Published:Updated:

என் ஊர்!

''ரத்னம் அய்யர் கடையும்... பிளேக் மாரியம்மன் கோயிலும்!''

என் ஊர்!

''ரத்னம் அய்யர் கடையும்... பிளேக் மாரியம்மன் கோயிலும்!''

Published:Updated:
##~##

வர் நடித்த படங்கள் 400-க்கும் அதிகம். இயக்கிய படங்கள் 45. துணிச்சலாகத்  தன் அரசியல் நிலைப்பாடுகளை முன்வைக்கும் கலைஞர். தனது சொந்த ஊரான சூலூர் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார் மணிவண்ணன்.

''கோவையில் இருந்து 18 கி.மீ தூரத்தில் இருக் கும் ஊர் சூலூர். விமானப் படைத் தளம்  இருப் பதால் எப்போதும் சூலூரில் விமான விசில்தான்!  ஊரை ஒட்டியே பெரிய குளம், சின்ன குளம் என்று இரண்டு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

குளங்கள் அமைந்து இருக்கும். பெரிய குளத்தில் கரிசல் மண் இருப்பதால் தண்ணீர் கறுப்பு நிறத்தில் மின்னும். சின்ன குளம் செம்மண் நிறத்தில் ஜொலிக்கும். பள்ளிக்கூட நேரம் தவிர, மற்ற அனைத்து நேரமும் அந்த இரண்டு குளங்களில்தான் எங்க ஊர் பசங்களுக்கு பொழுது ஓடும். இந்தக் குளத்து நீரோடு பன்னீர்போல தெளிவாக ஓடும் நொய்யல் ஆற்றுக் குளியலும் என் இளம் பிராயத் துக்கு உரம் சேர்த்தது!

பெரிய குளத்துக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருக்கும். அந்தக் கிணற்றில்தான் ஊர் மக்கள் எல்லோருக்கும் தண்ணீர். குளத்தங்கரையில தாழம்பூ புதர்னு ஒரு இடம். அந்தப் புத ருக்கு அடியில் சுரங்கம் மாதிரியே பாதை போகும். இந்தப் பக்கம் போனா, அந்தப் பக்கம் வெளியே வந்துடலாம்.

சூலூர், அரசு உயர் நிலைப் பள்ளியில்தான் படிச்சேன். எனக்கு முன்னாடி அந்தப் பள்ளியில் நடிகர் சிவகுமார் அண்ணன், கவிஞர் புலமைப்பித்தன்  படிச்சிருக்காங்க. எனக்கு சினிமா மேல் காதல் வருவதற்கு இவர்களும் ஒரு கார ணம். அய்யாச்சாமி, சண்முகம்னு எங்க சொந்தக்கார அண்ணனுங்க ரெண்டு பேருக்கு நாடகம் போடுறதுதான் தொழிலே. அவங்க கூடவே நான் சுத்திட்டு இருப்பேன். அவங்கதான் நாடகத்துக்கு வசனம் எழுதுற வேலையை எனக்கு முதல்ல கொடுத்தாங்க.

தமிழ்நாட்டிலேயே பிளேக் மாரியம்மன் கோயில் என்பது கோவையில்தான் இருந்தது. ஒரு காலத்தில் பிளேக் நோய் தாக்கியபோது, அந்த நோயோட தாக் கத்தில் இருந்து மாரியம்மன்தான் காப்பற்றியதாக மக்கள் நம்பி னாங்க. இப்ப பிளேக் மாரியம்மன் கோயில் நிறைய இடத்தில் இருக்கு. இந்தப் பேரை முதன்முதல்ல சூலூர் மக்கள்தான் வெச்சாங்க. சூலூர்ல ரத்னம் ஐயர் கடையைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல்தான் கடையைத் திறப்பாங்க. ஸ்வீட், காரம், காபி இந்த மூணும் சேர்த்து 50 பைசா வுக்குக் கொடுப்பாங்க. ரத்னம் ஐயர் கடையில் ஸ்வீட், காரம், காபி சாப்பிட்டாலே  கௌரவமா நினைச்ச காலம் அது. அதேபோல திருக்குறள் சீனிவாசன் கடையில் வெள்ளிக்கிழமையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் மட்டும் மதியம் மட்டன் பிரியாணி போடுவாங்க. அந்தக் கடை உரிமையாளர்'திருக் குறள்’ சீனிவாசன் எந்த அதிகா ரத்தில் எந்தக் குறளைக் கேட்டா லும் சரியாச் சொல்வார்.

என் ஊர்!

எங்கப்பா ஆர்.சுப்ரமணியம் அந்தக் காலத்தில் தி.மு.க. கிளைக் கழக செயலாளரா இருந்தார். அத னால், தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் யார் வந்தாலும் எங்க வீட்டில்தான் சாப்பாடு. அண்ணா, கலைஞர், நாஞ்சிலார்னு முக்கியத் தலைவர்கள் எல்லோருமே எங்க வீட்டுல சாப்பிட்டு இருக்காங்க. நான் சென்னைக்கு வந்து இயக்கு நரான பிறகு கலைஞரைச் சந்திச்சு, 'சூலூர் சுப்ரமணியத்தோட பையன்’னு சொல்லி அறிமுகப் படுத்திக்கிட்டப்போ ரொம்ப சந்தோஷப்பட்டார்.

என் ஊர்!

இன்னைக்கு நெல்லும், கரும்பும் விளைஞ்ச தோட்டங்கள் கட்டடங்களா மாறிடுச்சி. இருந்தாலும் மக்களின் அன்பும் மரியாதையும் மாறலை. ரெண்டு மாசத்துக்கு ஒரு முறையாவது ஊருக்குப் போய் சேக்காளிகளைப் பார்த் துட்டு பெரிய குளத்து பக்கத்தில் பத்து நிமிஷமாவது உட்கார்ந்துட்டு வந்தாத்தான் மனசு நிம்மதியா இருக்கும். ஆயிரம் இருந்தாலும் அது அன்னை பூமி இல்லையா!''

- கே.ராஜாதிருவேங்கடம், படங்கள்:கே.ராஜசேகரன், தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism