Published:Updated:

கேமிரா காதலன்!

கேமிரா காதலன்!

கேமிரா காதலன்!

கேமிரா காதலன்!

Published:Updated:
##~##

வ்வொரு மனிதருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மீது அதீத ஆர்வம் இருக்கும். ஸ்டாம்ப், அரிய புகைப்படங்கள், கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என ஏதாவது ஒன்றை சேமித்துப் பாதுகாப்பார்கள். சென்னை பைக்ராஃப்ட்ஸ் சாலையில் வசிக்கும் சேகருக்கோ கேமராக்கள் மீது ஆர்வம்.  

300 ஆண்டுகளாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 4,500  கேமராக்களைச் சேகரித்து வைத்து இருக்கிறார். ''அப்பா ஒரு விவசாயி. நடுத்தரக் குடும்பம். எலெக்ட்ரானிக் டிப்ளமோ படித்த எனக்கு, கேமரா மீது ஆரம்பத்தில் இருந்தே அப்படி ஒரு காதல். சென்னையில் கார், ஓவியங்கள், ஸ்டாம்ப்கள் கண்காட்சிகள் நடக்கும். இதேபோல்  கேமராக்களைக்கொண்ட கண்காட்சி நடத்தினால் என்ன?’ எனத் தோன்றியது. அந்த ஆர்வம்தான் பல்வேறு கேமராக்களைத் தேடி நாடு முழுவதும் அலைய வைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேமிரா காதலன்!

அரிய வகை கேமரா வைத்து இருக்கிறார்கள் எனத் தெரிந்தால் மும்பை, காஷ்மீர் என்று சென்று தேடிப்பிடித்து வாங்கி வந்து விடுவேன். கீ கொடுத்தால் படம் பிடிக்கும் அந்தக் கால கேமரா தொடங்கி, விதவிதமான கேமராக்கள் என் கலெக்ஷனில் உள்ளன. இதைத் தவிர 250 வகையான கோடக் கேமராக்கள், ஆரம்பத்தில் குகாகோ என்ற பெயரில் இருந்தது முதல் நிக்கான் என்று பெயர் மாற்றப்பட்ட பிறகான கேமராக்கள், கேனான் என விதவிதமான கம்பெனிகள்... விதவிதமான கேமராக்கள் உள்ளன.  

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கேமரா, சுதந்திரப் போராட்டக் காலத்தில் 'சுதேசமித்திரன்’ பத்திரிகையின் முதன்மை புகைப்படக்காரரான கிருஷ்ணன் பயன்படுத்தியது, சினிமா ஒளிப்பதிவாளர் எல்.வி.பிரசாத் பயன்படுத்திய கேமரா என பிரபலங்கள் பயன்படுத்திய 4,500 கேமராக்களைக்கொண்டு 2001-ம் ஆண்டில் முதன்முதலாக நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கண்காட்சி நடத்தினேன். கல்லூரி மாணவர்கள், புகைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் பாராட்டினார்கள். தொடர்ந்து 2007 வரை ஒவ்வோர் ஆண்டும் கண்காட்சி நடத்தினேன்.

கேமிரா காதலன்!

அதன் பிறகு கண்காட்சி நடத்தும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் எனது இந்த மதிப்பிட முடியாத சேமிப்பிற்கு இடம் கொடுத்து அருங்காட்சியகம் அமைக்க உதவினால் இத்தனை வருடத் தேடலுக்குப் பலன் கிடைத்ததாக சந்தோஷப்படுவேன். இதை ஏலத்தில் விற்றால் ஒவ்வொரு கேமராவும் பல லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்பது உறுதி. ஆனால், எனக்குப் பணம் முக்கியம் இல்லை. 35 வருடங்களாகச் சேமித்துவரும் பொக்கிஷங்களை அழியாமல் பாதுகாப்பதே போதும்!'' என்கிறார்.

கேமிரா காதலன்!

கேமரா சர்வீஸ் செய்து கொடுப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வரும் சேகர், கையில் கணிசமான தொகை கிடைத்தால் கேமரா வாங்கப் பறந்துவிடுவாராம். ''எங்க வீட்ல பொதுவாப் பிரச்னையே வராது. அப்படி வந்தால், அன்று நான் புதுசா கேமரா வாங்கி வந்திருக்கேன்னு அர்த்தம்!'' என்று சிரிப்பவர், ''ஆனால் கேமரா சர்வீஸ் மூலம் பிள்ளைகளை நல்லபடியாப் படிக்கவெச்சு திருமணம் செஞ்சு கொடுத்துட்டேன். என் போன் புக்ல உள்ள பெரும்பாலான நம்பர்கள் அரிய வகை கேமரா வைத்திருப்பவர்கள் பற்றிய தகவல் தரும் நண்பர்களே!''  'ஸ்மைல் ப்ளீஸ்’ புன்னகை பூக்கிறது சேகரின் முகத்தில்.  

- பானுமதி அருணாசலம், படம்: சு.குமரேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism