Published:Updated:

ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கியது நடிகர் சங்கம்!

விகடன் விமர்சனக்குழு
ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கியது நடிகர் சங்கம்!
ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கியது நடிகர் சங்கம்!
ஜல்லிக்கட்டுக்காக களத்தில் இறங்கியது நடிகர் சங்கம்!

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி சென்னையில் வரும் 20-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் மவுன போராட்டம் நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. அலங்காநல்லூரில் தொடங்கிய எழுச்சிப் போராட்டம் சென்னைக்கும் பரவியது. சென்னை மெரினாவில் நடந்து வரும் போராட்டத்துக்கு நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் இன்று கடிதம் எழுதினார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், பொன் வண்ணன், ஜல்லிக்கட்டுக்காக வரும் 20-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் போராட்டம் மற்றும் மவுனப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த போராட்டத்தில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள் என்றும், மாணவர்களின் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக பின்னிருந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தனர்.