ற இர்வின் ஒரு மிமிக்ரி கலைஞர். சரோஜாதேவி, நமீதா, கே.ஆர்.விஜயா, பத்மினி, சாவித்ரி, பெப்ஸி உமா, நக்மா, சிநேகா  என்று  ஹீரோயின்கள் மற்றும் டி.வி. பெண் பிரபலங்களின் குரலை

தூத்துக்குடி 'சகா'க்கள்!

அச்சுப்பிசகாமல் அப்படியே பேசிக் காட்டுகிறார். ''என் ஃபேவரைட் வாய்ஸ் பெப்ஸி உமாதான். எந்த ஸ்டேஜ்ல ஏறினாலும் 'பெப்ஸி உமா’ வாய்ஸை ஒன்ஸ் மோர் கேட்பாங்க. என்னால் பார்க்க முடியாது. ஆனா, ஆடியன்ஸ் கை தட்டுறதைக் காது குளிரக் கேட்பேன்!'' என்று சொல்லும்போதே மகிழ்ச்சி முகத்தில் பரவுகிறது.

குழுவின் செயலாளர் சக்திவேல், '' குஜராத்ல நரேந்திரமோடி முன்னாடி பெர்ஃபார்ம் பண்ணினோம். கை கொடுத்துப் பாராட்டியவர், அகமதாபாத்தில் நிகழ்ச்சி நடத்தக் கூப்பிட்டார். நாங்க இவ்வளவு தூரம் வளர்ந்ததுக்கு, கல்லூரி செயலர் ஏ.பி.சீ.வி.சொக்கலிங்கம் மற்றும் முதல்வரும்தான் காரணம். இன்னும் வளருவோம் சார்!'' நம்பிக்கையாகச் சொல்ல, கை தட்டுகிறார்கள் சகாக்கள்!  

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்